Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

அனைத்து நிலப்பரப்புகளிலும் பயன்படுத்தும் ஊன்றுகோலை தயாரித்துள்ள ஐஐடி முன்னாள் மாணவர்!

Flexmo ஊன்றுகோல் தயாரிப்பானது பனி படர்ந்த பகுதி, உலர்ந்த பகுதி என எல்லா நிலப்பரப்புகளிலும் பயன்படுத்தக்கூடியதாகும். இதில் உள்ள கால் போன்ற வடிவமைப்பு சறுக்கும் அபாயமோ விழுந்துவிடும் பயமோ இன்றி எந்த வகையான நிலப்பரப்பிலும் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்கிறது.

அனைத்து நிலப்பரப்புகளிலும் பயன்படுத்தும் ஊன்றுகோலை தயாரித்துள்ள ஐஐடி முன்னாள் மாணவர்!

Wednesday June 26, 2019 , 5 min Read

ஸ்ரீனிவாஸ் அதெப்பு தெலுங்கானாவின் கோதாவரிகானி பகுதியைச் சேர்ந்தவர். இவர் ஐஐடி டெல்லியில் மெக்கானிக்கல் டிசைன் முதுநிலை பட்டப்படிப்பின் முதல் செமஸ்டர் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் கூடைப்பந்து விளையாடிக்கொண்டிருந்த இவரது நண்பருக்கு கணுக்காலில் காயமேற்பட்டது.

”வழக்கமான ஊன்றுகோலைப் பயன்படுத்துவதில் அவர் அதிக சிரமங்களை சந்தித்தார். மாடி ஏறுவது மிகவும் கடினமாக இருந்தது. ஊன்றுகோலைப் பிடித்துக்கொண்டு நடக்கமுடியாமல் அவதிப்பட்டார்,” என நினைவுகூர்ந்தார் 25 வயது ஸ்ரீனிவாஸ்.

இந்த தொழில்முனைவர் தனது நண்பருக்கு உதவ விரும்பினார் அத்துடன் பலர் சந்திக்கும் பிரச்சனைக்கு தீர்வு காணவும் விரும்பினார். ”ஊன்றுகோலின் முனையை கால் போன்று மாற்றியமைப்பது குறித்து தீவிரமாக சிந்தித்தேன். செயற்கை கால்களில் இருப்பது போன்ற வடிவமைப்பை பயன்படுத்தலாம் என எண்ணினேன். குறிப்பாக ஓடுபவர்களும் மலையேறுபவர்களும் பயன்படுத்துவது போன்று வடிவமைத்து அதை ஊன்றுகோலில் பொருத்தி சோதனை செய்ய நினைத்தேன்,” என்று நினைவுகூர்ந்தார்.

இதுவே இவரது கல்லூரி நண்பரான 28 வயது அர்விந்த் சுரேஷ் அம்பலபுழா உடன் இணைந்து 2017-ம் ஆண்டு ஃப்ளெக்ஸ்மோடிவ் (Flexmotiv) துவங்க ஊக்குவித்தது.

1

Flexmo ஊன்றுகோல் தயாரிப்பானது பனி படர்ந்த பகுதி, உலர்ந்த பகுதி என எல்லா நிலப்பரப்புகளிலும் பயன்படுத்தக்கூடியதாகும். இதில் உள்ள கால் போன்ற வடிவமைப்பு சறுக்கும் அபாயமோ விழுந்துவிடும் பயமோ இன்றி எந்த வகையான நிலப்பரப்பிலும் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்கிறது.

இந்த ஸ்டார்ட் அப் Foundation for Innovation and Technology Transfer என்கிற ஐஐடி டெல்லியின் இன்குபேஷன் மையத்தின் ஒரு பகுதியாகும். ஊன்றுகோல் வடிவமைப்பின் தொழில்நுட்பம் குறித்து அர்விந்த் கூறுகையில்,

“வழக்கமாக சந்தையில் கிடைக்கும் ஊன்றுகோல்களின் முனைப்பகுதி கடினமாக இருக்கும். இதில் சறுக்கிவிடுவதற்கான வாய்ப்பு அதிகம். Flexmo மனித பாதங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு அடி எடுத்து வைக்கும்போது பின்பகுதி (ஹீல் பகுதி) மேற்பரப்பை பிடித்துக்கொண்டு அதிர்வை குறைக்கும். முன்பகுதி (கால்விரல் பகுதி) கூடுதல் பிடிமானத்தை கொடுக்கிறது. இந்த அம்சங்கள் பயனருக்கு சறுக்காமல் நிலைத்தன்மையை வழங்குகிறது,” என்றார்.

