பதிப்புகளில்
நியூஸ் வியூஸ்

தேர்தல் 2019: ஓட்டு போடும் நேரம் நெருங்கிடுச்சு, உங்கள் வேட்பாளர்கள் யார் என தெரிந்து கொள்ளுங்கள்!

Election 2019: பிரத்தியேக செயிலி, ஆன்லைன் தளங்கள் என பலரும் தமிழக லோக்சபா தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வாக்காளர்களுக்கு உதவி வருகின்றனர்.

YS TEAM TAMIL
15th Apr 2019
Add to
Shares
12
Comments
Share This
Add to
Shares
12
Comments
Share

இது தேர்தல் 2019, இந்தியா முழுவதும் ஒவ்வொரு கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடந்துக்கொண்டு வருகிறது. இன்னும் இரு நாட்களில் தமிழகத்தில் தேர்தல் அரங்கேற உள்ளது, இந்நிலையில் நமது வேட்பாளர்களை முழுமையாக தெரிந்து கொண்டு நமது வளர்ச்சிக்கும் நம் நாட்டின் வளர்ச்சிக்கும் ஏற்ற வேட்பாளருக்கு வாக்களிப்பது அவசியம்.

நம் வாக்காளரை நாம் அறிந்துக்கொள்ள பிரத்தியேக செயிலி ஒன்றை வெளியிட்டுள்ளது 'அறப்போர் இயக்கம்'.

பட உதவி: The Newsminute

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அறப்போர் இயக்கம் எனும் சமூக அமைப்பு, நம் வேட்பாளர்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்யக் கூடிய இச்செயலியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வேட்பாளர்களின் தகவல்கள் உள்ளது.

வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவில் தாக்கல் செய்த வருடாந்திர வருமானம் கடந்த ஐந்து ஆண்டுகளில், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள், நிலுவையிலுள்ள குற்ற வழக்குகள், கல்விப் பிண்ணனி மற்றும் தொழில் ஆகிய தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இச்செயலியில் பெறலாம்.

இது குறித்து தி நியுஸ் மினிட்டிற்கு அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் பகிர்கையில்,

“வேட்பாளர்கள் வெளியிட்ட இத்தகவல்கள் ஒரே மொழியில் இல்லை, இதனால் மக்களுக்கு அத்தகவல்களை உள்வாங்கி கொள்வதற்கு சிரமமாக இருக்கும். மொழி பெயர்ப்பு செய்து எவரும் தெரிந்துக்கொள்ளப் போவதில்லை. அதனாலே இந்த செயிலி வாயிலாக ஒருங்கிணைத்து எல்லாவற்றையும் வெளியிட்டுள்ளோம்,” என தெரிவித்தார்.

மக்கள் வேட்பாளரை அறிந்து வாக்கிடுவது மிகவும் முக்கியம். ஊடகம் வழியாக சில தொகுதிகளைப் பற்றி தெரிந்துக்கொண்டாலும் அது முக்கிய வேட்பாளர்கள் பற்றியே தெரிவிக்கிறது. ஒரு தொகுதிக்கு மட்டும் 20-30 வேட்பாளர்கள் உள்ளனர். அறப்போர் செயிலி அனைத்து வேட்பாளர்கள் தகவல்களையும் உங்கள் மொழியில் அளிக்கிறது.

இந்த செயிலிக்கான வேலையை மார்ச் 26 தொடங்கி 200 தன்னார்வளர்கள் உதவியோடு ஒருகினைத்துள்ளனர். இது குறித்து எடெக்ஸ் நாளிதலில் பேசிய அறப்போர் தன்னார்வளர் தீபா,

“myneta.in என்னும் தளம் இந்தியா முழுவதும் உள்ள வேட்பாளர்களின் தகவல்களை கொண்டுள்ளது. அதிலிருந்து சுருக்கி தமிழக மக்களுக்கு எளிமையாக வழங்கவே இந்த செயிலியை உருவாக்கியுள்ளோம்,” என்கிறார்.

உங்கள் வேட்பாளரை நீங்கள் தெரிந்துக்கொள்ள செய்ய வேண்டியது எல்லாம், செயிலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் தொகுதியை க்ளிக் செய்தால் உங்கள் வேட்பாளர்களின் பட்டியல் அவர்கள் போட்டியிடம் கட்சி சின்னம், புகைப்படம், தொழில், ஆண்டு வருமானம், சொத்து விவரம் மற்றும் வழக்குகளை விவரத்தோடு காண்பிக்கும்.

“கட்சிகளை பார்த்து வாக்களிப்பதை விட நம் தொகுதி வேட்பாளர்களின் விவரங்களை தெரிந்துகொண்டு அவர்களில் சிறந்தவர்களுக்கு வாக்களிப்பதே சிறந்தது. அதற்காகவே எங்கள் குழு இரவு பகல் பாராமல் உழைத்துள்ளது,” என்கிறார்.

செயிலி பதிவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.api.ngo

இதே போல் தமிழ்நாடு மட்டுமின்றி தேசிய அளவில் உள்ள எல்லா தொகுதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது Myneta என்ற தளம். பட்டியலோடு ஒவ்வொரு வேட்பாளர்கள் பற்றிய மற்ற தகவல்களும் இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. http://myneta.info/LokSabha2019/

இந்தியா முழுவதும் போட்டிப்போடுகின்ற வேட்பாளர்கள் பட்டியலை ஒருங்கிணைத்து மக்கள் பார்வைக்கு அளித்துள்ளது தேர்தல் ஆணையம். அனைத்துத் தொகுதி வேட்ப்பாளர்கள் பட்டியலை இங்கு காணாலாம்: http://www.elections.in/tamil-nadu/parliamentary-constituencies/candidate-list.html

மேலும் தமிழக வேட்பாளரை பற்றி தெரிந்துகொள்ள தொகுதி வாரியாக பட்டியலை தமிழக அரசும் வெளியிட்டுள்ளது. இங்கு உங்கள் வேட்பாளர்களை தெரிந்து கொள்ளலாம்: http://www.tn.gov.in/government/loksaba

நமது வேட்பாளர்களை நாம் தெரிந்துக்கொள்வது குடிமக்களாகிய நமக்கு கடமை. வேட்பாளர்களை அறிவோம் சிறந்த எதிர்காலத்திற்கு வாக்களிப்போம்!

கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்

Add to
Shares
12
Comments
Share This
Add to
Shares
12
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக