Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: வார இறுதியில் எகிறிய தங்கம் விலை; சவரனுக்கு ரூ.640 உயர்வு!

கடந்த சில நாட்களாகவே சரிந்து வந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக அதிகரித்துள்ளது. சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்துள்ளது நடுத்தர மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

Gold Rate Chennai: வார இறுதியில் எகிறிய தங்கம் விலை; சவரனுக்கு ரூ.640 உயர்வு!

Saturday March 11, 2023 , 2 min Read

வாரத்தின் தொடக்கத்தில் சரிந்து வந்த தங்கம் விலை இப்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் அதிரடியாக விலை உயர்ந்துள்ளது பலரையும் கலக்கம் அடைய வைத்துள்ளது.

தங்கம் விலை நிலவரம் (11/03/2023)

நடப்பு வாரத்தில் தொடர்ந்து 4 நாட்களாக தங்கம் விலை சரிந்து வந்த நிலையில், நேற்று முதல் மீண்டும் உயரத் தொடங்கியது. வாரக்கடைசி நாளான இன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,190 ரூபாய்க்கும், சவரன் 41,520 ரூபாய்க்கும் விற்பனையானது.

இன்றைய நிலவரப்படி, (சனிக்கிழமை), 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்து 5,270 ரூபாயாகவும், சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து 42,160 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 80 ரூபாய் அதிகரித்து 5,632 ரூபாய்க்கும், சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து 45,056 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு ஒரு ரூபாய் 40 காசுகள் உயர்ந்து 68 ரூபாய் 70 காசுகளுக்கும், ஒரு கிலோவிற்கு 1,400 ரூபாய் உயர்ந்து 68 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

gold

தொடர் உயர்வுக்கான காரணம் என்ன?

அமெரிக்க தொழிலாளர் தரவுகளின் படி, ஊதிய வளர்ச்சி சற்றே அதிகரித்துள்ளது பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. இதனால் அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைவான அளவே உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுவதால் டாலர் மீதான முதலீடுகள் குறைந்து, அதன் மதிப்பு சரிந்தது. இதனால் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் திரும்பியுள்ளது. மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் 10 கிராமுக்கு 829 ரூபாய் உயர்ந்து ரூ.56,130 ஆக உயர்ந்தது.

முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,270 (மாற்றம்: ரூ.80 அதிகரிப்பு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,160 (மாற்றம்: ரூ.640 அதிகரிப்பு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,632 (மாற்றம்: ரூ.80 அதிகரிப்பு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 45,056 (மாற்றம்: ரூ.640 அதிகரிப்பு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,215 (மாற்றம்: ரூ.75 அதிகரிப்பு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.41,720 (மாற்றம்: ரூ.600 அதிகரிப்பு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,689 (மாற்றம்: ரூ.54 அதிகரிப்பு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 45,512 (மாற்றம்: ரூ.432 அதிகரிப்பு)