தற்சமயம் Flexmotiv இந்தூரில் உள்ள ஒரு பார்ட்னருடன் இணைந்து உற்பத்தி தொழிற்சாலையை இயக்கி வருகிறது. முதல் கட்ட மருத்துவ ரீதியான சோதனை முடிவடைந்துள்ளது. இதுவரை இந்த தயாரிப்பை 120 பயனர்கள் சோதனை செய்துள்ளனர். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்தையில் அறிமுகமாக உள்ளது.

முயற்சியின் துவக்கம்

ஒரு சுவாரஸ்யமான சம்பவமே ஸ்ரீனிவாஸையும் அர்விந்தையும் இணைத்துள்ளது. ஆரம்பத்தில் அர்விந்த் ஐஐடியில் இணைய தேர்வாகவில்லை. எனினும் ஸ்ரீனிவாஸின் வழிகாட்டியான சுடிப்டோ முகர்ஜி என்கிற ஐஐடி டெல்லி பேராசிரியருக்கு அர்விந்தின் பணி பிடித்திருந்தால் பிராஜெக்ட் அசோசியேட்டாக நியமித்தார். அர்விந்த் இரண்டாவது முயற்சியில் ஐஐடியில் தேர்வானார்.

ஆனால் இதற்கு வெகு நாட்களுக்கு முன்பே அர்விந்த் ஏற்பாடு செய்து வந்த மலையேற்ற பயணத்தின்போது இருவரும் சந்தித்துள்ளனர். இவர்களது சந்திப்பு பல விதங்களில் தற்செயலாகவே நடந்துள்ளது. இருவரும் ஒரே ஆய்வகத்தைப் பகிர்ந்து கொண்டனர். இருவரும் முதல் முறை போட்டி ஒன்றிற்காக இணைந்து பணியாற்றிய போது குழுவாக சிறப்பாக செயல்படுவதை உணர்ந்தனர். அந்த சமயத்தில்தான் ஸ்ரீனிவாசின் ஊன்றுகோல் பிராஜெக்ட் குறித்து அர்விந்திற்கு தெரியவந்தது.

அந்த சமயத்தில் இருவரும் அந்த வளாகத்தில் Tech4Raj தரப்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பரத்தில்:

”சுகாதாரம் அல்லது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஏதோ ஒரு துறையில் உங்களது யோசனைகளை வெளிப்படுத்தி 50,000 ரூபாய் வெல்லுங்கள்,” என்று எழுதப்பட்டிருந்ததை நினைவுகூர்ந்தார்.

Tech4Raj நிகழ்வு INVENT என்கிற சமூக நிறுவனம் ஏற்பாடு செய்யும் நிகழ்வாகும். இந்த நிறுவனம் சர்வதேச மேம்பாட்டு துறை, யூகே மற்றும் Villgro ஆகியவற்றுடன் இணைந்து இந்திய அரசாங்கத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியதால் துவங்கப்பட்ட முயற்சியாகும்.

2

2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொழில்துறை ஆராய்ச்சி துறையின் மற்றுமொரு அறிவிப்பை இந்த நண்பர்கள் கண்டனர். இதில் வெற்றிகரமான தயாரிப்பை உருவாக்குபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என குறிப்பிட்டிருந்தது. இதற்கும் விண்ணப்பித்தனர். இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றனர்.

Flexmotiv நிறுவனத்தின் மூன்றாவது இணை நிறுவனர் 23 வயதே ஆன கிரீஷ் யாதவ். இவரும் ஐஐடி டெல்லி பிடெக் மாணவர். இவர் மெக்கானிக்கல் துறை பேராசிரியர் ஜிதேந்திரா கதாயத் மூலம் இருவருக்கும் அறிமுகமானார். கிரீஷ் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் Flexmotiv நிறுவனத்தில் இணைந்தார்.

தற்சமயம் இந்நிறுவனத்தில் தொழில்நுட்பம், உள்ளடக்கம் சார்ந்த இண்டெர்ன், மார்கெட்டிங் என எட்டு உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.

