Gold Rate Chennai: தங்கம் வாங்க தயாரா..? - சவரனுக்கு ரூ.800 குறைவு!
கடந்த சில நாட்களாகவே கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சரசரவென குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சரசரவென குறைந்துள்ளது. தங்கம் வாங்க விரும்புவோர் உடனே கடைக்குச் செல்லும் அளவுக்கு உந்துதலை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை நிலவரம் (22/03/2023)
கடந்த சில நாட்களாகவே கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கம் விலை உச்சபட்சமாக சவரனுக்கு 44 ஆயிரத்து 500 ரூபாயைக் கடந்து விற்பனையானது. இதனால் இனி தங்கம் வாங்க முடியுமா என நகைப் பிரியர்கள் தவித்து வந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் கடந்த வார இறுதி வர்த்தகத்தின்போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,470 ரூபாய்க்கும், சவரன் 44,560 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (புதன்கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 5,470 ரூபாயாகவும், சவரனுக்கு 800 ரூபாய் சரிந்து 43,760 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 100 ரூபாய் சரிந்து 6,010 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 48,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போலவே இன்று வெள்ளியின் விலையும் கணிசமான அளவு குறைந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 70 காசுகள் குறைந்து 74 ரூபாய்க்கும், ஒரு கிலோவிற்கு 700 ரூபாய் குறைந்து 74 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
திடீர் சரிவுக்கான காரணம் என்ன?
அமெரிக்கா மற்றும் சுவிஸ் நாட்டு வங்கிகளில் ஏற்பட்ட நெருக்கடி நிலை சரி செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் பங்குச்சந்தை மீது திரும்பியுள்ளது. இதனால் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,470 (மாற்றம்: ரூ.100 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.43,760 (மாற்றம்: ரூ.800 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,010 (மாற்றம்: ரூ.100 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,080 (மாற்றம்: ரூ.800 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,420 (மாற்றம்: ரூ.80 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.43,360 (மாற்றம்: ரூ.640 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,913 (மாற்றம்: ரூ.87 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 47,304 (மாற்றம்: ரூ.696 குறைவு)