மும்பை தாராவி கொரோனா வைரசை விரட்டியது எப்படி?

By YS TEAM TAMIL|22nd Jun 2020
கோவிட்-19 பாதிப்பு மும்பை தாராவியில் மே மாதத்தில் தினமும் சுமார் 43 கேஸ்கள் இருந்த நிலையில் ஜூன் மாதத்தில் 3வது வாரத்தில் சுமார் 19 ஆகக் குறைந்துள்ளது.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

முன்கூட்டியே எடுத்த, ஆக்கபூர்வமான மற்றும் படிப்படியான செயல்பாட்டுக் கொள்கைகள் காரணமாக, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் சேர்ந்து கோவிட்-19 நோய்த் தடுப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் சிகிச்சை அளித்தலில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


இந்த முயற்சியில், பல்வேறு வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்கள், சிகிச்சை நடைமுறைகளை உருவாக்கி, மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. கோவிட்-19 நோய்த் தடுப்பில் கூட்டு வெற்றியைப் பலப்படுத்தும் வகையில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

dharavi

பட உதவி: Outlook

பல மாநிலங்கள் இந்த செயல் திட்டத்தை அமல் செய்து, நல்ல பலன்களை பெற்றுள்ளன. மகாராஷ்டிர அரசு மற்றும் பிரிஹன்மும்பை மாநகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஊக்கம் தரும் வகையில் பலன்கள் கிடைத்துள்ளன. இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக அவர்கள் ‘வைரசை விரட்டியடித்து' கோவிட் பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களைத் தடமறிதலில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.


மக்கள் நெருக்கம் அதிகமாக (ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 2,27,136 பேர்) உள்ள நிலையில் தாராவியில் ஏப்ரலில் 491 பேருக்கு இந்த நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. அப்போது அது 12 சதவீதம் நோய்த் தாக்குதல் அதிகரிப்பாக இருந்தது. நோய்த் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் 18 நாட்களாக அப்போது இருந்தது. மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் காரணமாக, 

நோய்த் தாக்குதல் பரவும் வேகம், மே மாதத்தில் 4.3 சதவீதம் அளவுக்குக் குறைந்து, ஜூன் மாதத்தில் 1.02 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இதன் காரணமாக, நோய்த் தாக்குதலுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் மே மாதத்தில் 43 நாட்களாக அதிகரித்து, ஜூன் மாதத்தில் 78 நாட்களாக உயர்ந்துள்ளது.

மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் பொதுக் கழிப்பறையைச் சார்ந்திருக்கும் தாராவியில், மாநகராட்சி நிர்வாகத்துக்குப் பல சவால்கள் ஏற்பட்டன.


நெருக்கமான சிறிய வீடுகளில் 8-10 பேர் வாழ்கின்றனர். 10 அடிக்கு, 10 அடி உள்ள அறையில் அவர்கள் வாழ்கின்றனர். தெருக்களும் குறுகலானவையாக உள்ளன. 2-3 அடுக்குகள் கொண்ட மாடி வீடுகள், பெரும்பாலும் தரைத்தளம் வீடாகவும், மற்ற தளங்கள் தொழிற்சாலை நடைபெறுபவையாகவும் உள்ளன. எனவே, சமூக இடைவெளியைப் பராமரித்தலில் நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன. ‘வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்வது' என்பதற்கான வாய்ப்பு கிடையாது.

தடமறிதல், பின்தொடர்தல், மருத்துவப் பரிசோதனை செய்தல் சிகிச்சை அளித்தல் என்ற நான்கு விஷயங்களில் மாநகராட்சி நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தியது. ஆக்கபூர்வமாக மேலோட்டப் பரிசோதனை நடத்துவதும் இதில் அடங்கும். டாக்டர்கள் மற்றும் தனியார் கிளினிக்குகள் மூலம் வீடு வீடாக பரிசோதனை செய்ததில் 47,500 பேருக்கு பரிசோதனை நடைபெற்றது. நடமாடும் வேன்கள் மூலம் 14,970 பேருக்கும்,  மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் மூலம் 4,76,775 பேருக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

வயதானவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் போன்ற, நோய்த் தாக்குதலுக்கு எளிதில் ஆளாகும் ஆபத்துப் பிரிவில் உள்ளவர்களுக்குப் பரிசோதனை நடத்துவதற்கு  காய்ச்சலுக்கான சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டன. அவற்றின் மூலம் 3.6 லட்சம் பேருக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.


மேலும், ‘உரிய காலத்தில் பிரித்து வைத்தல்' கொள்கையின் ஓர் அம்சமாக 8246 மூத்த குடிமக்களுக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டது. அவர்களுக்கு நோய் பரவாமல் தடுப்பதற்காக, மற்றவர்களிடம் இருந்து அவர்கள் பிரித்து வைக்கப்பட்டனர்.


