Gold Rate Chennai: ஆரம்பமே அதிரடி - மக்களை ‘ஏப்ரல் ஃபூல்’ செய்யாத தங்கம் விலை!
வார இறுதி நாளான இன்று தங்கத்தின் விலை தடாலடியாக குறைந்துள்ளது நகை வாங்க காத்திருந்தோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வார இறுதி நாளான இன்று தங்கத்தின் விலை தடாலடியாக குறைந்துள்ளது நகை வாங்க காத்திருந்தோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை நிலவரம் (01/04/2023)
கடந்த சில வாரங்களாகவே கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கம் விலை ஏப்ரல் மாத தொடக்கமான இன்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் குறைந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் 5,590 ரூபாய்க்கும், சவரன் 44,720 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (சனிக்கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 5,560 ரூபாயாகவும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 44,480 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 30 ரூபாய் குறைந்து 6,014 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 48,112 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு 20 காசுகள் அதிகரித்து 77 ரூபாய் 70 காசுகளுக்கும், கிலோவிற்கு 200 ரூபாய் அதிகரித்து 77 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
சரிவுக்கான காரணம் என்ன?
அமெரிக்க கருவூல விளைச்சல் குறைந்தது டாலர் மதிப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இதனால் டாலரின் மதிப்பு உயர ஆரம்பித்துள்ளது தங்கத்தின் மீதான முதலீடுகளை குறைந்துள்ளதால், விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,560 (மாற்றம்: ரூ.30 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,480 (மாற்றம்: ரூ.240 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,014 (மாற்றம்: ரூ.30 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,112 (மாற்றம்: ரூ.240 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,550 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,000 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,000 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,000 (மாற்றமில்லை)