பதிப்புகளில்
நியூஸ் வியூஸ்

ஹேக்கர்கள் கைவரிசை: உங்கள் வாட்ஸ் அப்’பை உடனே அப்டேட் செய்யுங்கள்!

cyber simman
15th May 2019
10+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

நீங்கள் Whatsapp சேவையை பயன்படுத்துபவர் எனில், உடனடியாக உங்கள் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்து கொள்வது நல்லது. ஏனெனில், வாட்ஸ் அப் வாயிலாக ஹேக்கர்கள் பயனாளிகளின் போன்களின் ஸ்பைவேர் எனும் உளவு மென்பொருளை நிறுவதற்கான அபாயம் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ் அப் அதிகம் பயன்படுத்தப்படும் மேசேஜிங் சேவையாக இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் வாட்ஸ் அப் பயனாளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

வாட்ஸ் அப் உரையாடலுக்கான மேடையாக இருப்பதோடு, வதந்திகள் மற்றும் பொய்ச்செய்திகளுக்கான வாகனமாக இருப்பதாகவும் கருதப்படுகிறது. பொய்ச்செய்திகள் பிரச்சனையை எதிர்கொள்ள வாட்ஸ் அப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் வாட்ஸ் அப் பயன்பாடு தொடர்பாக புதிதாக ஒரு வில்லங்கம் வெடித்திருக்கிறது. வாட்ஸ் அப் வாயிலாக, பயனாளிகளின் போன்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் எனும் செய்தி தான் அது.

வாட்ஸ் அப்பில் உள்ள ஓட்டை ஒன்றை பயன்படுத்தி ஹேக்கர்கள், பயனாளிகள் போனில் உளவு பார்க்கும் மென்பொருளை நிறுவ வாய்ப்பிருப்பதாக தெரிய வந்துள்ளது. ஹேக்கர்கள் ஒரே ஒரு போன் கால் மூலம், பயனாளிகள் போனை அணுகி உளவு மென்பொருளை நிறுவி விடலாம் என்று கூறப்படுகிறது.

இத்தகைய ஸ்பைவேர் மூலம், பயனாளிகளின் தனிப்பட்ட விவரங்களை தெரிந்து கொள்வதோடு, போன் காமிரா உள்ளிட்டவற்றையும் இயக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தி பைனான்சியல் டைம்ஸ் முதலில் செய்தி வெளியிட்டது.

இஸ்ரேலைச்சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனமான, என்.எஸ்.ஓ குழுமம் இந்த உளவு மென்பொருளை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. இதை நிறுவனம் மறுத்தாலும், வாட்ஸ் அப் வாயிலாக ஹேக்கர்கள் போனை ஹேக் செய்யலாம் என கூறப்படுவது கிலியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இதனிடையே, வாட்ஸ் அப் தரப்பிலும் தனது சேவையில் பாதுகாப்புத் தொடர்பான கோளாறு கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டு விட்டதாகவும், பயனாளிகள் புதிதாக அப்டே செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஏற்கனவே எத்தனை பேர் இந்த உளவு மென்பொருளால் பாதிக்கப்பட்டனர் எனும் விவரம் தெரியவில்லை. மேலும் வாட்ஸ் அப், தனது சேவை வாயிலாக பரிமாறிக்கொள்ளப்படும் செய்திகளுக்கு ரகசிய தன்மை அளிக்கும் என்கிரிப்ஷனை அளிப்பதாக பெருமைபட்டுக்கொள்கிறது. ஆனால், இந்த செய்தி வாட்ஸ் அப்பின் என்கிரிப்ஷன் பாதுகாப்பையே கேள்விக்குறியாக அமைந்துள்ளது.

வாட்ஸ் அப் வாயிலாக போன் ஹேக் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுவது, என்கிரிப்ஷன் பாதுகாப்பால் என்ன பயன் எனும் கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்த விவாதங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், உங்கள் வாட்ஸ் அப்பையும், போனையும் ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள உடனடியாக வாட்ஸ் அப்பை அப்டேட் செய்து கொள்வது நல்லது.

வாட்ஸ் அப்பை அப்டேட் செய்வது பற்றி டைம் பத்திரிகை விளக்கும் வழிகாட்டி கட்டுரை இதோ: http://time.com/5588868/whatsapp-hack-breach-app-update/

10+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags