இது நியாயமா? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய இஸ்ரோ இயக்குநர் சோம்நாத்தின் சம்பளம்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் இயக்குநர் சோம்நாத் உடைய மாதம் சம்பளம் குறித்து தொழிலதிபர் ஒருவர் சோசியல் மீடியாவில் பதிவிட்டது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் இயக்குநர் சோம்நாத் உடைய மாதச் சம்பளம் குறித்து தொழிலதிபர் ஒருவர் சோசியல் மீடியாவில் பதிவிட்டது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஆர்பிஜி எண்டர்பிரைசஸின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத்தின் சம்பளத்தைப் பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு, ’இது நியாயமான மாத சம்பளமா?’ என்ற விவாதத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரோவின் சாதனைகள்:
சமீபத்தில் நிலவின் தென் துருவத்தை ஆராய சந்திரயான் 3 விண்கலத்தையும், சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தையும் வெற்றிகரமாக விண்ணில் ஏவி, இந்தியா உலக அரங்கில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த சாதனையையும், கடின உழைப்பையும் இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் முதல் கடைக்கோடி குடிமகன் வரை பாராட்டினர்.
சந்திரயான் 3 விண்கலத்தை வல்லரசு நாடுகளை விட மிக, மிக குறைந்த பட்ஜெட்டில் இந்தியா விண்ணில் ஏவியது உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தற்போது இஸ்ரோ இயக்குநரின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்பிஜி எண்டர்பிரைசஸின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா தனது எக்ஸ் பக்கத்தில் (ட்விட்டர்),
“இஸ்ரோ தலைவர் சோமநாத்தின் மாதச் சம்பளம் ₹2.5 லட்சம். இது சரியா, நியாயமா? அவரைப் போன்றவர்கள் பணத்துக்கு அப்பாற்பட்ட காரணிகளால் தூண்டப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வோம். அறிவியல் மற்றும் ஆராய்ச்சியின் மீதான ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்புக்காக அவர்கள் செய்வதை தேசப் பெருமைக்காகச் செய்கிறார்கள். நாட்டிற்கான அவர்களின் பங்களிப்பிற்காகவும், நோக்கத்தை நிறைவேற்றும் அர்ப்பணிப்பிற்காகவும் நான் தலை வணங்குகிறேன்,” என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு ஆறு லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த ஷேர் 8,000க்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது. அதேபோல், ஏராளமான கமெண்ட்களும் குவிந்து வருகிறது.
மக்கள் கருத்து என்ன?
ஹர்ஷ் கோயங்காவின் பதிவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் குவிந்து வருகின்றன. அதில் குறிப்பிட்ட சில வற்றைப் பற்றி பார்க்கலாம்...
"இது வீடு, கார், வேலையாட்கள் மற்றும் பிற பணமில்லாத சலுகைகள் போன்றவற்றையும் சார்ந்திருக்க வேண்டும். ஆனால், நீங்கள் சொன்னது போல், அவர் பணத்தை மிகப்பெரிய உந்துதலாகக் பார்க்கவில்லை. அவருக்கு, வெற்றியும், நாட்டின் பெருமையும் மட்டுமே முக்கியமானதாக உள்ளது,” என பதிவிட்டுள்ளார்.
”நிச்சயமாக! இஸ்ரோவில் தலைவர் சோமநாத் போன்ற நபர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வம் அளவிட முடியாதது. அவர்களின் பணி பண வெகுமதிகளுக்கு அப்பாற்பட்டது, அறிவியல், ஆராய்ச்சி மற்றும் அவர்களின் தேசத்தின் மேம்பாட்டிற்கான ஆழ்ந்த அர்ப்பணிப்பால் உந்தப்படுகிறது. அவர்களது உத்வேகமும், சமூக பங்களிப்பும் விலைமதிப்பற்றது,” என மற்றொரு நெட்டிசன் தெரிவித்துள்ளார்.

‘4 ஆண்டுகள் எங்களிடம் பேசக்கூட நேரமில்லாமல் உழைத்தார்’ - Chandrayaan 3 வீரமுத்துவேல் தந்தை பெருமிதம்!