Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ஃபேஸ்புக் மெசஞ்சரில் டெலீட் செய்த தகவல்களை மீட்பது எப்படி?

டெலீட் செய்த ஃபேஸ்புக் செய்திகளை மெசஞ்சரில் மீட்பதற்கான வழிகளை அறியுங்கள்...

ஃபேஸ்புக் மெசஞ்சரில் டெலீட் செய்த தகவல்களை மீட்பது எப்படி?

Wednesday October 21, 2020 , 3 min Read

முக்கியமான தகவல்களைக் கண்டறிய முடியாமல் திணறுவது சோதனையானது தான். ஆனால், இப்போது மேம்பட்ட தொழில்நுட்பம் மூலம் தகவல்களை மீட்பதற்கான வழி இருக்கிறது. ஃபேஸ்புக்கில் நண்பர்களுடனான முக்கிய உரையாடல்களை இழந்து தவிக்கும் அனுபவம் உள்ளவர் எனில் இந்த கட்டுரை உங்களுக்கானது தான்.


ஆண்ட்ராய்டு போனில், ஃபேஸ்புக் மெசஞ்சர் (Facebook Messenger) செய்திகளை கண்டறிந்து மீட்பதற்கான வழிகளை பார்க்கலாம். உங்கள் ஆண்ட்ராய்டு போனில் இருந்து, தொலைந்த அனைத்து செய்திகளையும் கண்டறிவதற்கான உள்ளார்ந்த வழிகள் மற்றும் சில நுணுக்கங்களை பார்க்கலாம்.


தகவல்களைக் கண்டறிவதற்கான சிறந்த தரவுகள் மீட்பு மென்பொருள் பற்றியும் பார்க்கலாம்.

ஃபேஸ்புக் மெசஞ்சர் வழியே தகவல்களை மீட்க வழி

ஃபேஸ்புக் மெஞ்சர் செயலியில் தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டிருந்தால், டெலீட் செய்த பேஸ்புக் செய்திகளை எளிதாக மீட்கலாம். இதே வழிமுறை:


  • உங்கள் போனில் பேஸ்புக் மெஞ்சரை திறந்து அண்மை உரையாடலுக்குச் செல்லவும்.
  • நீங்கள் ஏற்கனவே ஆவணப்படுத்தி வைத்திருக்கும் உரையாடலில் தேட தேடல் (சர்ச்) கட்டத்தில் கிளிக் செய்யவும்.  
  • உரையாடாலை கண்டறிந்தவுடன், அதை செலக்ட் செய்து, அதை ஆவணப்படுத்தலில் இருந்து விலக்க அன் ஆர்ச்சிவ் (unarchive) செய்யவும்.  


குறிப்பு:  இணையதள வடிவத்தை பயன்படுத்தினால், மெசேஜ்களுக்கு சென்று, மேலும் பகுதியை தேர்வு செய்து, ஆவணப்படுத்தப்பட்ட செய்திகளில் இருந்து ஃபேஸ்புக் செய்திகளை மீட்கலாம்.

செய்திகளை ஆவணப்படுத்துவது எப்படி?

ஃபேஸ்புஇக் மெசஞ்சரில் செய்திகளை எப்படி ஆவணப்படுத்துவது எனத்தெரியவில்லை எனில், அதற்கான வழிமுறைகள் இதோ:

  • உங்கள் போனில் ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியை திறக்கவும்.
  • அண்மை உரையாடலுக்குச்சென்று, ஆவணப்படுத்த உள்ள உரையாடலை தேர்வு செய்யவும்.
  • தேர்வு செய்தவுடன், நீண்ட நேரம் அழுத்தி, மூன்று கோடுகளை தேர்வு செய்து, ஆவணப்படுத்தும் வாய்ப்பை இயக்கவும்.


இதன்மூலம் தேர்வு செய்த உரையாடலை ஆவணப்படுத்தலாம். பின்னர் இதன் மூலம், டெலீட் செய்த செய்திகளை மீட்கலாம்.

