3 வருடத்தில், 9000 கூட்டுப் பணிஇடங்களை உருவாக்கி, முத்திரை பதித்துள்ள சென்னை நிறுவனம்!

24/7 இயங்கக்கூடிய கூட்டு பணி இடங்களை வாடகைக்குத் தரும் Workafella பெரும்பாலும் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது.

16th Dec 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

மூன்றே வருடத்தில், 9000த்திற்கும் மேலான கூட்டு பணிஇடங்களை உருவாக்கி, தனக்கென்று ஒரு முத்திரையை பதித்துள்ளது இந்த சென்னை நிறுவனம்.


2016ல் குர்பிந்தர் ராட்டா துவங்கிய 'Workafella' 'வொர்க்கஃபெல்லா’, மும்பை, பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத்தில் கோ-வர்கிங் பணியிடங்களை வழங்கி வருவதோடு, தனது விரிவாக்கத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுகிறது.


வீவொர்க் நிறுவனத்தின் துணை நிறுவனரும், முன்னால் சிஇஓ வுமான ஆடம் நியூமேன், ஒரு முறை தனது நிறுவன அதிகாரிகள் மூவரை உயரமான கட்டிடத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.


அங்கு கம்பி இல்லாத ஓரத்தில் நின்று கொண்டு அங்கு இருந்த பழைய பீர் பாட்டிலில் இருந்து பீர் அருந்த பணித்துள்ளார் என்று கூறுகிறார் ஏமி சோஸிக் அவரது “ஆடம் நியூமேன் அண்ட் தி ஆர்ட் ஆப் பெயிலிங் அப்“ என்ற  நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில்.


$47 பில்லியனில் இருந்து 9 மாதங்களில் வெறும் $7 பில்லியனுக்கு குறைந்த மதிப்பீடு, நிறுவனத்தை விட்டு வெளியேற $1.7 பில்லியன் பெற்ற ஆடம் நியூமேன் என Wework நிறுவனம் வியாபாரத்தைத் தொடங்கி மிகக் குறுகிய காலத்தில் விரிவடைந்து, வளர்ந்து, பின் சரிந்த கதை வொர்க்கஃபெல்லாவிற்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.

"லாபகரமாக ஒரு வியாபாரத்தை நடத்துவது தான் வெற்றி. வெறும் அதிக மதிப்பீடுகளை குறிவைப்பது மட்டுமே வெற்றி ஆகாது. லாபகரமாக வியாபாரம் நடக்கும் பொழுது நல்ல மதிப்பீடு தானாக வந்து சேரும்,” என்கிறார் Workafella-ன் நிறுவனர் குர்பிந்தர் ராட்டா.
Mr. Gurbindhar MD workafella.

ஆனால் வீவொர்க் சிக்கலில் இருந்து தான் அவர் பாடம் கற்க வேண்டும் என்பது இல்லை. 30 வருடத்திற்கும் மேலாக ராட்டா குழுமத்தில், உள்கட்டமைப்பு மற்றும் வீட்டுவசதி மேம்பாடு, விருந்தோம்பல், கோ-வர்கிங், ஆரோக்கியம் ஆகிய துறைகளில் அனுபவம் பெற்றவர் குர்பிந்தர்.


தற்போது அந்த அனுபவம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் பற்றிய தனது புரிதல் ஆகியவற்றை கொண்டு ’வொர்க்கஃபெல்லா’வை லாபகரமான ஒரு வியாபாரமாக மாற்றுவதில் முனைப்புடன் செயல்படுகிறார்.


தங்களது கோ-வொர்கிங் சென்டர்களில் போதிய அளவு லாபம் பார்க்காமல், அடுத்த புதிய இடத்தை தேடுவதில்லை என்பதில் தெளிவாக உள்ளது வொர்க்கஃபெல்லா.


Workafella-வின் நிதிநிலை பற்றி விரிக்காமல் குர்பிந்தர் கூறுவது,

தற்போது 9000 கூட்டுப் பணியிடங்களை சென்னை, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் மும்பையில் வழங்கி வருவதாகவும், மேலும் 6000 இடங்கள் கட்டுமானத்தில் உள்ளதாகவும் கூறுகிறார்.

