Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம் - 10 நாளில் ரூ.3,360 உயர்வு...

தங்கம் விலை மீண்டும் மீண்டும் புதிய உச்சத்தை தொட்டு வருவது, நகை வாங்க விழைவோரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.3,360 உயர்ந்துள்ளது அதிர்ச்சிக்கு உரியதாக உள்ளது.

Gold Rate Chennai: தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம் - 10 நாளில் ரூ.3,360 உயர்வு...

Thursday February 06, 2025 , 2 min Read

தங்கம் விலை மீண்டும் மீண்டும் புதிய உச்சத்தை தொட்டு வருவது, நகை வாங்க விழைவோரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.3,360 உயர்ந்துள்ளது அதிர்ச்சிக்கு உரியதாக உள்ளது.

சென்னையில் புதன்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.95 அதிகரித்து ரூ.7,905 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.760 அதிகரித்து ரூ.63,240 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.104 உயர்ந்து ரூ.8,624 ஆகவும், சவரன் விலை ரூ.832 அதிகரித்து ரூ.68,992 ஆகவும் இருந்தது. இப்போது மீண்டும் ஒரு புதிய உச்சம் கண்டுள்ளது தங்கம் விலை.

தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (6.2.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.25 உயர்ந்து ரூ.7,930 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.200 அதிகரித்து ரூ.63,440 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.27 உயர்ந்து ரூ.8,651 ஆகவும், சவரன் விலை ரூ.216 அதிகரித்து ரூ.69,208 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (6.2.2025) 1 கிராம் வெள்ளி விலை 10 பைசா உயர்ந்து ரூ.107.10 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.100 உயர்ந்து ரூ.1,07,100 ஆகவும் விற்பனை ஆகிறது.

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டு வருகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட சர்வதேச சந்தைப் போக்குகளின் எதிரொலியாக, தற்போதைய சூழலில் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நோக்கி மக்கள் நகர்ந்துள்ளனர்.

gold

சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து வரும் சூழலில், மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி வெகுவாக குறைக்கப்படும், என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தங்கம் மீதான இறக்குமதி வரி எதிர்பார்த்த அளவுக்கு குறைக்கப்படாததால் தற்போது வரலாறு காணாத விலை உயர்வு நிலவுவதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,930 (ரூ.25 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.63,440 (ரூ.200 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,651 (ரூ.27 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.69,208 (ரூ.216 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan