Gold Rate Chennai: இனி நகை வாங்க முடியுமா? ஷாக் அடிக்கும் தங்கம் விலை!
கடந்த சில நாட்களாகவே சரிந்து வந்த தங்கத்தின் விலை நேற்று முதல் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்து நகை வாங்க காத்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே சரிந்து வந்த தங்கத்தின் விலை நேற்று முதல் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்து நகை வாங்க காத்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 4,931 ரூபாய்க்கும், சவரன் 39,448 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (வெள்ளி கிழமை), 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 4 ரூபாய் அதிகரித்து 4,935 ரூபாயாகவும், சவரனுக்கு 32 ரூபாய் அதிகரித்து 39,480 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 4 ரூபாய் அதிகரித்து 5,337 ரூபாய்க்கும், சவரனுக்கு 32 ரூபாய் அதிகரித்து 42,696 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தாலும் வெள்ளியின் விலை சற்றே குறைந்து நகைப்பிரியர்களை ஆறுதல் அடைய வைத்துள்ளது. வெள்ளியின் விலை கிராமிற்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் 68 ரூபாய்க்கும், கிலோவிற்கு 200 ரூபாய் குறைந்து , ஒரு கிலோ 68,000 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
அமெரிக்க பணவீக்கம் ஓரளவிற்கு குறைந்திருந்தாலும் கடந்த அமர்வின் போது ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் தொடர்பாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவு தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பரில் வங்கி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அளவிற்கு உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனால் டாலரின் மதிப்பு சரியத் தொடங்கியது. இதனையடுத்து முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது திரும்பியது விலை உயர்வுக்கான காரணமாக அமைந்துள்ளது.
சர்வதேச கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 0.5 சதவீதம் அதிகரித்து 1753.47 டாலர்களுக்கு மேலாக காணப்படுகின்றது.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 4,935 (மாற்றம்: ரூ.4 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.39,480 (மாற்றம்: ரூ.32 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,337 (மாற்றம்: ரூ.4 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 42,696 (மாற்றம்: ரூ.32அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.4,855 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.38,840 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,297 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,376 (மாற்றமில்லை)