Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

கல்லூரிப் படிப்பை முடித்ததும் முதல் வேலை தேடுவது எப்படி?

கல்லூரிப் படிப்பை முடித்ததும் முதல் வேலை தேடுவது எப்படி?

Wednesday June 19, 2019 , 3 min Read

உங்கள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, பணி வாழ்க்கையை துவக்க காத்திருக்கிறீர்களா?

பல புதிய பட்டதாரிகளுக்கு, கல்லூரியை முடித்த பிறகு, வேலை தேடுவது என்பது கடினமானதாக இருக்கலாம். நீங்கள் பட்டதாரி என்பதால் மட்டும் வேலை கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது. உங்கள் கனவு வேலையை பெற மேலும் அதிக உற்சாகம் தேவை. எனினும் இது அப்படி ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானமும் இல்லை.

உங்கள் வேலை தேடும் படலத்தை வெற்றிகரமாக துவங்குவதற்கான வழிகள் இதோ:

job

கல்லூரி மையம்

உங்கள் கல்லூரியில் இருந்து துவக்குங்கள். பெரும்பாலான, கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஆலோசனை சொல்வதற்கான கேரியர் மையம் இருக்கிறது. உங்கள் கல்லூரி கேரியர் மையத்திற்குச் சென்று, அங்குள்ள ஆலோசகரிடம் வேலை வாய்ப்புக்கான வழிகள் குறித்து கேளுங்கள்.

எந்த பாதையை தேர்வு செய்வது என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றாலும் கவலை வேண்டாம், கேரியர் ஆலோசகர் உங்களுக்கு வழிகாட்டுவார். உங்கள் இலக்கை கண்டறிதல், ரெஸ்யூமை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு தேடல் திட்டத்தை உருவாக்குவது ஆகியவற்றில் அவர் உதவுவார்.

மேலும், கல்லூரிகளில் வேலைவாய்ப்பு முகாம் போன்றவையும் நடைபெறு. அவற்றை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

உங்கள் வலைப்பின்னல்

வலைப்பின்னல் மூலம் வேலை தேடுவது சிறந்தது. இளம் பட்டதாரியாக இது குழப்பம் அளிப்பதாக இருந்தாலும், வேலை பெற இது ஏற்றது. வேலைதேடுபவர் மற்றும் நிறுவனங்கள் இடையே பாலமாக விளங்கும் LinkedIn தளத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதலில் உங்கள் அறிமுக பக்கத்தில், முழு ரெஸ்யூமை இடம்பெறச் செய்யுங்கள். அது தொடர்பான ஆலோசனைக்கோருங்கள். இதன் மூலம் உங்கள் ரெஸ்யூமை மேம்படுத்தி, தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளலாம். நிறுவனங்களின் எதிர்பார்ப்பு பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.  

உங்கள் திறன்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்பை தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்கள் தொடர்புகளுக்கு தெரியட்டும். இங்கு மேற்கொள்ளும் உரையாடல்கள் உங்களைப்பற்றிய நல்லெண்ணத்தையும் ஏற்படுத்தலாம். வேலைவாய்ப்புக்கான சரியான தொடர்பையும் கண்டடையலாம்.

ரெஸ்யூம்

மற்ற போட்டியாளர்களிடம் இருந்து உங்களை தனித்து நிற்கச் செய்யும் அம்சங்களை யோசித்து அதை, உங்கள் ரெஸ்யூமில் குறிப்பிடவும். உங்கள் பணி இலக்கு தொடர்பான, திறன்கள், அனுபவங்கள், திட்டங்கள், ஆய்வுகள் ஆகியவற்றை குறிப்பிட்டு ரெஸ்யூமை ஈர்ப்புடையதாக மாற்றுங்கள். சமூகப் பணியில் ஆர்வம் இருந்தால் அதையும் குறிப்பிடுங்கள்.  

முதலில் ஏற்படுத்தும் தாக்கமே சிறந்ததாகும். உங்கள் கவர் லெட்டர் மூலம் உங்களைப்பற்றி சரியாக தெரிவியுங்கள். வழக்கமான எழுத்து முறையை தவிர்த்து, சுவாரஸ்யமாக எழுதி, உங்கள் திறமைகள், அனுபவங்கள் பற்றி குறிப்பிடுங்கள்.

