'மறு பயன்பாடு ராக்கெட்' - விண்வெளி துறையில் இந்தியாவின் SpaceX ஆகப்போகும் சென்னை ஸ்டார்ட்-அப்!

By YS TEAM TAMIL
October 17, 2022, Updated on : Mon Oct 17 2022 09:01:31 GMT+0000
'மறு பயன்பாடு ராக்கெட்' - விண்வெளி துறையில் இந்தியாவின் SpaceX ஆகப்போகும் சென்னை ஸ்டார்ட்-அப்!
CeraTattva நிறுவனத்தின் புதுமையாக்கம். அதி தீவிர சூழல்களில் தாக்கு பிடிக்கும் திறன் கொண்ட பொருட்களை தயாரிப்பதில் உதவும். இது நாட்டின் விண்வெளி மற்றும் பாதுகாப்பு இலக்குகளில் உதவும்.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தின் ஒரு குளிர் நாளின் நன்பகலில் மதிய உணவுக்காக கணேஷ் பாபு சென்ற போது, ஒரு குடுவையில் அவர் விட்டுச்சென்ற ரசாயனம், இந்தியாவின் விண்வெளி கனவுக்கு உதவும் வகையில் அது அமையும் என்பதை அறிந்திருக்கவில்லை.


கணேஷ் பாபு, விஷேச தன்மை கொண்ட பொருள் வகைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அயர்சியால் இந்த முயற்சியை கைவிடுவதும் பின்னர் சவாலை ஏற்றுக்கொள்வதுமாக இருந்தார்.


இந்நிலையில் தான், அன்று மதிய உணவை முடித்துக்கொண்டு சென்னை ஐஐடி ஆய்வகத்திற்கு திரும்பிய போது அவர் பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை.

“இன்னொரு தோல்வி சோதனைக்கு பிறகு குடுவைகளை மீண்டும் கழுவ வேண்டும் என நினத்திருந்தேன்,” என்கிறார் CeraTattva InnoTech நிறுவனத்தின் சி.இ.ஓ மற்றும் நிறுவனர் கணேஷ்.  

ஆனால், அந்த குறிப்பிட்ட ரசாயன கலவை பலன் தந்திருப்பது கண்டு அவர் வியப்படைந்தார். அந்த குடுவையை அவர் கழுவினார் என்றாலும் அந்த சோதனையை மீண்டும் செய்து தனது கண்டுபிடிப்பபை உறுதி செய்து கொண்டார்.

விண்வெளி

இந்த சிறப்பு பொருள் வகைகளுக்கும் இந்தியாவின் விண்வெளி கனவுக்கும் என்ன தொடர்பு?


மிகவும் தனித்தன்மை வாய்ந்த ’preceramic precursors’ பொருள் வகையை கணேஷ் உருவாக்கியிருந்தார். அதி தீவிரமான சூழல்களை தாக்குப்பிடிக்கக் கூடிய தயாரிப்புகளை உருவாக்க இந்த பொருள் வகைகள் பயன்படும்.


இந்திய செலவு குறைந்த, செயல்திறன் மிக்க விண்வெளித் திட்டங்களுக்காக அறியப்பட்டிருந்தாலும், பணி முடிந்த பிறகு பூமிக்கு திரும்பி வந்து பயன்படுத்தக்கூடிய ராக்கெட்களை உருவாக்குவது சாத்தியமாகவில்லை. இது சாத்தியமானால், ராக்கெட் திட்டங்களின் செலவு மேலும் குறையும்.


கடந்த மாதம் தான் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத், இந்தியா உலகிற்காக மீண்டும் பயன்படுத்தும் ராக்கெட்களை உருவாக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.


நம்முடைய காற்று மண்டலத்தில் மீண்டும் நுழையக்கூடிய ராக்கெட்களை உருவாக்குவதில் உள்ள மிகப்பெரிய சவால், அவை மிக அதிக வெப்பத்தை தாங்கும் நிலை கொண்டிருக்க வேண்டும் என்பது தான்.

