Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: தங்கம் விலை மாற்றமின்றி சவரன் ரூ.56,480-க்கு விற்பனை

கடந்த சில நாட்களாக புதுப்புது உச்சங்களை கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இப்போது மாற்றமின்றி, சென்னையில் கிராம் விலை ரூ.7,060 ஆகவும், சவரன் விலை ரூ.56,480 ஆகவும் நீடிக்கிறது.

Gold Rate Chennai: தங்கம் விலை மாற்றமின்றி சவரன் ரூ.56,480-க்கு விற்பனை

Thursday September 26, 2024 , 2 min Read

கடந்த சில நாட்களாக புதுப்புது உச்சங்களை கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இப்போது மாற்றமின்றி, சென்னையில் கிராம் விலை ரூ.7,060 ஆகவும், சவரன் விலை ரூ.56,480 ஆகவும் நீடிக்கிறது.

சென்னையில் நேற்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.60 உயர்ந்து ரூ.7,060 ஆகவும், சவரன் விலை ரூ.480 உயர்ந்து ரூ.56,480 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.66 உயர்ந்து ரூ.7,702 ஆகவும், சவரன் விலை ரூ.528 உயர்ந்து ரூ.61,616 ஆகவும் இருந்தது. இந்நிலையில், இப்போது தங்கம் விலையில் மாற்றம் இல்லை என்றாலும் கூட, இதுவே அதிக விலைதான் என்பது நகை வாங்குவோருக்கு கவலை அளிக்கும் தகவலே.

தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (26.9.2024):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.7,060 ஆகவும், சவரன் விலை ரூ.56,480 ஆகவும் மாற்றமின்றி இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.7,702 ஆகவும், சவரன் விலை ரூ.61,616 ஆகவும் மாற்றமின்றி நீடிக்கிறது.

வெள்ளி விலை:

சென்னையில் வியாழக்கிழமை (25.9.2024) 1 கிராம் வெள்ளி விலை 10 பைசா உயர்ந்து ரூ.101.10 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.100 உயர்ந்து ரூ.1,01,100 ஆகவும் விற்பனையாகிறது.

gold

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அண்மையில், அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது. இதனால், தங்கம் மீதான முதலீடு அதிகரிக்கத் தொடங்கியது. உலக அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதுடன், இந்தியாவில் இது பண்டிகை காலம் என்பதால் ஆபரணத் தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளது. இந்தப் போக்கு இப்படியே நீடிக்கும் பட்சத்தில், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.7,500 வரையும், ஒரு சவரன் ரூ.60,000 எனும் அளவுக்கும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,060 (மாற்றம் இல்லை)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.56,480 (மாற்றம் இல்லை)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,702 (மாற்றம் இல்லை)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.61,616 (மாற்றம் இல்லை)

தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan