'7.5% இட ஒதுக்கீட்டின் பின்னணியில் உள்ள 'ஹீரோ'க்கள்: யார் இந்த இருவர்?!

By YS TEAM TAMIL|22nd Nov 2020
தமிழகத்தில் மருத்துவச் சேர்க்கையில் 7.5% உள் ஒதுக்கீட்டு கிடைக்க உழைத்த வெளியே அறியப்பட்டாத இரு அரசு மருத்துவர்கள் பற்றி தெரிந்து கொள்ளுன்க்கள்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான தகுதித் தேர்வு நீட், கட்டாயமாக்கப்பட்டு விட்ட நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் போதுமான இடங்கள் கிடைப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டம் ஒன்றை இயற்றியது.


அந்தச் சட்டத்துக்கு ஒப்புதலைப் பெறுவதற்காக அதன் கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டு, காலதாமதமானதால் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது.


அதன்படி, ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிக்கூடங்களில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ் ஆகிய படிப்புகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும்.


தமிழக அரசு பின்பற்றிவரும் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்குள், ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் இது செயல்படுத்தப்படும் என அரசாணை வெளியிடபட்டது. பின்பு ஆளுநர் தமிழக அரசின் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார். இந்த 7.5% உள் ஒதுக்கீட்டு விவகாரத்தில் இரு பேரின் பெயர்கள் பெரிய அளவில் கவனம் பெறவில்லை.


இது தொடர்பாக தனது முகநூலில் எழுதியுள்ள ஐ.ஆர்.எஸ் அதிகாரி பூ.கொ.சரவணன்,

“மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் மருத்துவர். நாராயண பாபு மற்றும் மருத்துவர். செல்வராஜன் 7.5% இட ஒதுக்கீட்டின் பின்னணியில் இருந்த உச்சரிக்கப்படாத நாயகர்கள். இருவரும் அரசுப்பள்ளியின் பிள்ளைகள். சவாலான புறச்சூழல்களை கல்வி, உழைப்பின் துணைகொண்டு வென்று இந்த இடத்தினை அடைந்தவர்கள்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கான கனவிற்கு தங்களை ஒப்படைத்துக் கொண்டார்கள். அதற்கான முனைப்பான முயற்சிகள், தரவுகள் சேகரிப்பு, உழைப்பு என அயராது இயங்கினார்கள். எப்போது ஒப்புதல் வரும் என அவர்களிடையே நிலவிய பதைபதைப்பை கண்ணெதிரில் கண்டபோது கண்ணீர் துளிர்த்தது.


இதோ இன்றைக்கு அரசுப்பள்ளி மாணவர்களிடம் சுயநிதி மருத்துவம்/பல் மருத்துவக் கல்லூரிகள் இடம் மறுக்கக்கூடாது, அவர்களுக்கான கட்டணத்தை தமிழக அரசே முழுவதும் செலுத்தும் எனும் உத்தரவு வெளியாகியிருக்கிறது. அரசு, எதிர்க்கட்சிகள், குடிமைச்சமூகம் ஆகியோரோடு நன்றியோடு இவ்விரு மருத்துவர்களும் நினைவுக்கூரப்பட வேண்டியவர்கள், என்று தெரிவித்துள்ளார்.

தகவல் உதவி: பூ.கொ.சரவணன்