Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

20 லட்சம் பட்டியலிடப்பட்ட ஜாப்ஸ்: கூகிளின் வேலைவாய்ப்பு ஆப்!

இந்தியாவில் 10 நகரங்களில் உள்ள இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட சரி பார்க்கப்பட்ட வேலைவாய்ப்பு தகவல்களை இதில் பட்டியலிடப்பட்டுள்ளது.

20 லட்சம் பட்டியலிடப்பட்ட ஜாப்ஸ்: கூகிளின் வேலைவாய்ப்பு ஆப்!

Saturday August 22, 2020 , 2 min Read

வங்கதேசம் மற்றும் இந்தோனேசியாவில் முன்னோட்டாம் பார்க்கப்பட்ட பிறகு, இந்தியாவில், 'Kormo Jobs' 'கோர்மோ ஜாப்ஸ்’ வேலைவாய்ப்பு ஆப் ஒன்றை கூகுள் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

kormo jobs

வேகமாக வளர்ந்து வரும் ஆன் டிமாண்ட் வர்த்தகம், ரீடைல் மற்றும் உள்ளூர் டெலிவரி ஆகிய துறைகளில் உள்ள இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட சரி பார்க்கப்பட்ட வேலைவாய்ப்புகளை இந்த செயலி பட்டியலிடுகிறது.

கொரோனா பாதிப்புக்கு மத்தியில், தேவையான ஆட்களை நியமிக்க ஜோமேட்டோ மற்றும் டன்சோ ஆகிய நிறுவனங்களால் இந்த செயலி பயன்படுத்தப்பட்டு வருவதாக கூகிள் தெரிவித்துள்ளது. இந்த ஆப் ஒரு மில்லியனுக்கு மேல் டவுண்லோடு செய்யப்பட்டுள்ளது.

இருப்பிடம் சார்ந்த வேலைவாய்ப்பு விவரங்கள், ரியல் டைம் டிராக்கிங், விண்ணப்பங்கள் விரைவாக அப்டேட் செய்யப்படுவது, செயலிக்குள் நேர்காணல் வசதி, டிஜிட்டல் ரெஸ்யூம் மற்றும் புதியவர்கள் கற்றுக்கொண்டே வருவாய் ஈட்டும் வாய்ப்பு ஆகிய அம்சங்களை இந்த ஆப் கொண்டுள்ளது.


தற்போது, சென்னை, மும்பை, டில்லி, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு, நொய்டா உள்ளிட்ட 10 நகரங்களில் வேலைவாய்ப்பு விவரங்களைக் கொண்டுள்ளது. இந்த செயலியில், அடிப்படை விவரங்களை சமர்பித்து, டிஜிட்டல் ரெஸ்யூமை உருவாக்கி பகிர்ந்து கொள்ள சில நிமிடங்களே ஆகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பின்னணி, அனுபவம் ஆகிய அம்சங்களை இடம்பெறச்செய்தால் பொருத்தமான வேலைவாய்ப்புகளை காண்பிப்பதாகவும் செயலிக்கான விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"கொரோனா காரணமாக வேலைவாய்ப்பு பரப்பு மாறியிருக்கிறது. வேறுவிதமான திறன்கள் மற்றும் அனுபவங்கள் தேவைப்படும் புதிய வேலைவாய்ப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. அனைத்து விதமான வர்த்தகங்களும் இந்த சூழலில் சாவலை எதிர்கொள்கின்றன. அதே நேரத்தில் வேலைவாய்ப்பை தேடுபவர்களும் இந்த புதிய நிலைக்கு ஏற்ப மாற வேண்டியிருக்கிறது. கோர்மோ ஜாப்ஸ் மூலம் இந்தியர்கள் தங்களுக்கான வேலைவாய்ப்பை தேடிக்கொள்ள உதவுவதில் உறுது கொண்டுள்ளோம்,” என கோர்மோ ஜாப்ஸ் பிராந்திய மேலாளர், செயல்பாடுகள் தலைவர் ரிக்கி ரஸல் தெரிவித்துள்ளார்.
வேலை


கடந்த ஆண்டு கூகுள் ஜாப் ஸ்பாட் எனும் வேலைவாய்ப்பு சேவையை அறிமுகம் செய்தது. அதன் பிறகு ஜாப் ஸ்பாட் செயிலி கூகிள் பிளேஸ்டோரில் நல்ல வரவேற்பை பெற்றது.


தற்போது, பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை அளிக்க, ஜாப் ஸ்பாட், கோர்மோ ஜாப்ஸ் என மாற்றப்படுகிறது.

“வேலைதேடுபவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில், புதிய அம்சங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் கவனம் செலுத்துவோம்,” என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

ஆங்கில கட்டுரையாளர்: சோஹினி மிட்டர்