Budget 2023: ’பசுமை நோக்கம்' - எரிசக்தி மாற்றம், கரியமில வாயு குறைப்புக்கு ரூ.35,000 கோடி ஒதுக்கீடு!
விவசாயம், போக்குவரத்து, எரிசக்தி, கரியமில வாயு வெளிப்பாடு குறைப்பு மற்றும் பெரிய அளவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை நோக்கமாக கொண்ட பல்வேறு பசுமை வளர்ச்சி நடவடிக்கைகளை நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்.
விவசாயம், போக்குவரத்து, எரிசக்தி, கரியமில வாயு வெளிப்பாடு குறைப்பு மற்றும் பெரிய அளவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பல்வேறு பசுமை வளர்ச்சி நடவடிக்கைகளை நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்.
2023 பட்ஜெட்டில், பசுமை எரிசக்தி மாற்றம் மற்றும் நெட் ஜீரோ நோக்கத்திற்காக ரூ.35,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Credit: YourStory Design
"பசுமைத் தொழில் மற்றும் பொருளாதார மாற்றத்தை நோக்கமாகக் கொண்டு, 2070ல் நெட் ஜீரோ கரியமில வாயு வெளிப்பாடு மற்றும் பஞ்சாமிர்த்தை நோக்கி உறுதியாக இந்தியா முன்னேறுகிறது. நம்முடைய பசுமை வளர்ச்சி நோக்கத்தை பட்ஜெட் அடிப்படையாகக் கொண்டுள்ளது,” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
ரூ.20,700 கோடியில் லடாக்கில் இருந்து 13 கிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை கொள்முதல் செய்து, ஒருங்கிணைக்கும் வகையில் மாநிலங்களுக்கு இடையிலான பரிமாற்ற அமைப்பு ஏற்படுத்தப்படும்.
தற்போதுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், பசுமை கிரெடிட் திட்டம் அறிவிக்கப்படும். இதன் கீழ், பசுமை பொறுப்பு கொண்ட நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும்.
அண்மையில், ரூ.19,700 கோடி ஒதுக்கீடு பெற்ற தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின் முக்கியத்துவத்தையும் நிதியமைச்சர் எடுத்துரைத்தார்.
"பொருளாதாரம் குறைந்த கரியமில தீவிரம் கொண்டதாக மாற, படிம எரிபொருள் இறக்குமதி மீதான சார்பை குறைக்க மற்றும் பிரகாசமாக வளரும் வாய்ப்புள்ள துறைகளில் நாடு தொழில்நுட்ப மற்றும் சந்தை முன்னிலை பெற இத்திட்டம் உதவும்,” என நிதியமைச்சர் கூறினார்.

அன்னை பூமி புதுப்பிப்பு, விழிப்புணர்வு, ஊட்டச்சத்துமயம் மற்றும் பாதிப்பு குறைப்பு ஆகியவற்றுக்கான பிரதமர் திட்டம், மாற்று உரங்கள் பயன்பாடு மற்றும் சமச்சீரான ரசாயான உர பயன்பாட்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஊக்குவிக்க அறிமுகம் செய்யப்படும்.
பசுமை பொருளாதாரத்திற்காக பழைய வாகனங்களை மாற்றுவதன் முக்கியத்துவத்தை குறிப்பிட்ட நிதியமைச்சர்,
மத்திய அரசின் பழைய வாகனங்களை மாற்ற போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். பழைய வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மாற்றப்படுவதில் மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பிளண்டட் கம்பிரஸ்டு இயற்கை எரிவாயுவில் உள்ள உயிரி வாயுவுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதன் மீதான கூட்டு வரி விளைவு தவிர்க்கப்பட இது உதவும் என்றும் கூறினார்.
ஆங்கிலத்தில்: பிரசன்னட்டா பட்வா | தமிழில்: சைபர் சிம்மன்

Budget 2023: சுற்றுலா, இளைஞர் நலன், மகளிர், ஆற்றல் துறைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் என்ன?
Edited by Induja Raghunathan