Gold Rate Chennai: தங்கம் விலை கிடுகிடு உயர்வு; இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 2வது நாளாக அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் 4,4775 ரூபாய்க்கும், சவரன் 38,200 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (புதன் கிழமை), 22 காரட் ஆபரணம் தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து 4,835 ரூபாயாகவும், சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து 38,680 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 60 ரூபாய் உயர்ந்து 5,237 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து 41,896 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி கிராமிற்கு 30 காசுகள் அதிகரித்து 67 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 300 ரூபாய் அதிகரித்து 67000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காரணம்: அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் மீதான விளைச்சல் கடுமையான சரிவை சந்தித்தது தங்கம் மீதான முதலீட்டை அதிகரிக்க வைத்துள்ளது. மேலும் நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகை கால தேவை காரணமாகவும் இந்தியாவில் சில்லறை வர்த்தகத்திற்கான தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 4,835 (மாற்றம்: ரூ. 60 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.38,680 (மாற்றம்: ரூ. 480 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,237 (மாற்றம்: ரூ. 60 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 41,896 (மாற்றம்: ரூ.480 அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.4,735 (மாற்றம்: ரூ.50 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.37,880 (மாற்றம்: ரூ.400 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,166 (மாற்றம்: ரூ.55 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 41,328 (மாற்றம்: ரூ.440 அதிகரிப்பு)