90ஸ் கிட்ஸ்களின் சூப்பர் ஹீரோ; ஓய்வை அறிவித்த 'டெட்மேன்’ அன்டர்டேக்கர்!
"தற்போது எனது காலம் வந்துவிட்டது. அண்டர்டேக்கர் அமைதியாக ஓய்வெடுக்கும் சூழல் வந்துவிட்டது," என அறிவித்துள்ளார்.
90ஸ் கிட்ஸ்களின் ஆதர்ச நாயகன். ’சோக்ஸ்லாம்’ வாயிலாக எதிரிகளை தூக்கி வீசும் வல்லமை கொண்ட சண்டைக்காரன். இன்னும் சொன்னப்போனால், ’அன்டர்டேக்கருக்கு சாவே இல்லடா’ என்று கூறிக்கொண்டிருந்த 90ஸ் கிட்ஸ்களின் நாயகன் ஓய்வை அறிவித்துள்ளார்.
அவரது வருகைக்கு முன்பே ஒலிக்கும் அந்த பிஜிஎம் போதும் அன்டர்டேக்கர் யார் என்பதைச் சொல்ல. பயத்தை கிளப்பும் பிஜியம் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாகவும், அவரது ரசிகர்களுக்கு, ’தலைவன் வந்துட்டான்டா’ என்ற உற்சாக்கத்தையும் கூட்டக்கூடியது. அப்படியோரு சண்டைக்காரன் ஓய்வை அறிவித்துள்ளார்.
கடந்த ஜுன் மாதம், ‘தி லாஸ்ட் ரைட்’ என்ற ஆவணப்படத்தில் பேசிய அண்டர்டேக்கர்,
மீண்டும் வளையத்திற்குள் வந்து சண்டையிட விரும்பவில்லை என்று அறிவித்தார். அது அவர் ஓய்வுப் பெறுவதை குறிப்பது போல உள்ளது என அவரின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
அந்த சமயத்தில் WWE தரப்பிலிருந்தும், அண்டர்டேக்கர் தரப்பிலிருந்தும் ஓய்வு பெறுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இப்போது தான் அண்டர்டேக்கர் ஓய்வு பெறுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது.
WWE – இல் இருந்து தான் ஓய்வுபெறுவது குறித்து பேசிய அண்டர்டேக்கர்,
"தற்போது எனது காலம் வந்துவிட்டது. அண்டர்டேக்கர் அமைதியாக ஓய்வெடுக்கும் சூழல் வந்துவிட்டது," என தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு வந்ததும் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். 30 ஆண்டுங்களாக WWE-க்காக அர்ப்பணித்து உழைத்த அண்டேக்கருக்கு நன்றி, என WWE வீரர் ஜான் சீனா தெரிவித்துள்ளார்.
ஒரு சின்ன ரீவைண்ட் :
அன்டர்டேக்கரின் இயற்பெயர் மார் காலவே. 1990-ம் ஆண்டு நவம்பர் மாதம் WWE-ல் நுழைந்தவர். ஏறக்குறைய 30 வருடங்கள் இந்த துறையில் நீடித்துக்கொண்டிருக்கிறார். தொழில்முறை சண்டைப் போட்டிகளில் மிகவும் பிரபலம் வாய்ந்த நபராக இருந்தார் அன்டர்டேக்கர்.
55 வயதாகும், அன்டர்டேக்கருக்கு, ‘Deadman’ என்ற பட்டப்பெயரும் உண்டு. ரசிகர்கள் அவரை இந்த பெயரிலும் அதிகம் அழைப்பதுண்டு. டெட்மேன் என்ற பட்டத்துக்கு பின்னால் சுவாரஸ்யம் ஒழிந்துள்ளது.
இறந்து புதைத்த மனிதம் மீண்டு வருவதுபோல, போட்டிகளில் சரிந்து கிடந்தாலும், ஆக்ரோஷத்துடன் மீண்டும் எழுந்து வந்து எதிரிகளை துவம்சம் செய்வதால் டெட்மேன் என்று அழைக்கப்படுகிறார் அன்டர்டேக்கர்.
1987ஆம் ஆண்டு, 'வேல்ட் க்ளாஸ் சாம்பியன்ஷிப்` மூலம் தனது தொழில்முறையை வாழ்க்கையை தொடங்கிய அண்டர்டேக்கர், 1990ஆம் ஆண்டு WWE-ல் இணைந்தார். WWE-ல் புகழ்பெற்றிருந்தாலும், ட்வேயன் ஜான்சனை (THE ROCK) போல படங்களில் நடித்ததில்லை. தனக்கு அதில் விருப்பமில்லை. WWE தான் விருப்பம் என்று கூறியவர்.
"எனது ரசிகர்களை நோக்கி எனக்கு பொறுப்பு உள்ளது. அதேபோல அப்பா மற்றும் கணவராகவும் எனக்கு சில பொறுப்புகள் உண்டு," என்று கூறியிருந்தார் அன்டர்டேக்கர்.
வி மிஸ் யூ டெட்மேன்!