Gold Rate Chennai: நகை வாங்க நல்ல சான்ஸ்; இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 சரிவு!
இன்று தங்கத்தின் விலை யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு தடாலடியாக குறைந்துள்ளது.
இன்று தங்கத்தின் விலை யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு தடாலடியாக குறைந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் (03/02/2023)
கடந்த இரண்டு தினங்களாக தங்கத்தின் விலை கிடுகிடுவென அதிகரித்து வந்த நிலையில், இன்று நகை வாங்க காத்திருப்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக சவரனுக்கு 520 ரூபாய் வரை குறைந்துள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,505 ரூபாய்க்கும், சவரன் 44,040 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (வெள்ளி கிழமை), 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து 5,440 ரூபாயாகவும், சவரனுக்கு 520 ரூபாய் குறைந்து 43,520 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 65 ரூபாய் குறைந்து 5,802 ரூபாய்க்கும், சவரனுக்கு 520 ரூபாய் குறைந்து 46,416 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலையை போலவே கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த வெள்ளியின் விலையும் இன்று அதிரடியாக குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமிற்கு ஒரு ரூபாய் 40 காசுகள் குறைந்து 76 ரூபாய் 40 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,400 ரூபாய் குறைந்து ஒரு கிலோ 76 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
சரிவுக்கான காரணம் என்ன?
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியதைத் தொடர்ந்து டாலரின் மதிப்பு உயரத் தொடங்கியுள்ளது. இதனால் முதலீட்டாளர்களின் கவனம் டாலர் மீது திரும்பியுள்ளதை அடுத்து, தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்துள்ளன. இதனால் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,440 (மாற்றம்: ரூ.65 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.43,520 (மாற்றம்: ரூ.520 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,802 (மாற்றம்: ரூ.65 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 46,416 (மாற்றம்: ரூ.520 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,310 (மாற்றம்: ரூ.50 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,480 (மாற்றம்: ரூ.400 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,793 (மாற்றம்: ரூ.54 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 46,344 (மாற்றம்: ரூ.432 குறைவு)