Gold Rate Chennai: நகை வாங்க காத்திருப்போருக்கு பேரதிர்ச்சி; 44 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!
இன்று தங்கத்தின் யாருமே எதிர்பாராத அளவிற்கு தடாலடியாக சவரனுக்கு60 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.
இன்று தங்கத்தின் விலை யாருமே எதிர்பாராத அளவிற்கு தடாலடியாக சவரனுக்கு 60 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் (02/02/2023)
நேற்றே சற்றே அதிகரித்த தங்கம் விலை இன்று யாருமே எதிர்பாராத அளவிற்கு உயர்ந்து 43 ஆயிரத்தைக் கடந்து விற்பனையாகி வருகிறது. விரைவில் தங்கம் விலை சவரனுக்கு 44 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை பதிவு செய்ய உள்ளது நகை வாங்க காத்திருந்த நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் கடந்த வார வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,415 ரூபாய்க்கும், சவரன் 43,320 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (வியாழன் கிழமை), இன்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்து 5,475 ரூபாயாகவும், சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து 43,800 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 60 ரூபாய் அதிகரித்து 5,837 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து 46,696 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலையை போலவே இன்று வெள்ளியின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமிற்கு ஒரு ரூபாய் 30 காசுகள் அதிகரித்து 77 ரூபாய் 30 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,300 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 77 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளை மட்டுமே உயர்ந்துள்ளது. இதனால் டாலர் மற்றும் பாண்ட் குறியீட்டில் மிகப்பெரிய லாபம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகிறது.
மேலும், நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி, வைரம் மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டதும் உள்நாட்டில் தங்கம் விலை அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளது.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,475 (மாற்றம்: ரூ.60 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.43,800 (மாற்றம்: ரூ.480 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,837 (மாற்றம்: ரூ.60 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 46,696 (மாற்றம்: ரூ.480 அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,360 (மாற்றம்: ரூ.60 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,880 (மாற்றம்: ரூ.480 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,847 (மாற்றம்: ரூ.65 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 46,776 (மாற்றம்: ரூ.520 அதிகரிப்பு)