Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

எட்டாக் கனவாக இருக்கும் அரசுத் தேர்வுகளின் வெற்றி, இனி எட்டும் தூரத்தில்...

வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய அரசுத் தேர்வுகளில் வெற்றிபெற செய்ய வேண்டியவை இதோ...

எட்டாக் கனவாக இருக்கும் அரசுத் தேர்வுகளின் வெற்றி, இனி எட்டும் தூரத்தில்...

Saturday August 03, 2019 , 3 min Read

பட்டப்படிப்பு முடித்து விட்டு அரசு வேலை பெற பலர் பயின்று வருகின்றார்கள். டி.என்.பி.எஸ்.சி, யு.பி.எஸ்.சி, இந்திய ரயில்வே வேலை வாய்ப்பு மூலம் பல பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.


IAS, IPS ஆகிய மத்திய அரசு தேர்வுகள் முதல் டைப்பிஸ்ட், ஜூனியர் அஸிஸ்டென்ட், நில அளவையர் (field surveyor), வரைவாளர் (draftsman), பொறியாளர் முதலிய பல வேலை வாய்ப்புகளுக்கான தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் மற்றும் ரயில்வே பணியிடங்களுக்கான தேர்வுகள் என பல்லாயிரம் பேருக்கு அரசு வேலை காத்துக் கொண்டிருக்கிறது.


யு.பி.எஸ்.சி முதன்மை தேர்வில் வெற்றி காண்போர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர். முதன்மை தேர்வு 1750 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். ஆங்கிலம் மற்றும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழி (தலா 300 மதிப்பெண்கள்) ஆகியவற்றில் நாம் தகுதி பெற்றால் மட்டும் போதும். 1750 மதிப்பெண்களுக்கு கட்டுரை தாள், பொதுப்பாடங்கள் கொண்ட நான்கு தாள்கள், இரண்டு விருப்பப் பாடங்கள் என 7 தாள்கள் தலா 250 மதிப்பெண்களுக்கு எழுத வேண்டும்.

tnpsc

நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்களுக்கு அதிகப்பட்சமாக 275 மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த இரு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு ரேங்கிங் வழங்கப்படும்.


டி.என்.பி.எஸ்.சி முதன்மை (குரூப் 1) தேர்வில் பொதுப்பாடங்கள் மட்டுமே. இந்திய வரலாறு, புவியியல், கலாச்சாரம், அரசியல் அமைப்பு, தமிழகத்தின் பாரம்பரியம், வளர்ச்சி, நடப்புகள், சர்வதேச நடப்புகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும். மொத்தம் மூன்று தாள்கள், தலா 300 மதிப்பெண்களுக்கு உள்ளன.


ரயில்வே தேர்வுக்கு அரசியல், வரலாறு, புவியியல், ரயில்வே சம்பந்தப்பட்ட கேள்விகள், ரீஸனிங் மற்றும் எண் திறன் (நீயூமரிக்கல் எபிலிட்டி) ஆகியவை இடம் பெற்றிருக்கும். மூன்று தேர்வுகளிலும் பல பகுதிகள் ஒன்று தான். சரியாக படித்தால் எளிதில் தேர்ச்சி பெறலாம்.


வெற்றி பெறும் நோக்கத்துடன் சரியான பயிற்சி மேற்கொண்டு தேர்வை எதிர்கொள்பவர்கள், பெரும்பாலும் விண்ணப்பித்தவர்களில் 25 சதவீதத்திற்கும் குறைந்தவர்களே.

  • பல இலட்சம் பேர் எழுதும் இந்தத் தேர்வுகளில் வெற்றிபெற முடியாது என்ற எண்ணத்தை முதலில் கைவிட வேண்டும். இதுவே தேர்வுகளை எதிர்கொள்வதில் முதல் படி.
  • இதில் விடாமுயற்சி அடுத்த படி. முழு முயற்சி செய்து கடினமாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தேர்வில் வெல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தப்பின், எந்த ஒரு செயலும் நம் கவனத்தை திசை திருப்பக் கூடாது.


இன்று நம்மை வழிநடத்த பல பயிற்சி மையங்கள் உள்ளன. இலவசப் பயிற்சி முகாம்களும் நடைப்பெறுகிறது. இவை அனைத்தும் வேண்டாம், சுயமாக பயின்று தேர்ச்சிப் பெற வேண்டும் என்றால், புத்தகங்கள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் உலகையே கையில் அடக்கும் மொபைலில் உள்ள பல தொழில்நுட்பங்கள் கைகொடுக்க இருக்கின்றன. 'Entri' என்ற ஆப் இதற்காக கடந்த வருடம் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ளது.


தேர்வுகளை எதிர்கொள்ள சில குறிப்புகள் :


1. தேர்வுக்கு விண்ணப்பித்த பின் தேர்வு நாள், படிக்க வேண்டிய பாடத்திட்டங்கள், வினாத்தாள் வடிவமைப்பு, கால அவகாசம் ஆகியவற்றைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

2. நேரம் கடத்தாமல், விண்ணப்பித்த நாளிலிருந்தே திட்டமிட்டு படியுங்கள்.

3. ஒரே புத்தகத்திலிருந்தோ, தளத்திலிருந்தோ படிக்காமல். வெவ்வேறு தளங்களில் இருந்து படிப்பது நல்லது.

4. அகல உழுவதை விட ஆழ உழுவது மேல் என்னும் பழமொழிக்கேற்ப அதிக நேரம் எடுத்தாலும் படிப்பதை புரிந்து படியுங்கள்.

5. சுற்றி நடக்கும் நிகழ்வுகளை எப்போதும் அறிந்து கொள்ளுங்கள். தேர்வு நேரங்களில் பொது அறிவு பகுதியில் விடையளிக்க இது உதவி செய்யும்.

6. தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும். பலர் பயம் மற்றும் பதற்றம் காரணமாகவே தேர்ச்சி பெறாமல் தவிக்கின்றனர். நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்வதே சிறந்தது.

7. படித்து முடித்ததை எப்போதும் ரிவைஸ் செய்வது நல்லது. முக்கியக் குறிப்புகளை தனியாக எழுதி வைத்துக்கொள்ளலாம். கடினமான பாடத்திற்கு அதிக நேரமும், கவனமும் செலுத்தி படித்தால் நல்லது.

8. நிறைய மாதிரி வினாத்தாள்களுக்கு விடையளித்து சுய பரிசோதனை செய்து பயிற்சி எடுப்பது முக்கியம்.

9. தேர்வுகளில் செலுத்தும் கவனத்தை ஆரோக்கியத்திலும் செலுத்த வேண்டும். தேர்வு நேரங்களில் உடல் நிலை சரியில்லை என்றால் தேர்வு சரியாக எழுத முடியாது.


நேர்மையாக பயிலும் நாம் சரியான வழிகாட்டுதலோடு பயில்வோம். எட்டாக் கனவாக இருக்கும் அரசு வேலை வாய்ப்பு இனி எட்டும் தூரம் தான்.


கட்டுரையாளர்: வி.ஹர்ஷினி