விண்

இங்கு தான் கணேஷ் உருவாக்கிய பிரிசெராமிக் பொருள் வருகிறது. இந்த தனித்தன்மை வாய்ந்த ரசாயன கலவை, திரவ நிலை பாலிமர்களில் இருந்து உருவாக்கப்பட்டவை. திட பாலிமர்களில் இருந்து உருவாகும் பொருளை விட இவை மூன்று சாதகங்கள் கொண்டவை.

முதலில் இதன் தயாரிப்பு செலவு குறைவு. திட தொழில்நுட்பத்தில் சிலிகான் கார்பைடு செராமிக்கை உருவாக்க, 2000 டிகிரி வெப்பம் தேவை. இதை பாலிமர் தொழில்நுட்பத்தில் உருவாக்க 1300 டிகிரி வெப்பம் போதுமானது என்கிறார் கணேஷ்.

இரண்டாவதாக, ராக்கெட்டில் பயன்படுத்தப்படுவது போன்ற சிக்கலான வடிவங்களை செய்வது, திட தொழில்நுட்பத்தில் சிக்கலானது. மூன்றாவதாக, திரவ நுட்பம் போல, இந்த நுட்பம் சீரான தன்மையை தக்க வைத்துக்கொள்வதில்லை. சுருக்கமாக சொல்வது என்றால், இந்த பொருள் தரம் மிக சீரானது. இந்த அம்சங்கள் தான், பிரிசெராமிக் பொருளுக்கு விண்வெளி திட்டத்திற்கு ஏற்ற தன்மையை அளிக்கிறது. பாதுகாப்புத் துறையிலும் இவை பயன்படுகின்றன.


இந்த கண்டுபிடிப்பு மூலம், Ceratattva இந்தியாவில் சிலிக்கான் அல்லாத, ஆக்சைடு சாராத பிரிசெராமிக் பிரிகர்சர்களை தயாரிக்கும் திறன் கொண்ட ஒரே ஸ்டார்ட் அப் மற்றும் தனியார் நிறுவனமாக விளங்குகிறது என்கிறார் கணேஷ்.  


சிலிக்கான் அல்லாத, ஆக்சைடு சாராத தன்மையே, இந்த பொருளுக்கு தீவிரமான சூழலை தாங்கும் திறன் அளிக்கிறது.

“ஆக்சைடு சாராத, சிலிக்கான் அல்லாத பிரிகர்சர்கள் மிகவும் செலவு மிக்கவை என்கிறார் CeraTattva முதன்மை ஆலோசகர் மற்றும் இணை நிறுவனர் ரவிகுமார். பெரிய அளவில் நிதி வசதி இல்லாத பட்சத்தில், இந்த திட்டத்தில் யாரும் பணியாற்றுவதில்லை. ஏனெனில், இதற்கு மிகுந்த உள்கட்டமைப்பு வசதி தேவை,” என்கிறார்.

Preceramic

தனித்தன்மை வாய்ந்த பிரிசெராமிக் பிரிகர்சர்களை உருவாக்கும் திறனை CeraTattva பெற்றிருப்பது முக்கியமானது. இந்த பொருள் விமானத்துறை மற்றும் பாதுகாப்புத் துறைகளில் பயன்படக்கூடியது.

விண்

இஸ்ரோ மற்றும் பாதுகாப்பு ஆய்வு அமைப்பு ஆகியவை தற்போது இந்த பொருளை தயாரிக்கும் திறன் கொண்டுள்ளன.

”ஆக்சைடு சாராத பிரிகர்சர்களை சிலிக்கான் அல்லாத வகையில் தயாரிக்கும் திறனை CeraTattva பெற்றிருப்பது உற்சாகம் அளிப்பதாக,” கணேஷ் கூறுகிறார்.

இந்த பொருளை தொழில் சூழலில் இன்னுமும் இக்குழு பரிசோதிக்கவில்லை என்றாலும், இதன் செயலாக்கத்தில் மிகுந்த நம்பிகை கொண்டுள்ளது.

