Gold Rate Chennai: தங்கம் விலையில் தடாலடி மாற்றம் - சவரனுக்கு ரூ.200 உயர்வு!
இன்று மீண்டும் தங்கம் விலை உயர ஆரம்பித்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மீண்டும் தங்கம் விலை உயர ஆரம்பித்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை நிலவரம் (21/11/2023):
வாரத்தின் 2வது நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து நகை வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,705 ரூபாய்க்கும், சவரன் 45,640 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (செவ்வாய் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 25 ரூபாய் உயர்ந்து 5,730 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 45,840 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
அதேபோல், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 25 ரூபாய் உயர்ந்து 6,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 49,600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடந்த 3 நாட்களுக்குப் பிறகு வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 40 காசுகள் உயர்ந்து 79 ரூபாய் 40 காசுகளுக்கும், கிலோவிற்கு 400 ரூபாய் அதிகரித்து 79 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

உயர்வுக்கான காரணம் என்ன?
கார்த்திகை மாதத்தில் திருமண சீசன் தொடங்கியுள்ளதால், தங்கம் அதிகமாக வாங்கப்படுகிறது. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்ததையடுத்து விலையும் உயர ஆரம்பித்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,730 (மாற்றம்: ரூ.30 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.45,840 (மாற்றம்: ரூ.200 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,200 (மாற்றம்: ரூ.30 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.49,600 (மாற்றம்: ரூ.200 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,685 (மாற்றம்: ரூ.35 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.45,480 (மாற்றம்: ரூ.280 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,202 (மாற்றம்: ரூ.38 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.49,616 (மாற்றம்: ரூ.304 உயர்வு)