Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

வெற்றிகரமான மின்சேவை நிறுவனத்தை நிறுவிய பரத நாட்டியக் கலைஞர் ஜெயலட்சுமி!

நெருக்கடியான சூழலே ஜெயலட்சுமி வெங்கட்நாராயணனை மின்சேவைகள் நிறுவனத்தை துவங்க வைத்தது. பெங்களூருவைசேர்ந்த அவரது யூனிவர்ஸ் பவர் சிஸ்டம்ஸ் நிறுவனம் இன்று, Vertiv மற்றும் கம்மின்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ டீலராக உள்ளது.

வெற்றிகரமான மின்சேவை நிறுவனத்தை நிறுவிய பரத நாட்டியக் கலைஞர் ஜெயலட்சுமி!

Saturday August 06, 2022 , 3 min Read

ஜெயலட்சுமி வெங்கட்நாராயணனின் மின்சாரத் தீர்வுகள் சேவை நிறுவனம், ஒரு நிதி நெருக்கடியில் இருந்து உருவானது.

பரத நாட்டியக் கலைஞரான ஜெயலட்சுமி, 90-களில் வீட்டிலும், பள்ளிகள் மற்றும் பயிற்சி நிலையங்களிலிலும் வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார். அவரது கணவர் கிரானைட் ஏற்றுமதி ஆலையில் பணியாற்றிக்கொண்டிருந்தார். ஆனால், அவரது சம்பளம், குடும்பத்தின் தேவைகளை, குறிப்பாக இரண்டு மகள்களின் தேவையை ஈடு செய்ய போதுமானதாக இல்லை.

அவர்கள் வசித்து வந்த பெங்களூருவில் பொருளாதாரத்தை சமாளிக்க முடியாததால், ஜெயலட்சுமியின் கணவர் திருநெல்வேலிக்கு திரும்ப தீர்மானித்தார். இந்த நிலையில் தான் ஜெயலட்சுமி, சூழ்நிலையில் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு வர்த்தக வாய்ப்புகளை தேடத்துவங்கினார்.

வர்த்தகம்
“என் மகள்களுக்கு தரமான கல்வியை அளிப்பதற்கான வேட்கையுடன் இது துவங்கி நீண்ட தொலைவு வந்திருக்கிறது. பிசினசை துவங்கிய போது எனக்கு குடும்பத்தின் ஆதரவு கிடைக்கவில்லை. எனக்கு ஆதரவு கிடைத்திருந்தால், நடனத்தில் எனக்கு இருந்த ஈடுபாட்டை மிக எளிதாக பின்பற்றியிருப்பேன்,” என்று எஸ்.எம்.பி ஸ்டோரியுடனான பிரத்யேக உரையாடலின் போது ஜெயலட்சுமி கூறினார்.

நெருக்கமானவர்களின் ஆதரவு கிடைப்பது மிகவும் முக்கியம் ஏனெனில் இது ஒருவரின் வாழ்க்கையை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்கிறார் இந்த 62 வயது தொழில்முனைவோர்.

“ஐஐடியில் படிக்க வேண்டும் என்பது எப்போதும் என் கனவாக இருந்தது, எனது வலியை மகள்களும் அனுபவிக்க விரும்பவில்லை. அவர்களுக்கு தரமான கல்வி அளிக்க விரும்பினேன். எனவே, நான் பெங்களூருவிலேயே தங்கியிருக்க தீர்மானித்தேன்,” என்கிறார்.

இந்த முடிவு நல்ல பலனை அளித்தது. அதன் பிறகு, ஜெயலட்சுமி திரும்பி பார்க்கவே இல்லை. இப்போது அவர் ’யூனிவர்ஸ் பவர் சிஸ்டம்ஸ்’ நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

பெங்களூருவைச்சேர்ந்த யூனிவர்ஸ் பவர் சிஸ்டம்ஸ், ஐடி, மருத்துவத் துறை, அரசு, நிதி, கல்வி மற்றும், ஆய்வு நிறுவன வாடிக்கையாளர்களுக்கு தேவையான மின் தீர்வுகளை வழங்குகிறது.

நிறுவனம் ஆன்லைன் வாயிலாக யூபிஎஸ் டீலராக விளங்குகிறது. மேலும், பேட்டரிகள், ஸ்டெபிலைசர்கள், வீட்டு இன்வர்டர்கள், டீசல் ஜெனரேட்டர், செர்வர் ரேக்ஸ், டேட்டா செண்டர் திட்டங்கள் , ஏசி கட்டுப்பாடு அமைப்புகளின் டீலராகவும் விளங்குகிறது.

மின்சாரம், பிரசிஷன் கூலிங், உள்கட்டமைப்பு நிர்வாக அமைப்புகளின் சர்வதேச உற்பத்தியாளரான Vertiv நிறுவனத்தின் டீலராகவும் நிறுவனம் விளங்குகிறது. கம்மின்ஸ், கிர்லோஸ்கர், அமரான், லூமியஸ் ஆகிய நிறுவனங்களின் டீலராகவும் விளங்குகிறது.

“இந்தியாவில் அரசு, BFSI மற்றும் இதர துறைகளில் Vertiv நிறுவனத்தின் ஒரே பங்குதாரராக விளங்குகிறோம்,” என்கிறார்.