“1500 டிகிரி வெப்பத்திற்கு மேல் சோதனை செய்யும் ஆற்றல் எங்களிடம் இல்லை. இதற்காக இஸ்ரோ மற்றும் டி.ஆர்.டி.ஓ அமைப்புகளை சார்ந்திருக்கிறோம்,” என்கிறார் கணேஷ்.

நாசா போன்ற அமைப்புகள் வெளிநாடுகளில் தீவிர சோதனைக்கு பிறகு பிரிகர்சர்களை அங்கீகரித்துள்ளன என்கிறார்.

“இதை பாலிமர் நுட்பம் சார்ந்து உருவாக்கியிருப்பதால், இது அதிக வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டிருக்கிறது,” என்கிறார் கணேஷ்.

பாலிமர் சார்ந்த செராமிக் பொருட்களுக்கு மிகுந்த பயன்பாடு இருப்பதாக இந்திய அறிவியல் கழகத்தின் மெட்டிரியல் அறிவியல் டீன் விக்ரம் ஜெயராமன் கூறுகிறார். இவற்றை பயன்படுத்துவதற்கான பொருளாதார வழிகளைக் கண்டறிவது தான் இந்த ஸ்டார்ட் அப்பிற்கான சவால், என்கிறார்.


எனினும், இந்த பொருள் வகை தரமானதாக இருந்தால் செலவு இரண்டாம்பட்சம் தான் என்றும் சொல்கிறார்.

நீண்ட பயணம்

Preceramic precursors-களை உருவாக்குவதில் முன்னேற்றம் திடிரென சாத்தியமாகிவிடவில்லை. இருபது ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட பயணம் இதன் பின்னே இருக்கிறது.


பேராசிரியர் ரவி, ஜெர்மனியில் முனைவர் பட்ட ஆய்விற்காக சென்றிருந்த 2001 முதல் பிரிகர்சர்கள் சார்ந்த செராமிக்ஸ் பற்றி அறிந்திருந்தார்.

“நான் பணியாற்றிய ஆய்வகம் இந்தத் துறையில் முன்னோடியாக இருந்தது. மகத்தான செயல்பாடுகளை கொண்டிருந்தது,” என்கிறார்.

முனைவர் பட்டத்தின் போது மட்டும் அதன் பிறகான பணிகளில் ரசாயனம், தெர்மோடைனமிக்ஸ், மெட்டிரியல் அறிவியல் மற்றும் பொறியியல் ஆகிய துறைகளின் நிபுணத்துவம் இந்த துறைக்கு தேவை என உணர்ந்து கொண்டார்.


இதன் காரணமாகவே முனைவர் பட்டம் பெற்ற பிறகு இந்தியா திரும்பியதும் இத்துறை தொடர்பான பணிகளில் ஈடுபடுவது அவருக்கு கடினமாக இருந்தது. ஐஐடி சென்னையில், பிரிகர்சர்கள் சார்ந்த செராமிக்ஸ் ஆய்வகத்தை அமைக்க அவருக்கு ஐந்தாண்டுகள் தேவைப்பட்டது.

விண்

“மெடாலுர்ஜி துறையில் இருந்த வந்தவர்கள் யாரும் வேதியல் வல்லுனர்களாக இருக்கவில்லை. இந்தத் துறை பொருட்கள் மற்றும் ரசாயனம் சார்ந்ததாக இருந்தது. பொறியியல் பின்னர் இணைந்தது என்கிறார் ரவி. இதன் காரணமாக, துவக்கத்தில் செராமிக்ஸ் சார்ந்த ஆய்விற்கு விக்ரம் சராபாய் விண்வெளி மையத்துடன் இணைந்து செயல்பட்டார்.

