Gold Rate Chennai: சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து தொடர்ந்து ஏற்றத்தில் தங்கம் விலை!

தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவது நகை வாங்க காத்திருப்போரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

Gold Rate Chennai: சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து தொடர்ந்து ஏற்றத்தில் தங்கம் விலை!

Friday March 31, 2023,

2 min Read

தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவது நகை வாங்க காத்திருப்போரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

தங்கம் விலை நிலவரம் (31/03/2023)

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இன்று வரலாறு காணாத உச்சமாக தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 44,720 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தின் கிடுகிடு விலை உயர்வு நகை வாங்க காத்திருப்போரையும், நடுத்தர மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,565 ரூபாய்க்கும், சவரன் 44,520 ரூபாய்க்கும் விற்பனையானது.

இன்றைய நிலவரப்படி, (வெள்ளி கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து 5,590 ரூபாயாகவும், சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 44,720 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 11 ரூபாய் குறைந்து 6,027 ரூபாய்க்கும், சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து 48,216 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு ஒரு ரூபாய் 30 காசுகள் அதிகரித்து 77 ரூபாய் 50 காசுகளுக்கும், கிலோவிற்கு ஆயிரத்து 300 ரூபாய் அதிகரித்து 77 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

gold rate

தொடர் உயர்வுக்கான காரணம் என்ன?

அமெரிக்க டாலரின் மதிப்பு 102 ரூபாய்க்கும் கீழாக சரிந்துள்ளது தங்கத்தின் மீதான முதலீடுகளை அதிகரித்து வருகிறது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை $2,072 டாலர்களாக உயர்ந்துள்ளது. எனவே சர்வதேச அளவில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,590 (மாற்றம்: ரூ.25 அதிகரிப்பு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,720 (மாற்றம்: ரூ.200 அதிகரிப்பு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,027 (மாற்றம்: ரூ.11 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,216 (மாற்றம்: ரூ.88 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,550 (மாற்றம்: ரூ.30 அதிகரிப்பு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,000 (மாற்றம்: ரூ.240 அதிகரிப்பு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,000 (மாற்றம்: ரூ.33 அதிகரிப்பு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,000 (மாற்றம்: ரூ.264 அதிகரிப்பு)