நவம்பர் மாதம் ஜி.எஸ்.டி வசூல் ஒரு லட்சம் கோடியை கடந்தது...

ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு எட்டாவது முறையாக நவம்பர் மாதம் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடியை கடந்துள்ளது.

3rd Dec 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

ஜி.எஸ்.டி வசூல், மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு நவம்பர் மாதத்தில், 6 சதவீதம் வளர்ச்சி அடைந்து, மீண்டும் ரூ.1 லட்சம் கோடையை கடந்திருக்கிறது. பண்டிகைக் கால தாக்கம் காரணமாக ரூ.103 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

ஜிஎஸ்டி

கடந்த ஆண்டு இதே மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.97,637 கோடியாக இருந்தது. அக்டோபர் மாதம் இது ரூ.95,380 கோடியாக இருந்தது. இரண்டு மாத எதிர்மறை வளர்ச்சிக்குப்பிறகு, 2018 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது, 2019 நவம்பரில் ஜிஎஸ்டி வசூல், 6 சதவீதம் அதிகரித்திருப்பதாக அதிராகப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.


நுகர்வோர் தேவை மற்றும் வரி செலுத்தல் மேம்பட்டிருப்பதை இது உணர்த்துவதாக கருதப்படுகிறது. வரி வசூலிப்பு முறை எளிதாகி இருப்பதும் இதற்கான காரணமாக சொல்லப்படுகிறது.


இந்த மாதத்தில் உள்ளூர் பரிவர்த்தனைகள் மீதான ஜிஎஸ்டி வசூல், இந்த ஆண்டிலேயே அதிகமாக 12% அதிகரித்துள்ளது.

 ”நவம்பரில் வசூலான மொத்தத் தொகை ரூ.1,03,492 கோடியில், மத்திய ஜி.எஸ்.டி ரூ.19,92 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.27,144 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.49,028 கோடி மற்றும் கூடுதல் வரி ரூ.7,727 கோடி’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, 2019 மார்ச், ஏப்ரல் மாதங்களுக்குப்பிறகு, நவம்பர் மாதத்தில் தான் அதிக வரி வசூலாகியுள்ளது.


2017 ஜூலையில் ஜிஎஸ்டி அறிமுகமான பிறகு, எட்டாவது முறையாக ஒரு மாதத்தில் வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியை கடந்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம், ரூ.1,02,083 கோடி வசூலான பிறகு நவம்பரில் ஒரு லட்சம் கோடியை கடந்துள்ளது.


இறக்குமதிகள் மீதான ஜிஎஸ்டி வசூல் -13 சதவீத எதிர்மறை வளர்ச்சி கண்டாலும், முந்தைய மாதத்தின் -20 சதவீதத்தை விட மேம்பட்டதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் முதல் நவம்பர் வரையான காலத்தில் மொத்தம் 77.83 லட்சம் ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வழக்கமான செட்டில்மண்டிற்கு பிறகு, நவம்பர் மாதம் மத்திய மற்றும் மாநில அரசுகள் ரூ.44,742 கோடி (சிஜிஎஸ்டி) மற்றும் ரூ.44,576 கோடி (எஸ்ஜிஎஸ்டி) வருவாய் ஈட்டியுள்ளன.

மந்தமான மாதங்களுக்கு பிறகு பண்டிகைக் கால மாதத்தில் ரூ.1 லட்சம் கோடியை ஜிஎஸ்டி கடந்திருப்பது ஊக்கம் அளிப்பதாக டியோலைட் இந்தியா பாட்னர் எம்.எஸ்.மணி கூறியுள்ளார். இது நடப்பு பற்றாக்குறையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.


செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்


  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India