Gold Rate Chennai: மறுபடியும் முதல்ல இருந்தா? மெல்ல, மெல்ல உயரும் தங்கம் விலை!
நேற்று அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சவரனுக்கு 35 ரூபாய் வரை சரிந்த தங்கம் விலை தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நேற்று அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சவரனுக்கு 35 ரூபாய் வரை சரிந்த தங்கம் விலை தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தங்கம் விலை நிலவரம் (28/01/2023)
ஜனவரி மாதத்தின் கடைசி வாரமான தற்போது தங்கத்தின் விலை கிடுகிடுவென ஏறுவதும், சரசரவென இறங்குவதுமாக போக்கு காட்டி வருகிறது. வார இறுதி நாளான இன்று தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது நகை வாங்கக் காத்திருந்தவர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,345 ரூபாய்க்கும், சவரன் 42,800 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (சனிக்கிழமை), 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 5,350 ரூபாயாகவும், சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 42,800 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 5 ரூபாய் அதிகரித்து 5,712 ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 45,696 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ள போதும் வெள்ளியின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமிற்கு 40 காசுகள் குறைந்து 74 ரூபாய் 20 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 400 ரூபாய் குறைந்து ஒரு கிலோ 74 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
சரிவுக்கான காரணம் என்ன?
அமெரிக்க டாலர் குறியீட்டு எண், கருவூல விளைச்சலில் ஏற்பட்ட சரிவு மற்றும் ஃபெடரல் வங்கி மிகக்குறைந்த அளவிலான வட்டியை உயர்த்த உள்ளதும், தங்கம் மீதான முதலீடுகள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
2023ம் ஆண்டுக்கான முதல் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் கூட்டம் மற்றும் இந்தியாவின் மத்திய பட்ஜெட் தாக்குதல் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது. இந்த இரண்டு காரணிகளும் முறையே சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,350 (மாற்றம்: ரூ.5 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,800 (மாற்றம்: ரூ.40 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,712 (மாற்றம்: ரூ.5 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 44,880 (மாற்றம்: ரூ.40 அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,343 (மாற்றம்: ரூ.60 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,744 (மாற்றம்: ரூ.480 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,610 (மாற்றம்: ரூ.63 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 45,816 (மாற்றம்: ரூ.504 குறைவு)