Microsoft நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளப் பணியில் சேர்ந்த ஹைதராபாத் மாணவி!

தலைப்பு செய்திகளில் இடம்பிடித்த ஹைதராபாத் இளம்பெண்!
7 CLAPS
0

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளத் தொகுப்பைப் பெறும் வேலையைப் பெற்றுள்ளார். அவர் பெயர் தீப்தி நர்குட்டி.

அமெரிக்காவின் சியாட்டிலில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமையகத்தில் மென்பொருள் மேம்பாட்டு பொறியாளர் கிரேட் 2 பொறுப்பில் சில நாட்கள் முன் பதவியேற்றுள்ளார். ஹைதராபாத் போலீஸ் கமிஷனரேட்டில் தடயவியல் நிபுணராக பணியாற்றி வருபவர் வெங்கண்ணா தான் இவரின் தந்தை.

தீப்தி

தீப்தி, முதலில் ஹைதராபாத் உஸ்மானியா பொறியியல் கல்லூரியில் தனது பொறியில் படிப்பை முடித்து, 3 ஆண்டுகள் ஜே.பி. மோர்கன் நிறுவனத்தில் சாப்ட்வே இஞ்சினியராகப் பணியாற்றி வந்தார். அந்த சமயத்தில் உயர்கல்வி மீது ஆர்வம் வர, வேலையை உதறிவிட்டு புளோரிடா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் (கம்ப்யூட்டர்ஸ்) சேர்ந்துள்ளார்.

தீப்தி கேம்பஸ் இன்டெர்வியூவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தேர்வாகியுள்ளார். முன்னதாக, முதுகலைப் பட்டப்படிப்பை முடிக்கும் முன்பே அமெரிக்காவில் உள்ள AAA- மதிப்பிடப்பட்ட நிறுவனங்களிலிருந்து பல சலுகைகளைப் பெற்றார். அமேசான், கோல்ட்மேன் சாச்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து அவருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் தீப்தி மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தேர்வு செய்திருக்கிறார்.

புளோரிடா பல்கலைக்கழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 300 பேரில் தீப்தி மட்டுமே மிக உயர்ந்த வருடாந்திர சம்பளத்தைப் பெற்றதாக தி ஹான்ஸ் இந்தியாவில் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. இதற்கிடையே, எப்போதும் கோடிங் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வரும் தீப்தி,

"அன்றாட பிரச்சினைகளைத் தீர்க்க தொழில்நுட்பம் பெரிதும் உதவக்கூடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், இதன் மூலம் மக்களின் வாழ்க்கையை மாற்றுவதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்குகிறது," என்று கூறியிருக்கிறார்.

Latest

Updates from around the world