மொத்தத்தில் தாராவியில் 5,48,270 பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. நோய்த் தாக்குதல் ஏற்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்கள், நல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள கோவிட் சிகிச்சை மையங்களுக்கும், தனிமைப்படுத்தல் மையங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

               

அதிக பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ள பகுதிகளில் பரிசோதனை செய்வதற்கான ஆள் பலத்துக்கு ஏற்பாடு செய்வதைப் பொருத்த வரையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய செயல் திட்ட அணுகுமுறையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.


கிடைக்கக் கூடிய அனைத்து ‘தனியார்' மருத்துவர்களின் சேவைகளையும் பயன்படுத்திக் கொண்டது. தனியார் டாக்டர்களுக்கு, தனிப்பட்ட முழு உடல் பாதுகாப்புக் கவச உடைகள் (பி.பி.இ. உடை), வெப்பமானிகள், நாடித் துடிப்பறியும் ஆக்சிமீட்டர்கள்,  முகக்கவச உறைகள் மற்றும் கையுறைகளை மாநகராட்சி நிர்வாகம் அளித்து, அதிக பாதிப்பு வாய்ப்புள்ள பகுதிகளில் வீடு வீடாகப் பரிசோதனைகளை நடத்தியது.

நோய்த் தாக்குதல் ஏற்பட்டதாக சந்தேகப்படும் நபர்கள் இதில் அடையாளம் காணப்பட்டனர். தனியார் கிளினிக்குகளை திறக்குமாறு தனியார் மருத்துவர்களை மாநகராட்சி நிர்வாகம் ஊக்குவித்தது. தங்களிடம் வரும் நோயாளிகளில் கோவிட்-19 பாதிப்பு இருப்பவர்கள் யாரும் இருந்தால் தங்களுக்குத் தெரிவிக்கும்படி மாநகராட்சி கேட்டுக் கொண்டது.

தனியார் மருத்துவர்களின் கிளினிக்குகளில் மாநகராட்சி நிர்வாகம் கிருமிநீக்கம் செய்து கொடுத்து, தேவையான அனைத்து உதவிகளையும் அளித்தது. நகரில் சுகாதாரக் கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் வகையில், அனைத்து தனியார் மருத்துவமனைகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு, சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டன.


வீட்டில் தனிமைப்படுத்தல் என்பது நடைமுறை சாத்தியமற்ற நிலையில்,  வளாகங்களுக்கு அழைத்து வந்து தனிமைப்படுத்துவதற்காக,  பள்ளிக்கூடங்கள்,  திருமண மண்டபங்கள், விளையாட்டு வளாகங்கள் போன்ற இடங்கள் பயன்படுத்தப்பட்டன. காலை, மதியம் மற்றும் இரவு உணவு தயாரிக்க பொதுவான சமையல் வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

24 மணி நேரமும் மருத்துவச் சேவைகள் கிடைக்கவும், தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கோவிட்-19 நோய்த் தடுப்பில் மாநகராட்சியின் செயல் திட்டத்தில் மூன்று முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. சிறப்பான நோய்த் தடுப்பு செயல் திட்டம், விரிவான பரிசோதனைகள் நடத்துதல் மற்றும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்கச் செய்தல் என்ற மூன்று அம்சங்களும் சிறப்பாகக் கடைபிடிக்கப்பட்டன.


தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் மட்டுமே தாராவியில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர். 90 சதவீத நோயாளிகளுக்கு தாராவி பகுதியிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மளிகைப் பொருள்களின் தொகுப்புகளையும், மதியம் மற்றும் இரவு உணவாக 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்களையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் அளித்தது.


பொது மக்கள் வீட்டிலேயே தங்கி இருக்கவும், எந்தத் தேவைக்காகவும் வெளியில் வராமல் தடுத்து, அதன் தொடர்ச்சியாக நோய்ப் பரவலைத் தடுக்க இது உதவிகரமாக இருந்தது. உள்ளூர் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாமன்ற உறுப்பினர்கள் உணவு மற்றும் மளிகைப் பொருள்களை இலவசமாக வழங்கினர்.


கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும், பொதுக் கழிப்பறைகளிலும் அடிக்கடி கிருமிநீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அலுவலர்கள் பயணத்துக்காக எம்.எஸ்.ஆர்.டி.சி. பேருந்துகள் இயக்கப்பட்டன. அதிக பாதிப்பு ஏற்படும் மண்டலம் அனைத்து பகுதிகளிலும் மூடப்பட்டு மக்கள் நடமாட்டம் தடுக்கப்பட்டது.


சமுதாயத் தலைவர்கள் ‘கோவிட் யோதா (வீரர்)' ஆக நியமிக்கப்பட்டனர். அந்தப் பகுதி மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது, சுகாதார அலுவலர்கள் மற்றும் தங்கள் பகுதி மக்களுக்கு இடையே பாலமாக செயல்படுவது இவர்களின் பணியாக உள்ளது. இதனால் எந்த அச்சமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. எந்தக் கவலையும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. அரசின் முயற்சிகளில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இது அமைந்தது.


தகவல் உதவி: பிஐபி

Get access to select LIVE keynotes and exhibits at TechSparks 2020. In the 11th edition of TechSparks, we bring you best from the startup world to help you scale & succeed. Register now! #TechSparksFromHome