மண் இல்லாமல் வீட்டிலே காய்கறிகள், பூக்கள் வளர்க்கலாம் தெரியுமா?

மண்ணைப் பயன்படுத்தாமல் காய்கறிகளையும் பூக்களையும் வீட்டில் வளர்க்க உதவிடும் இயந்திரம் இது.

10th Mar 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

டெல்லியைச் சேர்ந்த புதிய நிறுவனம் 'அக்ரோட்டுயோ' என்ற ஒரு தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது மக்கள் மண்ணைப் பயன்படுத்தாமல் காய்கறிகளையும் பூக்களையும் வீட்டில் வளர்க்க உதவிகரமாக இருக்கும். இந்த தொழில்நுட்பத்தினால் நீர் வீணடிக்கப்படுவதில்லை. 

5

இன்றைய காலகட்டத்தில், பிஸியான வாழ்க்கை முறை மற்றும் இடவசதி இல்லாததால், வீட்டில் கரிம (ஆர்கானிக்) காய்கறிகளை உற்பத்தி செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றாலும் மறுபுறம் சந்தையில் அதிக பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்திய காய்கறிகளே  கிடைப்பதால் அவை ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கிறது. அதே நேரத்தில் பொதுவான சந்தையில் கிடைக்கும் கரிம (ஆர்கானிக்) காய்கறிகளின் விலை, நடுத்தர மக்கள் வாங்கமுடியாத அளவில் உள்ளது. 


மண் இல்லா இயந்திர விவசாயம்


இந்த பிரச்சினைக்கான தீர்வை டெல்லியை மையமாகக் கொண்ட அக்ரிடெக் தொடக்க நிறுவனமான 'அக்ரோ20’  கொண்டு வந்துள்ளது. தொடக்க நிறுவனமான இது, ஒரு தனித்துவமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மண்ணற்ற தாவரங்களை வளர்க்கும் செயல்முறையை எளிதாக்கியுள்ளது.

நாட்டிலுள்ள எல்லா இடங்களிலும் செயற்கை நுண்ணறிவு, இணையம்  மற்றும் இயந்திரக் கற்றல் பற்றிய பேச்சு இருக்கும்போது, ​​இந்த நேரத்தில், இந்த தொழில்நுட்பமும் மக்களிடையே தனக்கான இடத்தை உருவாக்க முழுமையாகத் தயாராக உள்ளது. இந்த தொடக்க நிறுவனம் இதை செயல்படுத்த ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளது, இதன் உதவியுடன் மண்ணற்ற காய்கறிகளை வீட்டிலேயே மிக எளிதாக வளர்க்க முடியும்.

"ஹைட்ரோபோனிக்ஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மக்களுக்கு மண் இல்லாத திறமையான தோட்டங்களை நாங்கள் வழங்கி வருகிறோம், இதன் கீழ் அனைத்து மக்களும் தங்கள் வீடுகளில் ரசாயனம் அல்லாத  தாவரங்களை வளர்க்க முடியும்," என்கிறார் நிறுவனத்தின் நிறுவனர் யஷ் வியாஸ்

ஹைட்ரோபோனிக்ஸ் என்பது ஒரு நுட்பமாகும், இதன் மூலம் மண்ணற்ற விவசாயம் செய்யப்படுகிறது. இந்த விவசாயம் நீர் மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் விவசாயத் தொழில் நுட்பங்களில் ஒன்றாகும். 


எளிதாக இருப்பதால், உலகெங்கிலும் உள்ள மக்கள் இதை மிக வேகமாகப் பயன்படுத்தி  வருகின்றனர். இந்த நுட்பத்தின் உதவியுடன், தண்ணீர் வீணடிக்கப்படுவதில்லை. இந்த செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் தண்ணீரை மறுசுழற்சி செய்ய முடியும்.


வன்பொருள் மற்றும் மென்பொருள் அடிப்படையிலான அமைப்புகளின் உதவியுடன், 'அக்ரோ 2O' செடி வளர்ப்பு செயல்முறையை முழுமையாக தானே செயல்படும்படி செய்தது.

“கடந்த மூன்று மாதங்களில் 300-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை நாங்கள் பெற்றுள்ளோம்,” என்றார் யஷ் வியாஸ்.

நகரங்களில் குறிப்பாக மெட்ரோ நகரங்களில் வாழும் மக்களுக்கு, கரிம வேளாண்மை மீது விருப்பம் இருந்தும் அவர்களால் பயிரிட்டு வளர்க்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த சாதனம் மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

How has the coronavirus outbreak disrupted your life? And how are you dealing with it? Write to us or send us a video with subject line 'Coronavirus Disruption' to editorial@yourstory.com

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India