Gold Rate Chennai: உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை; கிடுகிடு உயர்வுக்கு காரணம் என்ன?
மீண்டும் தங்கம் விலை கிடுகிடுவென உயர ஆரம்பித்துள்ளது நகை வாங்க காத்திருந்தோரை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
மீண்டும் தங்கம் விலை கிடுகிடுவென உயர ஆரம்பித்துள்ளது நகை வாங்க காத்திருந்தோரை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை நிலவரம் (24/03/2023)
இந்த வாரத்தில் ஒரே ஒருமுறையாக அதிரடியாக சவரனுக்கு 800 ரூபாய் குறைந்த தங்கம் விலை, தொடர்ந்து இரண்டு நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து நகைப்பிரியர்களையும், நடுத்தர குடும்பத்தினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,540 ரூபாய்க்கும், சவரன் 44,320 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (வெள்ளி கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து 5,560 ரூபாயாகவும், சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 44,480 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 20 ரூபாய் அதிகரித்து 6,091 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 48,728 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போலவே இன்று வெள்ளியின் விலையும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 30 காசுகள் அதிகரித்து 75 ரூபாய் 70 காசுகளுக்கும், ஒரு கிலோவிற்கு 300 ரூபாய் அதிகரித்து 75 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
தொடர் உயர்வுக்கான காரணம் என்ன?
அமெரிக்க ஃபெடரல் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்ந்துள்ளது டாலர் குறியீட்டு எண்ணை சரிவுக்கு தள்ளியுள்ளது. எனவே முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீடுகளை அதிகரித்துள்ளனர். இதனால் வரலாறு காணாத அளவிற்கு தங்கம், வெள்ளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. டாலரின் மதிப்பு தொடர்ந்து சரியும் பட்சத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,560 (மாற்றம்: ரூ.20 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,480 (மாற்றம்: ரூ.160 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,091 (மாற்றம்: ரூ.20 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,728 (மாற்றம்: ரூ.160 அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,500 (மாற்றம்: ரூ.20 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,000 (மாற்றம்: ரூ.160 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,000 (மாற்றம்: ரூ.22 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,000 (மாற்றம்: ரூ.176 அதிகரிப்பு)