'சிறந்த நாள்' - வாழ்நாள் கனவை நிறைவேற்றிய ஜெஃப் பெசோஸ்!

வெற்றிகரமாக முதல் பயணத்தை முடித்த ப்ளூ ஆரிஜின்!
0 CLAPS
0

ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் 'நியூஸ் ஷெப்பர்ட்' ராக்கெட் தனது முதல் விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில் உலகப் பணக்காரர் ஜெஃப் பெசோஸ் இடம்பெற்றுள்ளார். மேற்கு டெக்சாஸின் லான்ச் சைட் ஒன்னிலிருந்து தொடங்கப்பட்ட ஜெஃப் பெசோஸுக்குச் சொந்தமான ப்ளூ ஆரிஜினின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டின் மூலம், நான்கு குழு உறுப்பினர்களும் விண்வெளிக்குச் சென்றனர்.

ப்ளூ ஆரிஜினின் ஏவுகணை வாகனம் நியூ ஷெப்பர்ட் தனது முதல் குழுவினரை விண்வெளிக்கு அழைத்துச் சென்று சுமார் 11 நிமிடங்கள் பூமியில் இருந்து கிட்டத்தட்ட 100 கிமீ தொலைவுக்கு அப்பால் பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் இருந்துவிட்டு மீண்டும் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது.

ஜெஃப் பெசோஸின் சகோதரர் மார்க் பெசோஸ், 82 வயதான பைலட் வாலி ஃபங்க், 18 வயது ஆலிவர் டேமன் ஆகியோர் ஜெஃப் பெசோஸ் உடன் இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில் பங்கேற்றுள்ளனர்.

ப்ளூ ஆரிஜினின் தகவலின்படி, இந்தப் பயணத்தில் இடம்பெற்றிருந்த குழு உறுப்பினர்கள் தரையில் இருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள கோர்மன் கோட்டின் மீது பயணித்து, பூமியின் வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையிலான எல்லையாக அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் மிதந்து, மீண்டும் பூமிக்குத் திரும்பினர்.

முழு விமானமும் விண்வெளியில் சுமார் 10 நிமிடங்கள் இருந்தது. இதற்கிடையே, வெற்றிகரமாக பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய ஜெஃப் பெசோஸ், ‘சிறந்த நாள்’ என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டின் மேல்பகுதி காப்ஸ்யூல் என அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் தான் பெசோஸ் உள்ளிட்டவர்கள் அமர்ந்து சென்றனர். பெரிய ஜன்னல்கள் மற்றும் சாய்ந்த இருக்கைகள் கொண்ட 10 அடி உயர காப்ஸ்யூல், ராக்கெட் பூஸ்டரிலிருந்து பிரிக்கப்பட்டு, பூமிக்கு மேலே 62 மைல் (100 கிலோமீட்டர்) கர்மன் கோட்டைத் தாண்டி மேலே சென்றது.

பின்னர், அங்கு பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் சில நிமிடங்கள் இருந்த இந்த காப்ஸ்யூல் உள்ளூர் நேரப்படி காலை 8:22 மணிக்கு மேற்கு டெக்சாஸில் தரையிறங்கியது. ஆறு பாராசூட்டுகள் உதவியுடன் திறம்பட தரையில் இறக்கப்பட்டது.

இதற்கிடையே, நெதர்லாந்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஆலிவர் டேமன் இந்தப் பயணத்தில் கவனம் ஈர்க்கும் நபராக இருந்தார். முன்னதாக, டேமன் பறக்க இருக்கும் இருக்கையை 28 மில்லியன் செலுத்தி வேறு ஒரு நபர் முன்பதிவு செய்திருந்தார். ஆனால் திட்டமிடல் தொடர்பாக எழுந்த பிரச்சனையால் அந்த நபர் வெளியேற, தற்போது டேமனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த வாய்ப்புக்காக டேமன் எவ்வளவு தொகை செலுத்தியிருக்கிறார் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால், ப்ளூ ஆரிஜின் இரண்டாவது விண்வெளிப் பயணத்தில் பறக்க டேமனின் தந்தை முன்பதிவு செய்திருந்தார். தற்போது, முதல் பயணத்தில் டேமன் பறந்து சாதனை படைத்தை அடுத்து ஏலம் எடுத்த நபர் இரண்டாவது பயணத்தில் பறக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

Latest

Updates from around the world