Gold Rate Chennai: 43 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை; இன்றும் கிடுகிடு உயர்வு!
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் விலை உயரத் தொடங்கியுள்ளது நகை வாங்க காத்திருப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் விலை உயரத் தொடங்கியுள்ளது நகை வாங்கக் காத்திருப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை நிலவரம் (24/01/2023)
கடந்த வாரத்தின் இறுதியில் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், நேற்று முதலே மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இன்று உச்சகட்டமாக ஒரே நாளில் கிராமிற்கு 32 ரூபாய் அளவிற்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது. இனி தங்கம் வாங்க முடியுமா? என்ற அச்சத்தை நடுத்தர மக்களிடையே உருவாக்கியுள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,355 ரூபாய்க்கும், சவரன் 42,840 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (செவ்வாய் கிழமை), 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 32 ரூபாய் அதிகரித்து 5,355 ரூபாயாகவும், சவரனுக்கு 256 ரூபாய் அதிகரித்து 42,840 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 32 ரூபாய் அதிகரித்து 5,717 ரூபாய்க்கும், சவரனுக்கு 256 ரூபாய் அதிகரித்து 45,736 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போல் அல்லாமல் வெள்ளியின் விலை இன்று கணிசமான அளவு குறைந்துள்ளது மக்களை சற்றே நிம்மதி அடைய வைத்துள்ளது. வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 70 காசுகள் குறைந்து 74 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 700 ரூபாய் குறைந்து 74 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதும், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவின் பெடரல் வங்கி குறைவான அளவிலேயே வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்பதும் தங்கத்தின் மீதான முதலீடுகளை அதிகரித்து வருகிறது.
முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை தங்கம் தற்போது பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதால் அதன் மீதான முதலீடு அதிகரிக்க, அதிகரிக்க விலையும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,355 (மாற்றம்: ரூ.32 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.45,736 (மாற்றம்: ரூ.256 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,717 (மாற்றம்: ரூ.32 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 45,736 (மாற்றம்: ரூ.256 அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,270 (மாற்றம்: ரூ.35 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,160 (மாற்றம்: ரூ.280 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,749 (மாற்றம்: ரூ.38 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 45,992 (மாற்றம்: ரூ.304 அதிகரிப்பு)