Gold Rate Chennai: வெள்ளி விலையே இவ்வளவா? அப்போ இன்று தங்கம் விலை என்ன?
கடந்த வார இறுதி முதலே சரசரவென சரிந்து வந்த தங்கம் விலை, நேற்றைப் போலவே இன்றும் அதிகரித்துள்ளது இல்லத்தரசிகளையும், நடுத்தர குடும்ப மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த வார இறுதி முதலே சரசரவென சரிந்து வந்த தங்கம் விலை, நேற்றைப் போலவே இன்றும் அதிகரித்துள்ளது இல்லத்தரசிகளையும், நடுத்தர குடும்ப மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 4,936 ரூபாய்க்கும், சவரன் 39,488 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (வியாழன் கிழமை), 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 19 ரூபாய் அதிகரித்து 4,955 ரூபாயாகவும், சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து 39,640 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 19 ரூபாய் அதிகரித்து 5,357 ரூபாய்க்கும், சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து 42,856 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக எவ்வித மாற்றமும் இன்றி சைலண்டாக இருந்த வெள்ளி விலை இன்று யாருமே எதிர்பாராத அளவிற்கு உயர்ந்துள்ளது நுகர்வோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெள்ளியைப் பொறுத்தவரை கிராமிற்கு ஒரு ரூபாய் 80 காசுகள் வரை உயர்ந்து 69.80 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,800 ரூபாய் அளவிற்கு உயர்ந்து 69,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
நவம்பர் மாதம் வெளியான அமெரிக்க வேலை வாய்ப்பு தரவு தங்கத்தின் விலையை உயர்த்த மிக முக்கியக் காரணமாக அமைந்தது. இதனால் கடந்த மாதம் மட்டும் 7 சதவீதம் வரை அதிகரித்துள்ளது நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன் தொடர்ச்சி டிசம்பர் மாதத்திலும் நீடிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவரான மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் எச். பவல், ஃபெடரல் வங்கி வட்டி விகித உயர்வின் அளவை குறைக்க திட்டமிட்டு வருவதாகவும், ஆனால், பொருளாதாரம் நிலையான நிலைக்கு திரும்பும் வரை மக்களின் கடன் செலவுகள் அதிகரிக்கும் என்றும் கூறினார்.
இது வரவிருக்கும் கொள்கைக் கூட்டங்களில் சிறிய கட்டண உயர்வு எதிர்பார்ப்பை உறுதிப்படுத்தியது. இதனால் டாலர் குறியீட்டு எண்ணின் மதிப்பு குறைந்ததை அடுத்து தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 4,955 (மாற்றம்: ரூ.19 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.39,640 (மாற்றம்: ரூ.152 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,357 (மாற்றம்: ரூ.19 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 42,856 (மாற்றம்: ரூ.152 அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.4,855 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.38,840 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,297 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,304 (மாற்றமில்லை)