“கணேஷ் இணைந்த பிறகு நிறுவனம் துவங்கும் என் நம்பிக்கை அதிகரித்தது. அவர் பொருள் வகைகள்- ரசாயனம் அனுபவம் கொண்டிருந்தார். இதே துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி இருந்தார்,” என்கிறார் அவர்.

பாலிமர் துறையில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய பிறகு 2018ல் கணேஷ் இக்குழுவில் இணைந்தார். அதற்கு முன் அவர் பாலிமர் சார்ந்த செராமிக்சில் முனைவர் ஆய்வு மேற்கொண்டிருந்தார்.

சரியான திசை

கனேஷ், ரவி, ரகுநாத் சர்மா, அபா பார்தி ஆகியோரால் நிறுவப்பட்ட While CeraTattva பெரிய அளவில் பிரிசெராமிக் பிரிகர்சர்கள் தயாரிக்கும் நிலையில் உள்ளதோடு, centrifugal  நுட்பத்தில் இழைகள் தயாரிக்கும் இயந்திரத்தையும் வடிவமைத்துள்ளது.


பெருந்தொற்று காலத்தில் இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டது. இதற்கு நிறைய புதுமைகள் தேவைப்பட்டன. ஆய்வகங்கள் மற்றும் இயந்திரங்கள் வசதி இல்லாதது தான் காரணம்.

“வீட்டில் தண்ணீர் பம்ப் இருந்தது. அதிலிருந்து மோட்டாரை அகற்றினேன். மேலும் சில பாத்திரங்களை எடுத்து, அவற்றை பாழாக்கி, இழைகளை செய்வதற்கான இயந்திரத்தை உருவாக்கினேன்,” என்கிறார் கணேஷ். இந்த குளறுபடிகளுக்காக அம்மாவிடம் திட்டுகள் வாங்கியதை நினைவு கூறுகிறார்.

ரசாயனங்கள் கிடைக்காததால், கணேஷ் இழைகளை சுற்ற உருகிய சர்க்கரையை பயன்படுத்தினார். இந்த செயல்முறைக்கான வீடியோவை ரவிக்கு அனுப்பி வைத்தார். இதன் மூலம் ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்தப்படும் நுண் இழைகளை தயாரிக்க முடியும் என உணர்த்தினார்.

“நான் உருவாக்கிய இயந்திரம் மற்றும் ரசாயனம் கொண்டு இந்த செயல்முறையை பரிசோதிக்க ஐஐடி ஆய்வகத்தை பயன்படுத்த லாக்டவுன் காலத்தில் பேராசிரியர் ரவி சிறப்பு அனுமதி பெற்றுத்தந்தார்,” என்கிறார் கணேஷ். இது சரியாக செயல்பட்டது. பின்னர் ஒரு லட்சம் செலவு செய்து முன்னோட்ட மாதிரியை உருவாக்கினார்.

பரிசோதனையில் உறுதியான பிறகு கணேஷ், ரவி மற்றும் ரகுநாத் 2021 அக்டோபரில் அல்ட்ராஸ்பின்னர் (Ultraspinner) எனும் இந்த சாதனத்திற்கு காப்புரிமை பெற்றனர்.

“தற்போதுள்ள தொழில்நுட்பத்தைவிட அல்ட்ராஸ்பின்னரில் செயல்முறை திறன் ஆயிரம் மடங்காக இருந்தது. ஒரு மணி நேரத்தில் இது 240 கிராம் இழைகளை உருவாக்கியது. ஒரு கிராம் இழைக்கு 9.2 வாட் மின்சாரம் தான் தேவைப்பட்டது,” என்கிறார் ரகுநாத்.

மேலும், அல்ட்ராஸ்பின்னர் செயல்பாட்டிற்கு அதிக வோல்டேஜ் தேவையில்லை. இது பாதுகாப்பானது, சமையலறையில் பிலண்டர் அல்லது பிரிட்ஜி போன்ற எந்த ஒரு சாதனத்துடனும் எளிதாக பொருத்தலாம் என்கிறார் அபா.


