மகள்களுக்கு தாய் விட்டுச் சென்ற ‘ஹாரி பாட்டர்’ புக்; அப்போ ரூ.100, இப்போ 30 லட்சம் ரூபாய்...

By YS TEAM TAMIL|6th Apr 2021
சகோதரிகளுக்கு அடித்த லக்!
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியராக இருந்த ஒருவர், ஹாரி பாட்டர் அண்ட் த பிலாசஃபர்ஸ் ஸ்டோன் என்ற புக்கத்தகத்தை £1 (1 பவுண்ட்டுக்கு) வாங்கினார். இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக 100ரூபாய்.


இந்த புத்தகம் 1997 ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்டது. அந்த பெண் தனது 44 வயதில், 2005ம் ஆண்டு மார்பக புற்றுநோயால் இறந்தார். அவர் தனது நான்கு மகள்களையும் அவர் வாங்கிய ஹாரி பாட்டர் புத்தகத்தை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். 

தங்கள் குழந்தைகள் வாசிக்க வேண்டும் என்று கருதி அவர் அதனை யாருக்கும் விற்காமல் அப்படியே வைத்துவிட்டுச்சென்றுவிட்டார். அதில் மற்றொரு ஆச்சரியம் காத்திருக்கிறது. அரிய புத்தகமான இந்த புத்தகம் இப்போது 30,000 டாலர் (சுமார் 30 லட்சம் ரூபாய்) மதிப்புடையது என்று அவரது மகள்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
horrypotter

ஹாரிபாட்டரின் முடிவுரையை விளக்கும் இந்த புத்தகம் 500 பிரதிகள் மட்டுமே மொத்தமாக அச்சடிக்கப்பட்டிருக்கிறது. இந்த அரிய புத்தகத்திற்கு தற்போது தட்டுபாடு நிலவி வருகிறது.

"பல ஆண்டுகளாக ஒரு அலமாரியில் தூசியில் கிடந்த இந்த புத்தகம், ஹாரி பாட்டர் முதல் பதிப்பாகும்," என்று இந்த புத்தகத்தை பற்றி அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

மறைந்த பள்ளி ஆசிரியர் ஒரு ஆர்வமுள்ள வாசகர் மற்றும் அவரது குழந்தைகள் தன்னுடைய அனைத்து புத்தகங்களையும் வைத்திருப்பதை உறுதிசெய்தார். வாசிப்பின் மகிழ்ச்சியை அவர்கள் உணர வேண்டும் என்று அந்த தாய் விரும்பினார். ஹாரி பாட்டர் புத்தகம் ஸ்டாஃபோர்ட்ஷையரில் உள்ள ஹான்சன்ஸ் ஏலதாரர்களின் ஏலத்துக்குச் செல்லும்.


இதன்மூலம் நான்கு சகோதரிகளுக்கும் பெரும் தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹான்சன்ஸ் ஏலதாரர்களின் உரிமையாளர் சார்லஸ் ஹான்சன்,

"ஒரு தாயின் அன்பு என்றென்றும் நீடிக்கும், மேலும் அவரது மகள்களுக்கான இந்த எதிர்பாராத பரிசு சொர்க்கத்திலிருந்து அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது." என்றார்.

இறந்த பெண்ணின் 31 வயதான மூத்த மகள், பெயர் குறிப்பிட விரும்பாத அவர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர்,

“இந்த புத்தகம் 16 ஆண்டுகளுக்கு முன்பு எங்களின் தாய் இறந்ததிலிருந்து ஒரு அலமாரியில் தூசிபடித்து கிடந்தது. ஆனால் நாங்கள் அதை சேகரித்து வைத்திருந்தோம். ஏலத்திற்குப் பிறகு பெறப்பட்ட பணம் நான்கு மகள்களுக்கு இடையில் தங்கள் அன்பான தாயின் மரபின் ஒரு பகுதியாக பிரித்துக் கொடுக்கப்படும்,”என்றார்.