Gold Rate Chennai: சரிவுடன் தொடங்கிய தங்கம் விலை; சவரன் எவ்வளவு?

By Kani Mozhi
September 21, 2022, Updated on : Wed Sep 21 2022 05:47:06 GMT+0000
Gold Rate Chennai: சரிவுடன் தொடங்கிய தங்கம் விலை; சவரன் எவ்வளவு?
கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று சரிந்துள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று சரிந்துள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் 4,630 ரூபாய்க்கும், சவரன் 37,040 ரூபாய்க்கும் விற்பனையானது.

இன்றைய நிலவரப்படி, (புதன் கிழமை), 22 காரட் ஆபரணம் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 4,620 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 36,960 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 11 ரூபாய் குறைந்து 5,040 ரூபாய்க்கும், சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து 40,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

gold

வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி, நேற்றைப் போலவே கிராம் 61.80 ரூபாய்க்கும், ஒரு கிலோ 61,800 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.


காரணம்: அமெரிக்க பெடரல், இன்று அதன் இரண்டு நாள் கொள்கைக் கூட்டத்தின் முடிவில், வட்டி விகிதங்களை 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஃபிக்சட் டெபாசிட், பாண்ட் போன்ற பிற முதலீடுகளின் வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தங்கத்தின் மீதான முதலீடு தொடர்ந்து குறைந்து வருகிறது.


முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:

தங்கம் விலை @ சென்னை


> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 4,620 (மாற்றம்: ரூ.10 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.36,960 (மாற்றம்: ரூ.80 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,040 (மாற்றம்: ரூ. 11 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 40,320 (மாற்றம்: ரூ.88 குறைவு)


தங்கம் விலை @ மும்பை


> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.4,580 (மாற்றம்: ரூ.15 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.36,640 (மாற்றம்: ரூ. 120 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.4,996 (மாற்றம்: ரூ. 17 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.39,968 (மாற்றம்: ரூ. 136 குறைவு)