பாழடைந்த கட்டிடத்தை பழங்குடி மாணவர்களின் பயிற்சி மையமாக மாற்றிய ஐஏஎஸ் அதிகாரி!

By YS TEAM TAMIL|4th Sep 2020
இவர் ஐஏஎஸ் ஆக பதவி வகித்த மூன்று மாதங்களுக்குள், பழைய மற்றும் பாழடைந்த கட்டிடத்தை ஒரு அழகான கல்வி மையமாக மாற்றினார்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

எந்தவொரு வேலையின் வெற்றியும் அதன் நல்ல தொடக்கத்தினால் தீர்மானிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. நன்றாக சாதிக்க நிறைய ஆர்வமும், முயற்சியும் தேவை. நிறைய சாதிக்க விரும்பும் பலர், ஆர்வமின்மை காரணமாக அவர்களால் நினைத்த இடத்தை அடையமுடியாமல் பிறரை குறைக் கூறுவார்கள்.


இருப்பினும் சிவில் சர்வீஸ் அதிகாரி மனுஜ் ஜிண்டால் அத்தகைய நபர்களில் ஒருவர் அல்ல. அவரது அர்ப்பணிப்பு மற்றும் விருப்பத்தின் வலிமை குறித்து, இன்று அவரை பாராட்டாதவர்களே இல்லை எனும் அளவிறு சாதித்துள்ளார்.


அவர் ஐஏஎஸ் ஆக பதவி வகித்த மூன்று மாதங்களுக்குள், பழைய மற்றும் பாழடைந்த கட்டிடத்தை ஒரு அழகான கல்வி மையமாக மாற்றினார். இப்போது பழங்குடியினர் மற்றும் கீழ் வகுப்பை சார்ந்த மாணவர்களுக்கு அது கல்வி மையமாக செயல்பட்டு வருகிறது. அதாவது இங்கு பழங்குடி மாணவர்களுக்கு கைவினைப்பொருட்கள் செய்வது குறித்து கற்பிக்கப்படுகின்றன. இது சாதாரண விஷயமில்லை, ஏனெனில் இது கச்சிரோலியின் நக்சல் பாதிக்கப்பட்ட பகுதியில் நடந்த சம்பவம் ஆகும்.

Manuj

கச்சிரோலியின் பாமராகர் நகரில் உள்ள பழைய மற்றும் பாழடைந்த தாசில்தார் கட்டிடத்தை மனுஜ், பழங்குடி மாணவர்களுக்கான பயிற்சி மையமாக மாற்றினார். இது குறித்து மனுஜ் ட்வீட் செய்திருந்தார்.


மனுஜின் ட்வீட் உடன் பல புகைப்படங்களை வெளியிட்டு,

'நான் கட்சிரோலியின் பாம்ராகரில் 3 மாதமாக வேலை செய்து வருகிறேன். இங்கு அமைந்துள்ள ஒரு பாழடைந்த மற்றும் மிகப்பழைய தாசில்தார் கட்டிடம் காலியாக மூடி வைக்கப் பட்டிருந்தது. அதை பழங்குடி மாணவர்களுக்கு கலை மற்றும் கைவினைகளை செய்ய கற்பிப்பதற்கான புதிய பயிற்சி மையமாக மாற்றியுள்ளேன். இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். தற்போது, இங்கே ​​36 பி.வி.டி.ஜி (குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழு) மாணவர்கள் இங்கு பயிற்சி பெறுகிறார்கள்,” என்று பதிவிட்டார்.

ட்வீட்டில், கட்டிடத்தின் முந்தைய நிலை மற்றும் தற்போதுள்ள பயிற்சி மையமாக காட்சி அளிப்பது என இரண்டையும் பதிவிட்டிருந்தார்.


முந்தைய கட்டிடம் மிகவும் மோசமாக, இடிபாடுகள் உடன் காணப்பட்டது புகைப்படங்களில் தெளிவாகக் காணலாம். பின்னர் உள்ளூர் மக்களின் உதவியுடன் இது ஒரு அழகான பயிற்சி மையமாக மாற்றப்பட்டது. படங்களை பார்த்த பிறகு மனுஜ் ஜிண்டலை பலரும் பாராட்டுனார்கள்.


மனுஜ் ஜிண்டால்  நொய்டாவில் வசிப்பவர். 2017 ஆம் ஆண்டில் தனது மூன்றாவது முயற்சியில், சிவில் சர்வீஸ் ஆணையம் (யுபிஎஸ்சி) தேர்வில் வெற்றி பெற்றார். அவர் 53 வது இடத்தைப் பிடித்தார். இதற்கு முன்பு, அவர் என்.டி.ஏ தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.