‘பெண்களின் குறைந்த பட்ச திருமண வயதை மாற்ற திட்டம்’ - பிரதமர் மோடி

கடந்த ஆறு ஆண்டுகளில் அரசு மேற்கொண்டு வரும் முயற்சி காரணமாக, கல்வியில் பெண்களின் சேர்க்கை விகிதம் ஆண்களின் விகிதத்தை அதிகரித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
16 CLAPS
0

பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை அரசு மாற்றி அமைக்க திட்டமிட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இது தொடர்பான குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு அமைவதாகக் கூறியுள்ளார்.

கடந்த ஆறு ஆண்டுகளில் அரசு மேற்கொண்டு வரும் முயற்சி காரணமாக, கல்வியில் பெண்களின் சேர்க்கை விகிதம் ஆண்களின் விகிதத்தை அதிகரித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ரூ.75 நாணயத்தை வெளியிட்டு வீடியோ மூலம் உரையாற்றிய பிரதமர் இவ்வாறு கூறினார்.

"பெண்களுக்கான சரியான திருமண வயது எது என்பதை தீர்மானிப்பதற்கான விவாதம் நடைபெற்று வருகிறது,” என்றும் மோடி கூறினார்.

இது தொடர்பான குழுவின் அறிக்கை குறித்து, அரசு என்னமுடிவு எடுக்க உள்ளது என்றும் கேட் நாடு முழுவதும் இருந்து தனக்கு கடிதங்கள் வருவதாக தெரிவித்தார். “இது தொடர்பாக அரசு விரைவில் முடிவு எடுக்க உள்ளது என அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது என்னவாக இருக்க வேண்டும் என அரசு சிந்தித்து வருவதாகவும், இது தொடர்பாக குழு அமைக்கப்பட இருப்பதகாவும், பிரதமர் தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவில் பெண்களுக்கான குறைந்த பட்ச வயது 18 ஆகவும், ஆண்களுக்கு 21 ஆகவும் இருக்கிறது.

ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிராக கடந்த ஆறு ஆண்டுகளில் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்தும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த சவாலை எதிர்கொள்ள அரசு ஒருங்கிணைந்த நோக்கில் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக இருப்பதை எதிர்கொள்ள பல முனை உத்தியை அரசு கடைப்பிடித்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

தூய்மை இந்தியா திட்டம் கீழ் நாடு முழுவதும், 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டிருப்பதாகவும், குழாய் குடிநீர் வழங்க ஜலஜீவன் திட்டம் செயல்படுத்தப் படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். பெண்களுக்கு ஒரு ரூபாயின் சானிடரி நாப்கின்கள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

"இந்த முயற்சிகளின் காரணமாக, முதல் முறையாக கல்வியில் பெண்களின் மொத்த சேர்க்கை விகிதம் ஆண்களை விட அதிகரித்திக்கிறது,” என்றும் அவர் தெரிவித்தார்.

ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனைக்கு எதிரான போராட்டத்தை உணவு மற்றும் விவசாய அமைப்பு நெருக்கமாக கவனித்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இளம் வயதில் கர்பம், கல்வி இல்லாதது, போதிய குடிநீர் வசதி இல்லாதது, ஆகியவை ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனையை எதிர்கொள்வதில் பிரச்சனையான அம்சங்கள் என பிரதமர் குறிப்பிட்டார். குஜராத் முதல்வராக இருந்த போது ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதிலும், ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்வதிலும் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பங்கை பிரதமர் பாராட்டினார். இந்த அமைப்பின் சேவை மற்றும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த சிறப்பு நாணயம் வெளியிடப்படுவதாக அவர் தெரிவித்தார். 2023ம் ஆண்டை சிறுதானியங்களுக்கான ஆண்டாக அறிவிக்கும் இந்தியாவின் கோரிக்கைக்கு அமைப்பின் ஆதரவையும் அவர் பாராட்டினார்.

செய்தி-பிடிஐ

Latest

Updates from around the world