இந்த சாதனத்தை ரூ.10 லட்சத்திற்கு விற்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சந்தையில் உள்ள எலக்ட்ரோஸ்பின்னர் ரூ.12 லட்சம் விலை கொண்டது.

புதுமையாக்க பலன்கள்

நிறுவன புதுமையாக்கத்தின் பல வித பயன்களில், மறு பயன்பாடு ராக்கெட்களில் இதன் பயன்பாடு குறித்து நிறுவனம் உற்சாகம் அடைகிறது.

“விண்வெளி செயல்பாட்டில் மீண்டும் காற்று மண்டலத்தில் நுழைவதே முக்கியமானதாக, கடினமானதாக இருக்கிறது. ஏனெனில் ஏவுவாகனத்தின் பொருட்கள் அதி தீவிர எதிர்வினைகளால் பாதிக்கப்படலாம்,” என்கிறார் ரகுநாத்.

அதிக வெப்பத்திறன் கொண்ட செராமிக்ஸ், அவற்றின் இயந்திர ஆற்றல் மற்றும் ரசாயன பண்புகள் காரணமாக, 2000 முதல் 3100 டிகிரி வரை வெப்ப வரம்பை உயர்த்தலாம் என்கிறார் ரகுநாத்.

CeraTattva Innotech

இந்த ஸ்டார்ட் அப்பிடம் இருந்து ஆக்சைடு சாராத சிலிக்கான் அல்லது செராமிக்கை வாங்க இஸ்ரோ ஆர்வம் தெரிவித்துள்ளது. இது மிகப்பெரிய வாய்ப்பு எனிகிறார் ரவி. ஏனெனில் இந்த பொருளை வழங்கக் கூடிய வேறு வெண்டர்கள் இல்லை என்கிறார்.

“இந்த பொருட்களின் முக்கியத் தன்மை காரணமாக இந்தியாவுக்கு வெளியே உள்ள யாரும் இதை தயாரித்தாலும் இந்தியாவுக்கு தர மாட்டார்கள் என்கிறார் ரவி. இந்தப் பிரிவில் இந்தியா தற்சார்பு அடைய உதவு முடியும்,” என்கிறார்.

இஸ்ரோ இந்த நுட்பங்களை பரிசீலிப்பது முக்கியமானது என்கிறார் பேராசிரியர் விக்ரம்.

“இஸ்ரோ இதன் மூலம் இறுதி பொருளை பெறுவதில் வெற்றி பெறுகிறதா என்பது இப்போது முக்கியம் இல்லை. இந்த பொருட்களின் பயன்பாடு தொடர்பான செயல்முறையில் அவர்கள் ஈடுபாடு காட்டுவது முக்கியமானது என்கிறார்.

எதிர்காலம்

ஐஐடி சென்னை இன்குபேஷன் மையத்திடம் இருந்து பத்து லட்ச ரூபாய் விதை நிதி பெற்றுள்ள CeraTattva பெரிய அளவிலான உற்பத்தி வசதி அமைக்க மேலும் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு முதலீட்டாளர்களுடனும் பேசி வருகிறது.


நீண்ட செராமிக் இழைகள் மற்றும் கம்பிகள் தயாரிப்பதற்கான தனித்தன்மை வாய்ந்த செயல்முறை மற்றும் தொழில்நுட்பம், ஹைபர்சானிக் ஏவுகனை உள்ளிட்டவற்றில் இந்தியாவுக்கு சாதகமாக அமையும் என்கிறார் ரவி.

“இந்தியா தற்சார்பு பெற வேண்டும் என்றால் இதில் தான் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறும் ரவி, ஸ்டார்ட் அப்கள் பொதுவாக பொருள் வகை உருவாக்கத்தில் ஈடுபடுவதில்லை. நாங்கள் வெற்றி பெற்றால் மேலும் பல ஸ்டார்ட் அப்கள் இதில் ஈடுபடும் என்கிறார்.

ஆங்கிலத்தில்: வித்யா சிவராமகிருஷ்ணன் | தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan