என் வயது 25, முதல் வேலை கிடைத்துள்ளது! நிதி விஷயங்களை நான் திட்டமிடுவது எப்படி?

By YS TEAM TAMIL|1st Apr 2019
நீங்கள் இளம் வயதினர் என்றால், உங்கள் நிதி விஷயங்களை திட்டமிடுவது பற்றி யோசிப்பதே பாதி வெற்றி தான்.
Clap Icon0 claps
 • +0
  Clap Icon
Share on
close
Clap Icon0 claps
 • +0
  Clap Icon
Share on
close
Share on
close

மார்ச் மாதம் எப்போதுமே நிதி விஷயங்களுக்கு கடினமான மாதம் தான். உங்கள் வரிகள், செலவுகளை திட்டமிடாவிட்டால், பணம் எங்கே போச்சு என நீங்கள் குழம்பிக்கொண்டிருக்கலாம். இது வழக்கமானது தான். ஆனால், நீங்கள் இளம் வயதினர் என்றால், உங்கள் நிதி விஷயங்களை திட்டமிடுவது பற்றி யோசிப்பதே பாதி வெற்றி எனலாம்.  

இது போல ஒரு சிக்கலான மார்ச் மாதத்தை மீண்டும் ஒரு முறை எதிர்கொள்ளக்கூடாது என நீங்கள் நினைத்திருந்தால் உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் வயதை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, கீழ் கண்ட எளிய விஷயங்களை மனதில் கொண்டாலே இந்த உங்கள் நோக்கத்தை எளிதில் நிறைவேற்றிக்கொள்ளலாம்.

1. வரிக்கு பிறகான ஊதியத்தில் 30 சதவீதம் சேமிப்பு  

இளம் வயதில் ஏற்படுத்திக்கொள்ளும் பழக்கம் உங்களுக்கு ஆயுள் முழுவதும் இருக்கும். வரவுக்குள் செலவு செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வரிக்கு பிறகான ஊதியத்தில் 30 சதவீதம் சேமியுங்கள். உங்கள் பணி வாழ்க்கையில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு இவ்வாறு செய்தால் இது பழக்கமாகிவிடும்.

2. ஊதியம், செலவுகளுக்கு தனிக்கணக்கு

உங்கள் செலவு (ஊதியம்) மற்றும் முதலீட்டு சேமிப்புக் கணக்கை தனித்தனியே வைத்திருக்கவும். உங்கள் ஊதியத்தில் 30 சதவீதத்தை முதலீட்டு கணக்கிற்கு மாற்றவும். இப்படி தொடர்ந்து செய்தால், செலவுகளை எளிதாக கட்டுப்படுத்தலாம். விலை உயர்ந்த ரெஸ்டாரண்ட் விஜயங்களுக்கு நீங்கள் இல்லை என சொல்ல பழக வேண்டியிருக்கும். அல்லது ஏதேனும் பொருளை வாங்க விரும்பினால் தள்ளுபடிக்கு காத்திருக்கும் பழக்கம் ஏற்படலாம். இவை பழக்கமாக மாறும்.

கோடீஸ்வரர்கள் பலரது முதல் கார் பழைய கார் என்பது உங்களுக்குத்தெரியுமா? விப்ரோ நிறுவனர், தான் கோடீஸ்வரரான பிறகு ஊழியர் ஒருவரிடம் இருந்து பழைய காரை வாங்கியதாக பிரபலமாக சொல்லப்படுவதுண்டு.

3. எங்கு முதலீடு செய்வது?

 • அவசர தேவைக்காக கொஞ்சம் பணத்தை எடுத்து வைக்கவும். இளம் வயதில், 3 முதல் 6 மாத கால அடிப்படை செலவுக்கான தொகை இதற்காக தேவை. இதை லிக்விட் ஃபண்டில் போட்டு வைக்கலாம். (வைப்பு நிதியில் அல்ல).
 • எஞ்சிய பணத்தை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் போடுங்கள்.  
 • வரி சேமிக்கும் அளவுக்கு இ.எல்.எஸ்.எஸ் – ல் முதலிடு செய்திருப்பதை உறுதி செய்யுங்கள். இது வரி சேமிப்பு அளிப்பதோடு, நீண்ட கால நோக்கில் பலன் அளிக்கும்.
 • ஆயுள் காப்பீடு திட்டங்களை தேர்வு செய்யும் முன், வீட்டுக்கடன், குழந்தைகள் கல்வி போன்ற நிச்சயம் செலவுகளை தீர்மானித்துக்கொள்ளவும்.  

4. கிரெடிட் கார்டு கவனம்

 • வீடு வாங்க அல்லது உயர் கல்விக்கு கடன் வாங்குவது ஏற்றது. மற்ற கடன்களை தவிர்ப்பது நல்லது.  
 • டிஜிட்டல் பண பரிவர்த்தனை இருப்பதால், கிரெடிட் கார்டு பயனுள்ளதாக இருக்கும். ஆனால், கிரெடிட் கார்டு தொகையை உரிய நேரத்தில் தவறாமல் செலுத்துங்கள்.

5. காலம் உங்கள் பக்கத்தில்

கீழ்கண்ட அட்டவனை உங்கள் பணம் பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளில் இரட்டிப்பாக தேவைப்படும் காலம் மற்றும் பணவீக்கத்தை வெல்லும் தன்மை உணர்த்தப்பட்டுள்ளது. காலம் அதிகம் எனில், ரிஸ்க் அளவு குறையும்.

காலம் உங்கள் பக்கம் இருப்பதால், முதலீடு செய்வது உங்களுக்கு நல்ல பலன் தரும். முதலீடு உலகிற்கு வாருங்கள். நிதி சுதந்திரத்தை நோக்கி முன்னேறுவது, உங்களுக்கு மகிழ்ச்சியை தராவிட்டாலும், வாழ்க்கையில் பல்வேறு தேர்வுகளை அளிக்கும்.

ஆங்கில கட்டுரை: ஸ்கிர்ப் பாக்ஸ் குழு (www.scripbox.com) | தமிழில்: சைபர்சிம்மன்