தேவையில்லாத விவரங்களை தவிர்க்கவும். சமர்பிப்பதற்கு முன், மற்றவர்களிடம் ஆலோசனை கேளுங்கள். ஆலோசர்கள் சொல்லும் கருத்துகள் உங்கள் ரெஸ்யூமை மேம்படுத்தும். முக்கியமாக எழுத்து பிழைகள் , இலக்கணப் பிழைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

நிறுவனங்களை அறிதல்

நீங்கள் பணியாற்ற விரும்பும் மற்ற நிறுவனங்களைக் கண்டறியுங்கள். உங்கள் கல்லூரி கேரியர் மையத்துடன் தொடர்பில் உள்ள நிறுவனங்கள் தவிர மற்ற நிறுவனங்களையும் தேடுங்கள். நிறுவனங்களின் இணையதளங்களில் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களைப் பாருங்கள்.

லிங்க்டுஇன் தளத்தில் உள்ள ஜாப் சர்ச் வாய்ப்பு மூலம், உங்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்பை தேடலாம். உங்கள் அறிமுகப் பக்கத்தில், வேலைவாய்ப்பு தொடர்பான எதிர்பார்ப்பை உணர்த்துவதன் மூலம் நிறுவனங்கள் உங்களை அணுகச்செய்யலாம்.  

வேலைவாய்ப்பு தளங்கள் வாயிலாக தகவல்களை பெறுங்கள். பெரும்பாலான வேலைவாய்ப்பு தளங்கள், வேலை தேடுபவர்கள் மற்றும் நிறுவனங்களை இணைக்கும் வகையில் செயல்படுகின்றன.

அவை, நிறுவனங்கள் வேலைவாய்ப்பை அடையாளம் காட்டுவதோடு, வேலை தேடுபவர்கள் அறிமுகச் சித்திரத்தையும் அடையாளம் காட்டுகின்றன. புதிய வேலைவாய்ப்பை கண்டறிய உதவும் மொபைல் செயலிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கவும்

முதல் கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு, உங்கள் விண்ணப்பங்களை அனுப்பத் துவங்குங்கள். நீங்கள் விண்ணப்பம் அனுப்பிய நிறுவனங்கள் தொடர்பான விவரங்களை குறித்து வையுங்கள். விண்ணப்பங்களை அனுப்பி, பின்னர் அவற்றின் நிலை அறிவதில் கவனம் செலுத்துங்கள்.   

பயிற்சி ஊழியர்

பயிற்சி நிலை ஊழியராக பணியாற்றுவது, உங்கள் பல்வேறு பணி வாய்ப்பு அனுபவங்களை வழங்கும். முன் அனுபவம் இல்லாத நிலையில் இளம் பட்டதாரியாக, உடனே வேலை கிடைப்பது கடினம் தான்.

பல நிறுவனங்கள் கல்லூரியில் இருந்து வரும் பட்டதாரிகளுக்கு பயிற்சி ஊழியர் வாய்ப்பு அளிக்கின்றன. இத்தகைய நிறுவனங்களை அணுகி அனுபவம் பெறுங்கள். பல பயிற்சி நிலைப் பணிகள் எந்த ஊதியமும் அளிக்காமல் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனினும் அனுபவம் கைகொடுக்கும்.

கட்டுரையாளர்: வலைப்பதிவாளர் மியா வக்கர் | தமிழில் :சைபர்சிம்மன்

( பொறுப்புத்துறப்பு: இது எங்கள் வாசகர் ஒருவரால் எழுதப்பட்ட யுவர்ஸ்டோரி கம்யூனிட்டி பதிவு. இந்த பதிவில் உள்ள புகைப்படம் மற்றும் உள்ளடக்கம் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரியது. இங்கு இடம்பெறும் உள்ளடக்கம் ஏதேனும், உங்கள் காப்புரிமையை மீறுவது என கருதினால் எங்களுக்கு தெரிவிக்கவும்)