நிறுவன துவக்கம்

குடும்பத்திற்காக செயல்படுவது என தீர்மானித்த போது ஜெயலட்சுமி மின்சாரத்துறையை தேர்வு செய்தார். பொறியியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பட்டம் பெற்றிருந்தால் அவருக்கு இது சிக்கலாக இல்லை.

யூனிவர்ஸ் பவர் சிஸ்டர்ம் 1997ல் நிறுவப்பட்டது. இந்தத் துறையில் வாடிக்கையாளர்களை பெறுவது முக்கியம் என உணர்ந்திருந்தார். எனவே, வாடிக்கையாளர்கள் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு அவர்களை தானாக தொடர்பு கொண்டார். மெல்ல வர்த்தகம் வரத்துவங்கியது.

ஆரம்ப நாட்களில் அவர் வர்த்தக நிறுவங்களை அழைத்து, அலுவலகத்தில் கேபிள் அல்லது வயர்கள் அமைக்க உதவி தேவையா எனக் கேட்பார். பின்னர் அந்த பணியை முடித்துக்கொடுத்து, அதற்கு பதிலாக, தனது சேவையாக பரிந்துரைகளை கேட்பார்.

“இந்த பரிந்துரைகள் சாதகமாக அமைந்தன. எனது வருங்கால வாடிக்கையாளர்களுக்கு அவற்றை காண்பித்தேன். அவர்கள் என் மீது நம்பிக்கை கொண்டு இணைந்து செயல்படத்துவங்கினர்,” என்கிறார்.

ரத்தன் டாடாவின் ரசிகரான ஜெயலட்சுமி, அவரை சந்திக்கும் விருப்பத்துடன் அப்போது TATA Liebert ஆக இருந்த Vertiv நிறுவனத்தை அணுகினார்.

“நிறுவனத்தை முதலில் அணுகிய போது, எனக்கு அனுபவம் இல்லாததால், என்னை ஏன் டீலராக நியமிக்க வேண்டும் என பல கேள்விகளை கேட்டனர். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் என்னிடம் பதில் இல்லை. ஆனால், அதிர்ஷ்டம் என் பக்கம் இருந்தது. அவர்கள் என்னை ஒப்பந்தம் செய்து கொண்டனர் என்கிறார் ஜெயலட்சுமி. பரிந்துரை கடிதங்களும் உதவின.”

2005ல் அவரது நிறுவனம் நிலைபெறத்துவங்கியது. நிறுவனம் இதுவரை இந்தியா முழுவதும் 6,000 வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்துள்ளது. மருத்துவமனைகள், ஹோட்டல்கள், நிறுவனங்கள், குடியிருப்புகள் இதில் அடக்கம்.

சொந்தமாக நிறுவனத்தை நடத்துவது லாபகரமானது எனக் கூறும் ஜெயலட்சுமி, நிறுவனத்தின் விற்றுமுதலை தெரிவிக்க விரும்பவில்லை.

Universe Power Systems

சேவைகள்

2021ல் Univer Power Systems நிறுவனம், இந்தியாவிலேயே முதல்முறையாக வை-ஃபை ரவுட்டரை சொந்தமாக உருவாக்கியது. காப்புரிமை பெறப்பட்டு சந்தையில், ஆகஸ்ட் மாதம் முதல் கிடைக்க உள்ளது.

மின்சாரம் இல்லாத போது wi-fi-க்கு மூன்று மணிநேரம் செயல்பாடு அளிக்கக் கூடியதாக இந்த ரவுட்டர் விளங்குகிறது. இதன் விலை ரூ.1,500. இந்தியா முழுவதும் விற்பனைக்கு வர உள்ளது.

சவால்கள்

மிகப்பெரிய மின்சார மற்றும் சேவைகள் பிரிவில் யூனிவர்ஸ் பவர் சிஸ்டம் சிறிய நிறுவனம் என்கிறார் இந்த தொழில்முனவோர். எனவே பெரிய அளவில் விரிவாக்கம் செய்வது சவால் என்கிறார்.

“ஆனால் சவால்கள் வாய்ப்புகளையும் வழங்குகின்றன. என் வழியில் வரும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்கிறேன்,” என்கிறார்.

இதர திட்டங்கள்

2012ல் ஜெயலட்சுமி மீண்டும் நடன ஆர்வத்தை உணர்ந்தார். இன்று அவர் நடன நிகழ்ச்சிகளை வடிவமைத்து தருவதோடு, கலைஞர்களுக்கு உதவும் ’யூனிவர்ஸ் ஆர்ட் பவுண்டேஷனை’ நடத்தி வருகிறார்.

2013ல் ஏற்படுத்தப்பட்ட யூனிவர்ஸ் பிஸ்னஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மூலம் நிறுவனங்கள் மற்றும் சிறுதொழில்களுக்கு ஆலோசனை அளித்து வருகிறார். நிறுவன செயல்பாடுகள் மற்றும் சேவைகளை விரிவாக்கி, சர்வதேச அளவில் செல்ல விரும்புகிறார் ஜெயலட்சுமி.

ஆங்கிலத்தில்: பலக் அகர்வால் | தமிழில்: சைபர் சிம்மன்