Workafella தொடங்கிய கதை

ராட்டா நிறுவனத்தில், தான் பெற்ற அனுபவம் ரியல் எஸ்டேட் துறையை புரிந்து கொள்ள உதவியதாக கூறுகிறார் குர்பிந்தர்.

"அலுவலகங்களுக்கான ரியல் எஸ்டேட் மாறுதல்கள் அடைந்து வந்தன. முன்னர் நிறுவனங்கள் வெறும் கட்டிடங்கள் மட்டும் வேண்டும் என்றன. பின்னர் மற்ற சில வசதிகள் கேட்டன. பின்னர் அனைத்தும் பொருத்திய அலுவலகம் கேட்டனர்.  ஆனால் இப்போது எதிர் காலம் கோ–வொர்கிங்கில் உள்ளது,” என்கிறார்.

சீனாவை அடுத்து ஆசியாவிலேயே இந்தியாவில் தான் கோ-வொர்கிங் பணியிடங்களின் தேவை மிக அதிகமாக இருக்கின்றது.


பெருநகரங்களை அடுத்து சண்டிகர், அகமதாபாத், கொச்சி, இந்தூர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இரண்டாம் கட்ட நகரங்களிலும் கோ-வொர்கிங் பணி இடங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது நம் ஆராய்ச்சியின் படி  இந்த இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் 179 கோ-வொர்கிங் இடங்கள் இருக்கின்றன.


அந்த தேவையை அறிந்த குர்பிந்தர், ராட்டா நிறுவனத்திற்கு அதிக வருவாய் கொண்டு வரும் வகையில் அந்த துறையில் நுழைய நினைத்தார்.


ராட்டா நிறுவனத்தின் நிதியுதவியுடன் 2016ல் ’வொர்க்கஃபெல்லா’ சென்னையின் டிடிகே சாலையில் தனது முதல் அலுவலகத்தைத் துவங்கியது. அதன் வெற்றியைத் தொடர்ந்து பல தொழில்நுட்ப நிறுவனங்கள் சூழ்ந்து இருக்கும் பெருங்குடியில் இரண்டாவது ஒரு அலுவலகமும் திறந்தது.


இத்தகைய கோ-வொர்கிங்  வியாபாரத்திற்கு வங்கிகளின் ஆதரவும் பெரிய அளவில் கிடைத்தது.

"இது வரை நாங்கள் பங்குகள் எதுவும் அளிக்கவில்லை. இதுவரை வியாபாரத்தில் எந்த குறையும் இல்லை. ஆனாலும் மேலும் நிதி திரட்ட பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது," என்கிறார் குர்பிந்தர்.
 Workafella Coworking space

வியாபார மாதிரி

வொர்க்கஃபெல்லா தனது வாடிக்கையாளர்களுக்கு 24/7 இயங்கக்கூடிய பணியிடங்களை தகுந்த சூழலுடன் எந்த ஒரு மறைசெலவும் இல்லாமல் உருவாக்கித் தர முனைகிறது.


தனிப்பட்ட அலுவலகங்கள், பிரத்தியேக மேஜைகள் தேவைக்கு ஏற்ப வடிவமைக்க பட்ட இடங்கள், வர்ச்சுவல் அலுவலகம், சந்திப்பு அறைகள் ஆகியவை இவர்கள் சேவையில் அடங்கும்.

“இந்தியாவின் வேலைக் கலாச்சாரம், தனக்கு நன்கு பரிச்சயம் ஆனது என்கிறார் குர்பிந்தர். ஏர் கண்டிஷனிங், லாக்கர் வசதிகள், உணவு சேவை ஆகியவை சிறிய விஷயங்களாக இருந்தாலும், வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது,” என்கிறார்.

"எங்கள் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர், மற்ற தொழில்களுக்கு சேவை வழங்குவோர் தான்.  பெரும்பாலும் அவர்களுக்கு நிர்வாகத்தில் தான் சிக்கல்கள் இருக்கும். எனவே ஆட்கள் சேர்ப்பது மற்றும் நிர்வாகத்திலும் நாங்கள் உதவிகள் கொடுக்கத் துவங்கினோம்,” என்கிறார் அவர்.

                                                                                               

2018ல் வொர்க்கஃபெல்லா  சிஎப்ஓ சேவைகள், பையர் வால், சர்வர் அறை, கைரேகை மற்றும் முகம் சார்ந்த பாதுகாப்பு முறை ஆகியவற்றை நிறுவத் துவங்கினர்.

"சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் அதிக அளவு தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்கு சேவை வழங்கும் அலுவலகங்கள் இருப்பதால் நாங்கள் அங்கு கவனம் செலுத்தினோம். வழக்கமான வணிக முறையை உடைத்து 24 மணி நேரமும் இயங்கும் பணியிடங்களை வழங்கினோம்," என்கிறார் அவர்.

Workafellaவின் கட்டணங்கள் இரண்டு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது: வாடகைக்கு விடப்படும் அலுவலகம் இருக்கும் இடம் மற்றும் வாடிக்கையாளர்கள்.


"உதாரணம், மத்திய பெங்களூருவில் எங்கள் கட்டணங்கள் சற்று உயர்வாகவே இருக்கும். ஒரு இடத்திற்கு மாதத்திற்கு 14,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும். மற்ற இடங்களில் மாதத்திற்கு 11,000 அல்லது 12,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும்," என்று கூறுகிறார் குர்பிந்தர்.

 Workafella Hydrabad team

எதிர்காலத் திட்டங்கள்

துவக்க நாட்களில் சிறிய நிறுவனங்கள் மற்றும் புதிதாகத் துவங்கிய நிறுவனங்கள் தான் எங்களின் கோ வொர்கிங் பணியிடங்களை நாடினர். ஆனால் இன்று பெரிய மற்றும் நடுத்தர வியாபாரங்களும் எங்களின் மலிவான கட்டமைப்புகள் மற்றும் வியாபார வாய்ப்புகளைக் கண்டு எங்களிடம் வருகின்றனர்.


2020ல் 13 மில்லியன் மக்கள் கோ-வொர்கிங் பணியிடங்களில் இருந்து பணிபுரிவார்கள் என ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. பல நிறுவனங்கள் தங்கள் அலுவலக இலாகாவில் 10 சதவீதம் கோ-வொர்கிங் பணியிடங்களுக்காக ஒதுக்க முன்வருகிறார்கள்.


CoWrks, Awfis, 91Springboard, InstaOffice, ஆகிய நிறுவனங்கள் இந்த கோ-வொர்கிங் பணியிட  நன்மைகளை தங்களுக்கு சாதகமாக மாற்றி வருகின்றனர்.

"Workafella போன்ற மற்ற நிறுவனங்களும் கோ-வொர்கிங்  பணியிடங்களின் நன்மைகளை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு எடுத்துரைத்து வருகின்றனர். வரும் காலத்தில் பெரிய நிறுவனங்களும் கோ-வொர்கிங் பணியிடங்களுக்கு மாறி வருவதால், இந்த இடங்களில் நாங்கள் வழங்கும் சேவைகளும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு மாறி வருகிறது,” என்கிறார் அவர்.

பெரிய வாடிக்கையாளர்களை தரகர்கள் மூலம் அணுகுகிறார்கள், சிறிய வாடிக்கையாளர்களை வலைத்தளங்கள் மூலம் மார்க்கெட்டிங் செய்து கவருகின்றனர்.


ரியல் எஸ்டேட்டில் பல வருட அனுபவம் இருந்தாலும், சரியான விலைக்கு சரியான இடத்தை பிடிப்பது குர்பிந்தருக்கு சவாலாகவே உள்ளது.

"இது தான் எங்கள் வியாபாரத்தின் அடிப்படை, அதனால் சரியான இடத்திற்கு சரியான விலை அமைவது சவாலாக இருப்பதால், நாங்கள் எப்போதும் அடுத்த திட்டம் ஒன்றையும் தயாராக வைத்துக் கொண்டுதான் செயல்படுகிறோம்,” என்கிறார் குர்பிந்தர்.

வொர்க்கஃபெல்லாவின் திட்டம் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் இந்தியாவின் முதல் 10 அல்லது 15 நிறுவனங்களில் ஒன்றாக வளர வேண்டும் என்பது தான். விரைவில் இவர்கள் செயலி ஒன்றையும் வெளியிட உள்ளனர்.


தமிழில்: கெளதம் தவமணி 

How has the coronavirus outbreak disrupted your life? And how are you dealing with it? Write to us or send us a video with subject line 'Coronavirus Disruption' to editorial@yourstory.com

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India