தயாரிப்பை உருவாக்குதல்

இவர்களிடம் இருந்த 1.5 லட்ச ரூபாயைக் கொண்டு 3டி பிரிண்டர் வாங்கி ஊன்றுகோலின் முன்வடிவத்தை உருவாக்கத் துவங்கினர். இந்த முன்வடிவத்தை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் இவர்களது தயாரிப்பை பாராட்டினர். அத்துடன் தங்களது கருத்துகளையும் குறிப்புகளையும் வழங்கினார்கள் என அர்விந்த் தெரிவித்தார்.

“நாங்கள் பணியைத் தொடர தீர்மானித்தோம். ஆனால் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் தயாரிப்பை முயற்சிக்க மக்கள் தயங்குவது இயல்புதான். ஏனெனில் சோதனை செய்யப்படாத புதிய தயாரிப்பினால் ஏற்கெனவே காயம்பட்டிருப்பவர்களுக்கு மேலும் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது,” என்று ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்.

அதிர்ஷ்ட்டவசமாக இவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் 15 வயதான இந்துகுமாரியை சந்தித்தனர். அவர் இந்த தயாரிப்பை சோதனை செய்ய முன்வந்தார். இவர் புற்றுநோய் சிகிச்சைக்காக பீஹாரில் இருந்து வந்திருந்தார். இவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு முழங்கால் வரை வெட்டியெடுக்கப்பட்டிருந்தது.

”அவர் வழக்கமான ஊன்றுகோலைப் பயன்படுத்தும்போது அவர் பல பிரச்சனைகளை சந்தித்தார். அதைப் பயன்படுத்தியபோது அவருக்கு சறுக்கியது. எனவே வாக்கர் பயன்படுத்த எண்ணியிருந்தார். எங்களது முன்வடிவத்தை ஒரு மாதம் பயன்படுத்திய பிறகு பல முக்கிய குறிப்புகளை எங்களுக்கு வழங்கினார். ஸ்பிரிங் தன்மை மிகவும் அதிகமாக இருப்பதாக தெரிவித்தார். பின்னர் நாங்கள் அதை சரிசெய்தோம்,” என்றார் அர்விந்த்.

ஒரு வாரம் பயன்படுத்திய பின்னர் இந்து வழக்கமான ஊன்றுகோல் பயன்படுத்துவதை நிறுத்திக்கொண்டார். 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் அவரிடம் முதல் முன்வடிவம் கொடுக்கப்பட்டது. மேம்படுத்தப்பட்ட தயாரிப்பு ஒரு மாதத்திற்கு பின்னர் ஜூலை மாதம் கொடுக்கப்பட்டது. இந்து கூறும்போது, “Flexmo ஊன்றுகோலின் முனையில் முன்புறம், பின்புறம் என இரண்டு ரப்பர் பிடிகள் இருப்பது அதன் சிறப்பம்சமாகும். ஒன்று நழுவினாலும் மற்றொன்று பிடிமானத்தை கொடுக்கிறது. அடுத்த அடியை எடுத்து வைப்பதற்கு என்னுடைய ஊன்றுகோலை உயர்த்தத் தேவையான அழுத்தத்தை எனக்குக் கொடுக்கிறது. இதனால் நடப்பது எளிதாகிறது,” என்றார்.

3

இந்தியாவில் கிடைக்கக்கூடிய வழக்கமான ஊன்றுகோல்கள் பெரும்பாலும் சீனா மற்றும் தாய்வான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்றார் ஸ்ரீனிவாஸ். இவை 1,200 ரூபாய் முதல் 1,400 வரை சில்லறை முறையில் விற்பனை செய்யப்படுகிறது. Karma, Vissco, Tynor போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் இவர்களது போட்டியாளர்களாகும். சில நிறுவனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் தயாரிப்புகளை இறக்குமதி செய்கின்றன என்றும் குறிப்பிட்டார். சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின்கீழ் ALIMCO என்கிற அரசு அமைப்பும் அடிப்படை ரக ஊன்றுகோலை தயாரிக்கிறது.

வழக்கமான ஊன்றுகோல்கள் இந்தியாவின் அனைத்து வகையான நிலப்பரப்பையும் கையாளக்கூடிய திறன்கொண்டதாக இருப்பதில்லை என்றும் ஸ்ரீனிவாஸ் குறிப்பிட்டார்.

