மழைக்காலத்தில் உங்கள் காரை பாதுகாக்க வேண்டுமா? - ‘இன்சூரன்ஸ் ஆட்-ஆன்’ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
இன்சூரன்ஸ் ஆட்-ஆன்களை ஆடம்பரமான செலவாகக் கருதுபவர்களுக்கு, ஒரு விரிவான கார் இன்சூரன்ஸ் பாலிசி சில சேதங்களை மட்டுமே ஈடுகட்டக்கூடும் என்பதையும், அதிக ரிப்பேர் பில்லும் வரக்கூடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே, கார் இன்சூரன்ஸ் ஆட்-ஆன் கவர்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.
பருவமழை தொடங்கிவிட்டாலே மகிழ்ச்சியை கொண்டாடிய காலம் மாறி, மழையைப் பார்த்தாலே பயந்து அஞ்சும் அளவிற்கு சுற்றுச்சூழலை சீர்குலைந்து வைத்துள்ளோம்.
கடந்த சில ஆண்டுகளாக சென்னை, பெங்களூரு, கொச்சி, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பெருநகரங்கள் கனமழைக்கு என்னனென்ன மாதிரியான பிரச்சனைகளை சந்தித்து வருகிறது என்பதே இதற்கு சிறந்த உதாரணம். சில நாட்கள் மழை பெய்தாலே சாலைகளை சூழும் மழைநீர், பாலங்கள் உடைவது, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்ற சீரழிவுகளை கொண்டு வருகிறது.
இது போன்ற வெள்ளப்பெருக்குகளும், அதிக கனமழையும் பெரும்பாலும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார்களுக்கு தீங்கு விளைவிக்கும், மேலும் அதிக ரிப்பேர் செலவுகளைக் கொண்டு வரலாம். நீங்கள் என்ன தான் உங்களுடைய காரை இன்சூரன்ஸ் செய்திருந்தாலும், அவை சில சமயங்களில் கைகொடுக்காமல் போகலாம். இதுபோன்ற சமயங்களில், ’கார் இன்சூரன்ஸ் ஆட்-ஆன்’ கார் உரிமையாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
கார் இன்சூரன்ஸ் ஆட்-ஆன் என்றால் என்ன?
இன்சூரன்ஸ் ஆட்-ஆன்களை ஆடம்பரமான செலவாகக் கருதுபவர்கள், ஒரு விரிவான கார் இன்சூரன்ஸ் பாலிசி சில சேதங்களை மட்டுமே ஈடுகட்டக்கூடும் என்பதையும், அதிக ரிப்பேர் பில்லும் வரக்கூடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே, கார் இன்சூரன்ஸ் ஆட்-ஆன் கவர்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.
மோட்டார் இன்சூரன்ஸ் தலைவர் நிதின் குமார் பேட்டி ஒன்றில் கூறுகையில்,
“மலைப் பகுதிகளில், நிலச்சரிவுகள் வாகனங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில், இந்த சேதம் காரை சரிசெய்ய முடியாத அளவிற்கு இருக்கலாம். மேலும், கனமழையால் வாகனத்தின் மீது மரம் விழுந்து சேதம் ஏற்படுவது மற்றொரு பொதுவான நிகழ்வாகும், குறிப்பாக மழைக்காலம் தொடங்கும் முன் பாலிசிதாரர்கள் மோட்டார் இன்சூரன்ஸ் ஆட்-ஆன்களை தேர்வு செய்ய வேண்டும்,” என்கிறார்.
அனைத்து ஆட்-ஆன்களையும் வாங்க வேண்டிய அவசியமில்லை, கார் உரிமையாளர்கள் தங்களுடைய தேவைகளுக்கு ஏற்றவற்றையும், அவர்கள் வசிக்கும் இடத்திற்கு ஏற்ப மிகவும் தேவைப்படும்வற்றையும் தேர்வு செய்யலாம்.
“வெள்ளம் அல்லது தண்ணீர் தேங்கக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த ஆட்-ஆனை தேர்வு செய்ய வேண்டும். எஞ்சின் பாதுகாப்பு ஆட்-ஆன், நீர் உட்செலுத்துதல், என்ஜின் செயலிழப்பு, ஹைட்ரோஸ்டேடிக் லாக் அல்லது எஞ்சின் ஆயில் கசிவு போன்றவற்றால் ஏற்படும் நிதிக் கஷ்டங்களிலிருந்து பாலிசிதாரரைப் பாதுகாக்கிறது. சேதமடைந்த எஞ்சின் பாகங்களை மாற்றுவதற்கான செலவையும் இது உள்ளடக்குகிறது.”
பயனுள்ள இன்சூரன்ஸ் ஆட்-ஆன்கள்:
24x7 சாலையோர ஹெல்ப் கவரேஜ்:
சில சமயங்களில் காரில் சென்று கொண்டிருக்கும் போது கனமழை காரணமாக நெடுஞ்சாலைகளில் கார் பழுதாகக்கூடும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், 24x7 சாலையோர உதவிக் காப்பீடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்த ஆட்-ஆன் கார் உரிமையாளர்கள் சரியான நேரத்தில் பழுதை சரி செய்வதற்கான உதவியையும், குறைவான செலவையும் தரும்.
ஜீரோ தேய்மானக் கவரேஜ்:
இந்த ஆட்-ஆன் பாலிசிதாரரை ஏறக்குறைய அனைத்து வகையான வாகனச் சேதங்களிலிருந்தும் பாதுகாக்கிறது. இது வாகனத்தின் அனைத்து கூறுகளையும் பாதுகாக்கிறது. அதேசமயம், டயர்கள், டியூப்கள் மற்றும் பேட்டரிகளுக்கு 50 சதவீத கவரேஜ் உள்ளது.
டெய்லி அலவன்ஸ் கவரேஜ்:
ஒருவேளை உங்களது காரை சர்வீஸுக்காக விட்டுள்ளீர்கள், அல்லது கார் இயங்க முடியாத அளவிற்கு பழுதாகிவிட்டது என்றால், தினசரி ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை மாற்று வாகனத்தை வாடகைக்கும் எடுக்கும் செலவவு வரை இந்த ஆட்-ஆன் கவர் செய்யும்.
அவசரகால ஹோட்டல் தங்குமிட கவரேஜ்:
மழைக்காலத்தில் கார் சாலைப் பயணத்தைத் திட்டமிடுபவர்களுக்கு பொருத்தமான காப்பீட்டுத் திட்டம். இந்த காப்பீட்டின் கீழ், பாலிசிதாரர்கள் கார் சம்பந்தப்பட்ட விபத்தின் காரணமாக அவசரகால தங்குமிடம் தேவைப்படும் பட்சத்தில், ஹோட்டல் அறை வாடகைக்கான அலவன்ஸைப் பெறுவார்கள்.
கன்சியூமபுல் கவரேஜ்:
இந்த ஆட்-ஆனின் கீழ், பாலிசிதாரர்கள் தங்கள் நட்டுகள், போல்ட்கள், கியர்கள் போன்றவற்றை பழுதுபார்க்கலாம். சில சமயங்களில், மழைநீர் தேங்கிய சாலைகளில் நிறைய வாகனம் ஓட்டினால், நட்டுகள், போல்ட்கள், கியர்கள் போன்றவை துருப்பிடித்துவிடும். இதற்கு பெரிய அளவில் செலவாகாது என்றாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது ஆயிரக்கணக்கில் ஆகலாம்.
டயர் ப்ரொடெக்ட் கவரேஜ்:
“வண்டி உருண்டோட அச்சாணி” தேவை என்பது போல் காரில் என்ன தான் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் இருந்தாலும், ஸ்மூத்தாக ட்ராவல் செய்ய சக்கரங்கள் தான் ஆதாரமாக உள்ளன. இந்த ஆட்-ஆனை உங்களுடைய இன்சூரன்ஸ் பாலிசியில் சேர்த்துக்கொண்டால், மழைக்காலத்தில் டயர்கள் தேய்வது, கிழிந்து போவது போன்ற பிரச்சனைகளின் போது ஆகும் லேபர் சார்ஜ், டயர் செலவுகள் ஈடுசெய்யும்.
தகவல் உதவி - மின்ட்
35 பைசா செலுத்தினால் ரூ.10 லட்சம் - ரயில் பயணக் காப்பீடு குறித்து அறிய வேண்டியவை!