1 நொடிக்கு 319 டெராபிட்ஸ்: அதிவேக இணையத்தில் ஜப்பான் பொறியாளர்கள் புதிய சாதனை!

இணைய வேகத்தில் புதிய சாதனை படைத்துள்ள ஜப்பான் பொறியாளர்கள் முந்தைய அதிவேக இணையத்தை விட இரு மடங்கு வேகத்தை அடைந்துள்ளனர்.
1 CLAP
0

இணைய வேகத்தில் ஜப்பானில் பொறியாளர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். விநாடிக்கு 319 டெராபிட்ஸ் அளவிலான தரவுகளை அனுப்பி வைத்து முந்தைய சாதனையை முறியிடித்துள்ளனர்.

தகவல் தொழில்நுட்ப யுகம் எனச் சொல்லப்படுவதற்கு ஏற்ப நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால், இணைய வசதியின் வேகம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இன்று அகண்ட அலைவரிசை சாத்தியமாகி இருப்பதோடு, அதிவேக இணையமும் சாத்தியமாகி இருக்கிறது.

இந்நிலையில், ஆய்வாளர்கள் இணைய வேகத்தை மேலும் அதிகரிப்பதற்கான பல்வேறு சோதனை முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் பயனாக, விநாடிக்கு டெரா பிட் அளவில்லான தரவுகளை அனுப்பி வைத்து சாத்தியமாகி இருக்கிறது.

இணைய சேமிப்புத்திறனில் ஒரு டெரா பிட்ஸ் என்பது ஆயிரம் கிகா பைட்டாக கருதப்படுகிறது. ஒரு கிகா பைட் என்பது 125 மெகா பைட்டாகும்.

இதனிடையே, கடந்த ஆண்டு யூகே மற்றும் ஜப்பானிய விஞ்ஞானிகள் விநாடிக்கு 178 டெரா பிட்ஸ் தரவுகளை அனுப்பி வைக்கும் இணைய வேகத்தை அடைந்து சாதனை படைத்தனர். இதற்கு முன், விநாடிக்கு 44 டெரா பிட் தரவுகளை அனுப்பும் திறனே சாதனையாக இருந்தது. கடந்த ஆண்டு சாதனை அளவை இரு மடங்காக மிஞ்சும் அளவுக்கு ஜப்பான் பொறியாளர்கள் தற்போது, விநாடிக்கு 319 டெரா பிட்ஸ் இணைய வேகத்தை அடைந்துள்ளனர். மூவாயிரம் கிமீ தொலைவிலான கண்ணாடி இழைப் கேபிள்கள் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

முந்தைய இணைய சாதனையை முறியடித்து உலகின் அதிவேக இணைய இணைப்பை நிகழ்த்தியுள்ளதோடு, ஏற்கனவே இருக்கும் உள்கட்டமைப்பு வசதியை பயன்படுத்தி இந்த சாதனையை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஏற்கனவே உள்ள கண்ணாடி இழை கேபில் அமைப்பில் அலைவரிசை முறையில் நான்கு முக்கிய மாற்றங்களை செய்ததன் மூலம் இந்த சாதனை வேகத்தை அடைந்துள்ளனர்.

இணைய வேகத்தில் புதிய சாதனையை படைத்திருப்பதோடு, அதற்கான பொறியியல் வழியையும் உருவாக்கியிருப்பது முக்கியமாகக் கருதப்படுகிறது. நடைமுறை இணைய பயன்பாட்டில் இது பலவிதமாக பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இணைய வேக சாதனையின் போது, நுகர்வோர் இணையத்தை விட இது 17,800 மடங்கு வேகமானது எனச் சொல்லப்பட்டதை நினைவில் கொள்ளவும். இதன் பயனாக நெட்பிளிக்ஸ் போன்ற சேவைகளில் முழு திரைப்படத்தை ஒரு விநாடியில் டவுன்லோடு செய்யலாம் எனச் சொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தகவல் உதவி: https://interestingengineering.com/japan-shattered-internet-speed-record-319-terabits

Latest

Updates from around the world