டெலிட் செய்தவற்றை ஃபேஸ்புக் செட்டிங்கில் இருந்து மீட்கும் வழி

இப்போது செய்திகளை ஆவணப்படுத்துவதால், ஃபேஸ்புக் கணக்கில் இருந்து, தற்செயலாக டெலீட் செய்த செய்திகளை மீட்க முடியும். இதற்கு,

  • கம்ப்யூட்டர் அல்லது பிரவுசர் வழியே உங்கள் ஃபேஸ்புக் கணக்கில் நுழையவும்.  
  • செட்டிங்கிற்கு செல்லவும். > பொது கணக்கு செட்டிங்.
  • “உங்கள் ஃபேஸ்புக் தகவல்” வாய்ப்பை இடப்பக்கத்தில் இருந்து தேர்வு செய்யவும்.  
  • “தகவல்களை டவுண்லோடு செய்யவும்” வாய்ப்பை வலப்பக்கத்தில் இருந்து தேர்வு செய்யவும்.
  • இங்கு, ‘மெசேஜ்கள்’ வாய்ப்பை தேர்வு செய்து. கிரியேட் ஃபைல் பட்டனை கிள்க் செய்யவும்.  
  • இந்த பட்டனை கிளிக் செய்ததும், செயல்முறையை முடிக்க சிறிது நேரம் ஆகும்.
  • இது முடிந்தவுடன் ஃபைலை டவுண்லோடு செய்ய அறிவிக்கை வரும்.
  • இந்த அறிவிப்பை கிளிக் செய்து, டவுண்லோடு பட்டனை அழுத்த வேண்டும்.


இங்கு மேம்பட்ட பாதுகாப்பிற்காக, ஃபைலை டவுண்லோடு செய்ய பாஸ்வேர்டு கேட்கும். பாஸ்வேர்டை சமர்பித்தால் டவுண்லோடு ஆகும்.

பேஸ்புக்

கம்ப்யூட்டருடன் ஆண்ட்ராய்டு போனை இணைக்க

ஆண்ட்ராய்டு போனுடன், கம்ப்யூட்டரை இணைத்து டெலீட் செய்த செய்திகளை மீட்கலாம்.

ஆண்ட்ராய்டு போனை கம்ப்யூட்டருடன் கேபிள் மூலம் இணைத்து, டெலீட் செய்த ஃபேஸ்புக் செய்திகளை மீட்கலாம். இதற்கு,


  • ’SD Card’ அல்லது “இண்டர்னல் ஸ்டோரேஜ்” செல்லவும்.
  • ஆண்ட்ராய்டு > டேட்டா தேர்வு செய்யவும்.
  • இங்கு, “com.facebook.orca” போல்டரை தேர்வு செய்யவும்.
  • இப்போது  Cache > fb_temp செல்லவும்.
  • இங்கு, மீட்க வேண்டிய செய்திகளை காணவும், அதற்கான வழிமுறைகளை பின்பற்றவும்.

பிற செயலிகள்

டெலீட் செய்த ஃபேஸ்புக் செய்திகளை மீட்க உதவும் செயலிகள். இதற்கு மூன்றாம் தரப்பு மீட்பு மென்பொருள் ஆப்’களையும் பயன்படுத்தலாம். மேம்பட்ட அல்கோரிதம் உதவியுடன் இவை தகவல்களை மீட்டுத்தருகின்றன. இவை நேரத்தையும் மிச்சமாக்கும்.

இவை வழங்கும் அம்சங்கள்:

  • அனைத்து வகை தரவுகளையும் மீட்கலாம்.  
  • செய்திகள், வீடியோக்கள், கோப்புகளை மீட்கலாம்.
  • தரவுகளை மீட்கும் முன் அவற்றை முன்னோட்டம் பார்க்கலாம். செய்திகளை டெலீட் செய்வதா? மீட்பதா என தீர்மானிக்க இது உதவும்.
  • Windows, Mac, iOS, Android உள்ளிட்ட சாதனங்களில் செயல்படுகின்றன.
  • பயன்படுத்த மிகவும் எளிதானவை.


சமூக ஊடகங்கள் எளிதான தகவல் தொடர்புக்கு வழி செய்கின்றன. எனவே, தற்செயலாக டெலீட் செய்த தகவல்களை மீட்பதை அறிவது உதவியாக இருக்கும்.


ஆங்கில கட்டுரையாளர்: சந்திரசேகர் சவுத்ரி | தமிழில்-சைபர்சிம்மன்


பொறுப்பு துறப்பு: இது, யுவர்ஸ்டோரியின் மைஸ்டோரி மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் கட்டுரையின் கருத்துகள் அதை எழுதியவருடையவை, யுவர்ஸ்டோரியின் பார்வை அல்ல.