Gold Rate Chennai: தொடர்ந்து சரியும் தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன?

By Kani Mozhi
September 22, 2022, Updated on : Thu Sep 22 2022 07:01:59 GMT+0000
Gold Rate Chennai: தொடர்ந்து சரியும் தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன?
கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து தங்கத்தின் விலை சரிந்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து தங்கத்தின் விலை சரிந்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் 4,640 ரூபாய்க்கும், சவரன் 37,200 ரூபாய்க்கும் விற்பனையானது.

இன்றைய நிலவரப்படி, (வியாழக்கிழமை), 22 காரட் ஆபரணம் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 4,640 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 37,120 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
gold

இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 11 ரூபாய் குறைந்து 5,062 ரூபாய்க்கும், சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து 40,496 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 20 காசுகள் அதிகரித்து 62.40 ரூபாயாகவும், கிலோவிற்கு 200 ரூபாய் அதிகரித்து 62400 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.


காரணம்: அமெரிக்க பெடரல் வங்கி மூன்றாவது முறையாக அதன் பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தை 75 புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது, தங்கத்தின் விலை குறைக்க காரணமாக அமைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பாண்ட் மற்றும் பங்குச்சந்தை முதலீடுகள் லாபம் தரக்கூடும் என்பதால் முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்றுவிட்டு, அதில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் தங்கத்தின் தேவை குறைந்துள்ளது.


முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:


தங்கம் விலை @ சென்னை


> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 4,640 (மாற்றம்: ரூ.10 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.37,120 (மாற்றம்: ரூ.80 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,062 (மாற்றம்: ரூ. 11 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 40,496 (மாற்றம்: ரூ.88 குறைவு)


தங்கம் விலை @ மும்பை


> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.4,600 (மாற்றம்: ரூ.20 அதிகரிப்பு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.36,800 (மாற்றம்: ரூ. 160 அதிகரிப்பு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,020 (மாற்றம்: ரூ. 24 அதிகரிப்பு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.40,160 (மாற்றம்: ரூ. 192 அதிகரிப்பு)

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற