Gold Rate Chennai: கை நழுவிய பொன்னான வாய்ப்பு; ஒரே நாளில் உயர்ந்த தங்கம் விலை!
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை மெல்ல, மெல்ல குறைந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் கிராமிற்கு 35 ரூபாய் வரை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை மெல்ல, மெல்ல குறைந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் கிராமிற்கு 35 ரூபாய் வரை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் (20/01/2023)
சமீபத்தில் பொங்கல் பண்டிகையின் போது கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை, அதன் பின்னர் சில நாட்களுக்கு 10 ரூபாய், 5 ரூபாய் என மெல்ல, மெல்ல சரிந்து வந்தது. இதனால் நகை வாங்க காத்திருப்போரும், நடுத்தர மக்களுக்கும் மகிழ்ச்சி அடைந்த நிலையில், இன்று தடாலடியாக தங்கம் விலை உயர்ந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,290 ரூபாய்க்கும், சவரன் 42,320 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (வெள்ளி கிழமை), 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து 5,325 ரூபாயாகவும், சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து 42,600 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 35 ரூபாய் அதிகரித்து 5,687 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து 45,496 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலை கிராமிற்கு ஒரு ரூபாய் அதிகரித்து 74 ரூபாய் 50 காசுகளும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 1000 ரூபாய் அதிகரித்து 74ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
அதிகரிப்புக்கான காரணம் என்ன?
அமெரிக்க ரிசர்வ் வங்கி குறைவான அளவிலேயே வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாலும், டாலர் மதிப்பு மீண்டும் உயர்ந்து வருவது தங்கத்தின் மீதான முதலீட்டிற்கு பாதகமாக அமைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக சரிந்து வந்த தங்கத்தின் விலை, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,325 (மாற்றம்: ரூ.35 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,600 (மாற்றம்: ரூ.40 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,687 (மாற்றம்: ரூ.5 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 45,496 (மாற்றம்: ரூ.40 அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,235 (மாற்றம்: ரூ.35 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.41,880 (மாற்றம்: ரூ.280 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,711 (மாற்றம்: ரூ.38 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 45,384 (மாற்றம்: ரூ.304 அதிகரிப்பு)