"இந்த காரணங்களால் பெரும்பாலானோர் வாக்கர் அல்லது சக்கரநாற்காலிகள் பயன்பாட்டிற்கு மாறுகின்றனர். போலியோ பாதிக்கபட்ட நபராக இருந்தால் வழக்கமான ஊன்றுகோல் பயன்படுத்தும்போது அவர்களது மற்றொரு காலுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுவதால் அந்தக் கால் பலவீனமடைந்துவிடுகிறது,” என்றார்.
4

இந்த ஆண்டு சந்தையில் அறிமுகமாக உள்ள Flexmo 2,999 ரூபாய்க்கு கிடைக்கும். அரசு சாரா நிறுவனங்களுக்கு மிகவும் குறைந்த விலையில் கொடுக்கப்படும். ஆயுத படைகளுடன் இணைந்து செயல்படவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார் அர்விந்த்.

ஆகஸ்ட் மாதம் அரசு சாரா நிறுவனங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன் பிறகு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் மாதம் 3-ம் தேதி இந்த தயாரிப்பு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பின்னர் சில்லறை வர்த்தக சந்தைகளில் கிடைக்கும். இந்த ஸ்டார்ட் அப் டிசைனிற்கான தேசிய மற்றும் சர்வதேச காப்புரிமைகளுக்கு விண்ணப்பித்துள்ளது.

2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்நிறுவனர்கள் BIG (Biotechnology Ignition Grant) என்கிற அதன் முக்கிய திட்டத்திற்காக பயோடெக்னாலஜி தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சிலில் (BIRAC) விண்ணப்பித்தனர். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக வெற்றிகரமான BIG இன்னோவேட்டர்களுக்கு உதவித்தொகையாக 50 லட்ச ரூபாய் வரை அரசாங்கம் வழங்குகிறது. இந்தத் தொகை வணிக ரீதியாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் நிறைந்த ஆய்வு திட்டங்களுக்கு 18 மாத கால அவகாசத்துடன் வழங்கப்படுகிறது. Flexmotiv உதவித்தொகையை வென்றது.

”மேற்கொண்டு இரண்டு மாதங்கள் பணம் இல்லாமல் போயிருந்தால் எங்கள் நிறுவனத்தை மூடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்,” என்றார். அதன் பிறகு நிறுவனத்திற்கு மூன்று தனிப்பட்ட உதவித்தொகைகளுக்கான அனுமதி கிடைத்தது. இவை ஒவ்வொன்றும் 45 லட்ச ரூபாய் மதிப்புடையதாகும்,” என்றார்.

வருவாய் மற்றும் எதிர்கால திட்டம்

தயாரிப்பை அறிமுகப்படுத்திய உடன் வருவாய் வரத் துவங்கும் என Flexmotiv எதிர்ப்பார்க்கிறது.

”கார்ப்பரேட் சமூக பொறுப்பு திட்டங்கள் மூலம் 2,000-க்கும் அதிகமான ஊன்றுகோலுக்கு நிதி கிடைக்க உள்ளது. பயனாளிகளை அரசு சாரா நிறுவனங்கள் மூலம் கண்டறிய உள்ளோம். ஜெய்ப்பூரைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனம் ஒன்று வருடத்திற்கு 25,000 ஊன்றுகோல் வாங்க ஆர்வம் காட்டியுள்ளது,” என்றார் அர்விந்த்.
5

டெல்லியைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் கூடுதல் நிதி ஏதுமின்றி பதினெட்டு மாதங்களில் லாபமோ நஷ்டமோ இல்லாத நிலையை எட்ட நம்பிக்கையோடு உள்ளது. அனைத்தும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ஒன்பது மாதங்களில் இந்த நிலையை எட்டவும் வாய்ப்புள்ளது.

2017-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை Flexmotiv லாப நோக்கமற்ற நிறுவனமாகவே செயல்பட திட்டமிட்டிருந்தது. ஆனால் இவர்களது பேராசிரியர்களின் கட்டாயத்தை அடுத்து நிறுவனர்கள் இந்நிறுவனத்தை லாப நோக்கத்துடன் நடத்தத் தீர்மானித்தனர்.

”நீங்கள் மக்களுக்கு உதவ விரும்பினால் உங்கள் தயாரிப்பை அரசு சாரா நிறுவனங்களுக்கு மானிய விலைக்குக் கொடுங்கள். சில்லறை வர்த்தக சந்தையைப் பொறுத்தவரை மக்களால் செலவிட முடியும் என்று எங்களது பேராசிரியர்கள் தெரிவித்தனர்,” என்று அர்விந்த் நினைவுகூர்ந்தார்.

ஆங்கில கட்டுரையாளர்: ரமர்கோ செங்குப்தா | தமிழில்: ஸ்ரீவித்யா