Gold Rate Chennai; இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்த தங்கம் விலை!
வாரத்தின் கடைசி நாளான இன்று சவரனுக்கு 160 ரூபாய் வரை சரசரவென சரிந்துள்ளது.
வாரத்தின் கடைசி நாளான இன்று சவரனுக்கு 160 ரூபாய் வரை சரசரவென சரிந்துள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் 4,670 ரூபாய்க்கும், சவரன் 37,360 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (சனிக்கிழமை), 22 காரட் ஆபரணம் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 4,650 ரூபாயாகவும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 37,200 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 22 ரூபாய் குறைந்து 5,073 ரூபாய்க்கும், சவரனுக்கு 176 ரூபாய் வரை குறைந்து 40,584 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலையைப் பொறுத்தவரை கிராமிற்கு 1 ரூபாய் வரை குறைந்து 61.50 ரூபாயாகவும், கிலோவிற்கு 1000 ரூபாய் சரிந்து 61,500 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.
காரணம்: கடந்த புதன்கிழமை அன்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி 75 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதனால் டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தை விட டாலர்கள் மீது திரும்பியுள்ளது, தங்கத்தின் விலையில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 4,650 (மாற்றம்: ரூ.20 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.37,360 (மாற்றம்: ரூ.160 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5, 073 (மாற்றம்: ரூ. 22 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 40,584 (மாற்றம்: ரூ.176 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.4,600 (மாற்றம்: ரூ.50 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.36, 800 (மாற்றம்: ரூ. 400 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,020 (மாற்றம்: ரூ. 53 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.40,160 (மாற்றம்: ரூ. 424 குறைவு)