சென்னை ஐஐடி பிலேஸ்மண்ட்: முதல் அமர்வில் 102 வேலை வாய்ப்புகள்...

சென்னை ஐஐடியில் நடைப்பெற்ற இந்த ஆண்டு பிலேஸ்மண்டின், முதல் அமர்வில், கடந்த ஆண்டை மிஞ்சும் வகையில் 20 நிறுவனங்கள் 102 வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன.

3rd Dec 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

சென்னை ஐஐடி வளாகத்தில் இந்த ஆண்டு மாணவர்களுக்கான பிலேஸ்மண்ட் வாய்ப்பில் முதல் கட்ட முதல் நாள் அமர்வில் 20 நிறுவனங்கள் 102 வேலைவாய்ப்புகளை ழங்கியுள்ளன. இவற்றில் நான்கு சர்வதேச வேலைவாய்ப்புகளும் அடங்கும்.

iit

சென்னை ஐஐடியில் மாணவர்கள் வேலைவாய்ப்புக்கான பிலேஸ்மண்ட் நேர்காணல் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 1ம் தேதி துவங்கி 8ம் தேதி வரை நடைபெறும் முதல் கட்ட பிலேஸ்மண்டில், முதல் நாள் அமர்வின் போது, 20 நிறுவனங்கள் 102 வேலை வாய்ப்புகளை வழங்கின. இதில் 4 சர்வதேச வேலைவாய்ப்புகளும் அடங்கும்.

கடந்த ஆண்டு முதல் கட்ட பிலேஸ்மண்டின் முதல் அமர்வின் போது 19 நிறுவனங்கள் 85 வேலைவாய்ப்புகளை வழங்கின என்பது குறிப்பிடத்தக்கது என்று ஐஐடி சென்னை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

முதல் நாள் அமர்வு நேர்காணலில், மைக்ரோசாப்ட், கோல்ட்மன் சாக்ஸ், பாஸ்டன் கன்சல்டிங் குழுமம் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன.

“இந்த ஆண்டு பிலேஸ்மண்ட் நேர்காணலில், கடந்த ஆண்டை விட அதிக வேலைவாய்ப்புகள் சாத்தியமாகியுள்ளன. அடுத்த கட்ட பிலேஸ்மண்டிலும் இந்த போக்கு தொடரும் என எதிர்பார்க்கிறோம். கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் கன்சல்டிங் பிரிவுகளில் அதிக வாய்ப்புகள் வந்தன,” என்று ஐஐடி சென்னை, பயிற்சி மற்றும் பிலேஸ்மண்ட் ஆலோசகர்கள், பேராசிரியர் மனு சந்தானம் பேராசிரியர் சி.எஸ்.சங்கர் ராம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் 20 வேலைவாய்ப்புகளையும், கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனம் 11 வாய்புகளையும், குவால்கம் நிறுவனம் 9 வாய்ப்புகளையும் வழங்கியுள்ளன. இஸ்ரோ அமைப்பு ஆறு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது.


இந்த ஆண்டு பல்வேறு பிரிவுகளில் 1,334 மாணவர்கள் பிலேஸ்மண்டிற்கு பதிவு செய்து கொண்டனர். முதல் கட்ட நிகழ்வில் பங்கேற்க 227 நிறுவனங்கள் பதிவு செய்து கொண்டுள்ளன. இந்நிறுவனங்கள் 441 வேலைவாய்ப்புகளுக்காக மாணவர்களைத் தேர்வு செய்கின்றன.


மேலும் 57 ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் பிலேஸ்மண்டில் பங்கேற்க உள்ளன.

’பிலேஸ்மண்டில் வெற்றி பெற, கவனம் மற்றும் தயாரிப்பு முக்கியம்,” என்று இந்த நேர்காணலில் பங்கேற்ற ஐந்தாம் ஆண்டு மாணவர் ரவி கத்ரி கூறினார்.

சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் பணி வாய்ப்பை பெற்ற, நான்காம் ஆண்டு மாணவர் பட்டேல் கோவிந்த், மூன்றாம் ஆண்டில் இருந்தே இதற்காக தயாரிப்பு பணிகளை துவங்கிவிட்டதாகக் கூறினார்.


தொகுப்பு: சைபர்சிம்மன்

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India