Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

வர்த்தக இணையதளம் உருவாக்க 5 சுலபமான வழிகள் இதோ!

உங்களுக்கு ஏன் வர்த்தக இணையதளம் அவசியம் என்பதற்கான காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

வர்த்தக இணையதளம் உருவாக்க 5 சுலபமான வழிகள் இதோ!

Monday April 12, 2021 , 2 min Read

டிஜிட்டல் யுகத்தில், இணையதளம் என்பது இன்றியமையாத தகவல் தொடர்பு வழியாக இருப்பதோடு. வர்த்தக நிறுவனங்களுக்கான தேவையாகவும் மாறியிருக்கிறது. மேலும், மேலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இணையம் மூலம் தங்கள் செயல்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில், வர்த்தக நிறுவனங்கள் தங்கள் இலக்கு வாடிக்கையாளர்களை அடைய மற்றும் வலுவான வாடிக்கையாளர் பரப்பை உண்டாக்கி கொள்ள இணையதளம் அவசியமாகும்.


போட்டியாளர்கள் மத்தியில் தனித்து நிற்க, வாடிக்கையாளர்களின் நீண்ட கால உறவை உருவாக்கிக் கொள்ள, உரையாடல் தன்மை மிக்க தகவல் தொடர்பு வழி தேவை. வெற்றிகரமான வர்த்தக இணையதளத்தை உருவாக்கிக் கொள்வதற்கான எளிய வழிகளை இங்கே பார்க்கலாம்.

Business site

வெற்றிகரமான வர்த்தக இணையதளத்தை உருவாக்கும் வழிகள்:

நோக்கம் மற்றும் இலக்குகள்

வர்த்தக இணையதளத்தை அமைப்பதன் முதல் படி, நோக்கம் மற்றும் இலக்குகளை இறுதி செய்வதாகும். இணையதளத்தில் இருந்து நீங்கள் எதிர்பார்ப்பது என்ன என தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். இதன் நோக்கம் தகவல்களை அளித்து, வாடிக்கையாளர்களை கவரவதா? அல்லது இணையதளம் மூலம் தயாரிப்புகளையும் விற்க விரும்புகிறீர்களா?

இணையதளத்திற்கான நோக்கத்தை இறுதி செய்ததும், உங்கள் தேவைக்கேற்ற இணையதளத்தை அமைப்பது எளிதானது.

ஆய்வு தேவை

நோக்கம் தெளிவான பிறகு, இணையதளம் அமைக்கும் முன் ஆய்வை மேற்கொள்வது அவசியம். கீவேர்டு ஆய்வு, போட்டியாளார்கள் அலசல், இணையதளத்தின் பயன்பாடு, வாடிக்கையாளர்கள் தன்மை ஆகிய அம்சங்களை பரிசீலிக்க வேண்டும். இவை எல்லாம் சந்தை ஆய்வு என கொள்ளப்படுகின்றன. எனவே இதை தவறவிடக்கூடாது. இல்லை எனில் வளங்களை வீணடிக்கும் நிலை உண்டாகலாம்.

உங்கள் இணையதளம்

இப்போது உங்களுக்கான இணையதளத்தை உருவாக்கலாம். இதை சொந்தமாக ஹோஸ்ட் செய்யலாம் அல்லது இதற்கான மூன்றாம் தரப்பு சேவையை நாடலாம். அதே போல வர்த்தக இணையதளத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம் அல்லது தொழில்முறை வடிவமைப்பாளர்களை நாடலாம். இணையதள வடிவமைப்பு மற்றும் கரு இந்த கட்டத்தில் தீர்மானிக்கப்பட வேண்டும். மேலும், இணையதளத்திற்கான பட்ஜெட்டிலும் கவனம் செலுத்த வேண்டும்.

Business site

இணையதள வீச்சு

இணையதளத்தை ஏற்ற முறையில் வடிவமைப்பது என்பது, தேடியந்திரங்கள் மூலம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையான அம்சங்களைக் கொண்டிருப்பதாகும். இதற்காக பொருத்தமான கிவேர்டுகள், புதிய உள்ளடக்கம் ஆகிய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும். தேடியந்திர மார்க்கெட்டிங் உத்தியிலும் உரிய கவனம் தேவை.

இணையதள அறிமுகம்

வர்த்தக இணையதளத்தை உருவாக்கிய உடன் அதை அறிமுகம் செய்வதற்கு முன் பரிசோதித்து பார்க்க வேண்டும். இணையதளத்தை முழுவதும் பார்வையிட்டு, அதில் உள்ள தகவல்களை சரி பார்க்க வேண்டும். இ-காமர்ஸ் தளம் எனில் விற்பனை செயல்முறை சீராக இருக்கிறதா என பார்க்க வேண்டும்.


சோதனையில் ஏதேனும் பிரச்சனைகள் தெரிந்தால் அவற்றை சரி செய்ய வேண்டும். இணைப்புகள் போன்றவற்றையும் சரி பார்க்க வேண்டும். இதன் பிறகு வர்த்தக இணையதளத்தை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களிடன் கொண்டு செல்ல வேண்டும்.


ஆங்கில கட்டுரையாளர்: சமோதீப் சிக்தர் | தமிழில்: சைபர் சிம்மன்


( பொறுப்பு துறப்பு: பயனாளிகள் பங்கேற்க வழி செய்து அவர்களின் குரல் கேட்கப்பட வாய்ப்பளிப்பதற்கான யுவர் ஸ்டோரியின் மைஸ்டோரி திட்டத்தின் கீழ் வெளியாகும் பயனர் கட்டுரை இது. இதில் உள்ள பார்வை மற்றும் கருத்துக்கள், கட்டுரையாளருடையவை, யுவர்ஸ்டோரியின் கருத்து அல்ல).