வீட்டில் இருந்து மாணவர்கள் படிக்க ஸ்மார்ட்போன் வழங்கிய பள்ளித் தலைமை ஆசிரியர்!

By YS TEAM TAMIL|12th Sep 2020
விருதுநகர் மாவட்டத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் கே ஜெயகுமார் ஞானராஜ் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு மொபைல் போன் வழங்கி உதவுகிறார்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

கோவிட்-19 பெருந்தொற்று பரவத் தொடங்கியது முதல் பள்ளிகளும் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் இணைய வழி கற்றல் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் பல மாணவர்களால் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.


நாட்டில் உள்ள 27 சதவீத மாணவர்களிடம் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கத் தேவையான ஸ்மார்ட்போன்களோ லேப்டாப்களோ இல்லை என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.


சிபிஎஸ்இ மற்றும் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் என 34,000-க்கும் மேற்பட்டோர்களிடம் கலந்துரையாடிய பின்னர் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது.


விருதுநகர் மாவட்டத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் கே ஜெயகுமார் ஞானராஜ் இத்தகைய இடர்பாடுகளை மாணவர்கள் சந்திக்கக்கூடாது என்று விரும்பினார். எனவே பள்ளியில் சேர்ந்துள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்துள்ளார்.

1

பள்ளியில் சேர்ந்துள்ள மாணவர்கள் அனைவருக்கும் புத்தகங்கள், ஸ்டேஷனரி, பை போன்றவற்றுடன் ஸ்மார்ட்போன் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

“சுற்றுவட்டாரக் கிராமங்களில் உள்ள பெரும்பாலானோரிடம் மொபைல் போன் இல்லை. தற்போதுள்ள நிலையில் இவர்களால் மொபைல் போன் வாங்கமுடியாது,” என்று ஞானராஜ் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இடம் தெரிவித்துள்ளார்.

“மாணவர்கள், குறிப்பாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தொடர் கவனிப்பு அவசியம். அவர்கள் பாடங்களை நினைவில் நிறுத்திக்கொள்ள தினமும் படிக்கவேண்டியது அவசியம். இவர்களால் தாங்களாகவே படித்துப் புரிந்துகொள்ளமுடியாது. இந்த மாணவர்களுக்கு உதவி அவசியம். ஆசிரியர்களான நாங்கள் அவர்களுக்கு வழிகாட்டுவதில் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார்.


புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமின்றி ஏற்கெனவே படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களில் ஸ்மார்ட்போன் தேவைப்படுவோர்களுக்கும் வழங்க திட்டமிட்டுள்ளார். ஏழை மாணவர்களுக்கான போக்குவரத்து செலவை ஏற்றுக்கொள்ளவும் இந்த தலைமை ஆசிரியர் திட்டமிட்டுள்ளார். பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலர் இவரது செயலை ட்விட்டர் மூலம் பாராட்டியுள்ளனர்.


கட்டுரை: THINK CHANGE INDIA

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding Course, where you also get a chance to pitch your business plan to top investors. Click here to know more.