'என்னது இந்த குர்தா விலை ரூ.2.5 லட்சமா? ட்ரோலுக்கு ஆளான சர்வதேச பிராண்ட்!
டுவிட்டர் சுவாரஸ்யம்!
பிரபல சர்வதேச ஃபேஷன் நிறுவனமான Gucci இந்திய பாரம்பரிய உடையான குர்தா ஒன்றை ரூ.2.5 லட்சத்திற்கு விற்க இருப்பதாக விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.
ஆனால், இதில் சுவாரசியம் என்னவென்றால், Gucci விளம்பரப்படுத்திய ஆடை நம் இந்திய குர்தா என்றும் அதை சர்வதேச அளவில் கப்தான் என்று கூறி இவ்வளவு அதிகவிலைக்கு விற்பதை நெட்டிசன்கள் கலாய்த்துத் தள்ளிவிட்டனர். சர்வதேச பிராண்டான ‘கூச்சி’ வெள்ளை குர்தாவை ‘கப்தான்’ என்று பெயரிட்டதுடன், 3500 டாலருக்கு விற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டதே இந்த கொந்தளிப்புக்குக் காரணம்.
மேலும், இணையதளத்தில் இந்த ஆடை குறித்த விவரங்களில் மேட் இன் இத்தாலி என்றும், ஆர்கானிக் கைத்தறி மூலம் வடிவமைக்கப்பட்ட இந்த கப்தான் ஒரு மலர் எம்பிராய்டரி மற்றும் சுய-ஓடு டஸ்ஸல்களால் செறிவூட்டப்பட்டுள்ளது," என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் இந்த நிறுவனம் விற்கும் ஒரே கப்தான் மாடல் இது இல்லை. பல்வேறு நீளம் மற்றும் வடிவங்களின் அடிப்படையில் இது போல் பலவற்றை விற்கிறது.
பொதுவாக கப்தான்களின் விலை 1300 முதல் 4200 டாலர் வரை விற்கப்படுகின்றன. இந்தநிலையில், தான் இந்த ஒற்றை வெள்ளை ஆடையின் விலை மட்டும் இவ்வளவு விலைக்கு விற்கப்படுவதைக் கண்டதும் நெட்டிசன்கள் எல்லோரும் அதிக விலையை நம்ப முடியவில்லை என்று கூறி வருகின்றனர். அதேபோல், இதே விலையில் எத்தனை டஜன் ஆடைகளை வாங்க முடியும் என அவர்கள் கணக்குகளை அடுக்கி பதிவிட்டு வருகின்றனர்.
இந்த ஸ்கிரீன் ஷாட்டை எடுத்துக்கொண்டு நெட்டிசன்கள் ஆன்லைனில் ஒரு உரையாடலை நடத்தத் தொடங்கினர்.
“கூச்சி ஒரு இந்திய குர்தாவை 2.5 லட்சத்திற்கு விற்கிறதா? நான் இதே போன்ற குர்தாவை 500 ரூபாய்க்கு வாங்குவேன்...” என்று ட்விட்டர் பயனர் படங்களைப் பகிர்ந்துகொண்டு எழுதினார்.
இன்னும் சிலர், இந்த ஆடையின் பெயர் கப்தான் அல்ல என்றும் குர்தா அல்லது குர்தி என்று விவரிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினர்.
இருப்பினும், ஒரு சர்வதேச பிராண்ட் தினசரி தெற்காசிய ஆடைகளை அதிக விலைக்கு விற்க முயற்சிப்பது இது முதல் முறை அல்ல. 2018 ஆம் ஆண்டில், ஜாரா நிறுவனம் ஆன்லைனில் ஒரு பெரிய சலசலப்பை உருவாக்கியது. இது பெண்களின் பாவாடையை விற்கத் தொடங்கிய போது, அது அனைவருக்கும் நம்மூர் லுங்கியை நினைவூட்டியது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு டிவிட்டர் பயனர் பதிவிடுகையில், “இதை நான் எங்க உள்ளூர் கடையிலேயே 300 ரூபாய்க்கு வாங்குவேன், எவன் இதற்கெல்லாம் $4500 செலவிடுவார்கள் என்று கலாய்த்தார்.”
Gucci நிறுவனம் இது போன்ற கலாய்க்கு புதிதல்ல, 2018ல் அவர்கள் அறிமுகப்படுத்திய தலை டர்பன் மற்றும் பர்தா மாடல்களுக்காக ட்விட்டர் பயனர்களால் ட்ரோல் செய்யப்பட்டது. சீக்கிய மதத்தை இழிவுப்படுத்துவதாக குச்சி-யின் டர்பன் டிசைன்கள் இருப்பதாக அப்போது பலர் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தகக்து.