ரூ.550 கோடியை ஏத்தர் எனர்ஜியில் முதலீடு செய்தது ஹீரோ மோட்டோகார்ப்!
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனமான அத்தேர் எனர்ஜியில் ஹீரோ மோட்டோகார்ப் கூடுதலாக ரூ.550 கோடி முதலீடு செய்யவுள்ளது.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனமான ஏத்தர் எனர்ஜியில் ஹீரோ மோட்டோகார்ப் கூடுதலாக ரூ.550 கோடி முதலீடு செய்யவுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் இயக்குநர்கள் குழு செப்டம்பர் 4 அன்று நடைபெற்ற கூட்டத்தில் ஏத்தேர் எனர்ஜி நிறுவனத்தில் உரிமை 550 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளனர். எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரான ஏத்தேர் எனர்ஜி பொதுப்பங்களிப்பு மூலம் நிதி திரட்டி வந்த நிலையில், அதில் முதலீடு மேலும் முதலீடு செய்ய ஹீரோ மோட்டோகார் முன்வந்துள்ளது.
பெங்களூருவை தளமாகக் கொண்ட ஏத்தேர் எனர்ஜியில் ரூ.1,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது மற்றும் நிறுவனத்தின் 33.1% பங்குகளை வைத்திருக்கிறது. சீரிஸ் E2 கட்டாய மாற்றத்தக்க முன்னுரிமைப் பங்குகளில் புதிய முதலீடு செய்யப்படுகிறது.

2022-23 நிதியாண்டில் ரூ.1,806 கோடி விற்பனையை ஏத்தேர் பதிவு செய்துள்ளது. இது 21-22 நிதியாண்டில் ரூ.414 கோடியாகவும், முந்தைய நிதியாண்டில் ரூ.80 கோடியாகவும் இருந்தது.
தருண் மேத்தா மற்றும் ஸ்வப்னில் ஜெயின் ஆகியோரால் 2013ம் ஆண்டு ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது இது 100க்கும் மேற்பட்ட நகரங்களில் 1,400க்கும் மேற்பட்ட சார்ஜிங் நிலையங்களைக் கொண்டுள்ளது. ஏத்தர் 450X, ஏத்தர் 450 பிளஸ் மற்றும் ஏத்தர் 450S ஆகிய 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து வருகிறது.
இந்நிறுவனம் இந்த ஆண்டு ஆகஸ்டில் 8,062 யூனிட்களை விற்றுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் விற்கப்பட்ட 6,410 யூனிட்களிலிருந்து 25.77% அதிகரித்துள்ளது.
ஜூலை மாதம், ஏத்தர் எனர்ஜி தனது சார்ஜிங் நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதற்காக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்நிறுவனம் அக்டோபரில் காலடியம் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் நவம் கேபிட்டல் தலைமையிலான ஹெரால்ட் ஸ்கொயர் வென்ச்சர்ஸ் ஆகிய நிறுவனங்களின் மூலம் $50 மில்லியன் ஈக்விட்டி நிதியுதவியைப் பெற்றது. அக்டோபரில் அதன் கடைசி நிதி திரட்டலின் போது அத்தேரின் மதிப்பு $700 மில்லியன் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அடுத்த அதிரடி; பட்ஜெட் விலையில் புதிய மாடல்களை களமிறக்கிய ஓலா!