Gold Rate Chennai: வார இறுதி நிலவரம்: தங்கம் விலையில் ஏற்றமா? இறக்கமா?

வார இறுதி நாளான இன்றும் தங்கம் சரிவுடன் விற்பனையாகி வருகிறது.

Gold Rate Chennai: வார இறுதி நிலவரம்: தங்கம் விலையில் ஏற்றமா? இறக்கமா?

Saturday May 27, 2023,

2 min Read

வார இறுதி நாளான இன்றும் தங்கம் சரிவுடன் விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை நிலவரம் (27/05/2023)

தொடர்ந்து 3வது நாளாக தங்கத்தின் விலை சரிய ஆரம்பித்துள்ளது நகை வாங்கக் காத்திருந்தவர்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.

நேற்றைய வர்த்தகத்தின் போது தங்கத்தின் விலை கிராமிற்கு 5,625 ரூபாயாகவும், சவரனுக்கு 45,000 ரூபாயாகவும் இருந்தது.

சென்னையில் இன்றைய நிலவரப்படி, (சனிக்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 5,600 ரூபாயாகவும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 44,800 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 6,070 ரூபாயாகவும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 48,560 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் இன்று கணிசமான அளவு குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு 80 காசுகள் குறைந்து 77 ரூபாய்க்கும் கிலோவிற்கு 800 ரூபாய் குறைந்து 76 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

சரிவுக்கான காரணம் என்ன?

அமெரிக்க டாலரின் மதிப்பும், கருவூல வருவாயும் அதிகரித்து வருவது தங்கத்தின் விலையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை குறைந்திருப்பதும் விலை சரிய முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

gold

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,600 (மாற்றம்: ரூ.5 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,800 (மாற்றம்: ரூ.40 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,070 (மாற்றம்: ரூ.5 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,560 (மாற்றம்: ரூ.40 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,555 (மாற்றம்: ரூ.10 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,440 (மாற்றம்: ரூ.80 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,060 (மாற்றம்: ரூ.11 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,480 (மாற்றம்: ரூ.88 குறைவு)